Friday, August 31, 2007

நம் மதிப்பு - கதை


ஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.

அப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.

அப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.

அப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.

அது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்

10 comments:

PAISAPOWER said...

மெய்யான மெய்....அவந்திகா

இதை ஒவ்வொருத்தரும் உணர்ந்தாலே பாதி பிரச்சினைகள் காணாம போய்டும்....ம்ம்ம்ம்ம்ம்

PAISAPOWER said...

ஹி..ஹி...வேற ஐடி..ல வந்துட்டேன்...முந்தைய பின்னூட்டத்தை எழுதியவன் பங்காளி என்பதை உறுதிப்படுத்த இந்த பின்னூட்டம்....

(டோண்டு கோவிப்பாரா என்ன?...ஹி..ஹி..)

Avanthika said...

ஹை அண்ணா

பைசா பத்தி எழுதனதுனால இந்த ஐடில வந்துட்டீங்களா?...:-))

Anonymous said...

ஓஹ்ஹ்...

அப்படியும் வச்சிக்கலாம்ல...அது நம்மோட ஒரே ஒரு இங்கிலிபீஸ் பதிவு....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த மாதிரி நல்ல நல்ல கதையெல்லாம் எங்க இருந்து பிடிக்கற அவந்தி...

காட்டாறு said...

சரியா சொன்ன அவந்தி. ஆனாப் பாரு நம்மோட மதிப்பு நமக்கு சரிவர கணிக்க தெரியாததால தான், பிறர் சொல்லுவதற்கு ஏற்றார்போல் அப்படி தான் நாமோ, இல்லை இப்படியோ என தடுமாறுகிறோம். அதனால தான் பிறர் அவமானப்படுத்தினாலோ, உதாசீனப்படுத்தினாலோ நாம சோர்ந்து போறோம்.

Anonymous said...

அவந்திகா
arumai-yana kathai.. nandri

Chandravathanaa said...

நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க,

அவந்திகா
நல்ல படிப்பினையான கதைகள் .
நன்றி.

மங்களூர் சிவா said...

'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுன்டோ'ன்னு சும்மாவா சொன்னாங்க?

மங்களூர் சிவா

அபி அப்பா said...

நல்ல கதை அவந்தி! எனக்கு இப்போதைக்கு தேஎவையான கதை! நன்றி!