Thursday, August 30, 2007

வெற்றியும் தோல்வியும் -பீர்பால் கதை


பீர்பால் கிட்ட எப்பவும் தோத்துட்டே இருந்த அக்பர், ஒரு நாள் எப்படியாவது பீர்பால முட்டாள ஆக்கி தோக்கடிக்கனும்னு நினச்சார். குறுக்குவழியில பீர்பால தோற்கடிக்க நினச்சு மாளிகையில இருக்குற எல்லார்த்தையும் வர சொன்னார்.

ஒரு குளத்து கிட்ட போய் இப்ப எல்லாரும் குளத்துகுள்ள குதிச்சு வெளியே வர்ரப்போ ஒரு முட்டை எடுத்துட்டு வரனும்னு உத்தரவு போட்டார். முதலிலேயே பீர்பால் தவிர மற்ற எல்லார் கையிலேயும் ஒரு முட்டைய குடுத்து வச்சிறுந்தார். அதனால அவங்க குளத்தில் இருந்து வெளியே வர்ரப்போ கையில முட்டை எடுத்துட்டு வந்தாங்க.

குளத்தில் இருந்து வெளியே வந்த எல்லார் கையிலேயும் முட்டை இருக்குறத பார்த்த பீர்பார்லுக்கு அக்பர் தான் எதோ பண்றார்னு புரிஞ்சு போச்சு. அவரும் குளத்துல குதிச்சு வெளியே வந்ததும் மாளிகைக்குள்ள சேவல் மாதிரி பலமா கத்திட்டே போனார்.

அக்பருக்கு பயங்கர கோவம்.
''என்ன பீர்பால், எதுக்கு இப்படி கத்தறே, குளத்துக்குள்ள குதிச்சவுங்க எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துட்டாங்க, உன்னோட முட்டை எங்கே'' அப்படீன்னு கேட்டார்.

அதுக்கு பீர்பால் '' மன்னா! கோழி தான முட்டை போடும், நான் சேவல். குளத்துல குதிச்ச கோழிகள் எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துடுச்சு. ஆனா நான் சேவல்ங்குறதுனால முட்டை கிடைக்கலை'' ன்னு சொன்னார்.

அக்பருக்கு எப்பவும் போல நோஸ் கட். மாளிகைல இருந்தவுங்களுக்கும் இந்த அக்பர் பண்ணின கூத்துனால நம்மையும் கோழின்னு சொல்லிட்டாரே ன்னு அவமானமா போச்சு.

பீர்பால் சொன்னார் " ஜெயிக்கிறது பெரிசு இல்ல எப்படி ஜெயிக்கிறோங்கிறது தான் பெருசு. தோக்கறதும் தப்பு இல்ல, தோல்வியிலும் ஒரு மரியாதை இருக்கனும்னு சொன்னார்"

6 comments:

ஜெகதீசன் said...

அவந்திகா,
நல்ல கதை... வாழ்த்துக்கள்

ஒரு குட்டு:
"தோழ்வி" இல்லை "தோல்வி"

அன்புடன்
ஜெகதீசன்

பங்காளி... said...

விழுந்தாலும் சரி...எழுந்தாலும் சரி...

சிங்கம் சிங்கமாத்தான் இருக்கனும்...

அப்பத்தான் மருவாதி....

கரீக்டா....

Avanthika said...

அய்யோ தப்பா எழுதீட்டனா... இனிமேல் கவனமா இருக்கேன்...தேங்க்ஸ் அண்ணா..:-))

Avanthika said...

//சிங்கம் சிங்கமாத்தான் இருக்கனும்...
அப்பத்தான் மருவாதி....கரீக்டா....//

கரீட்டு ண்ணே..

இது கரெக்டாண்ணா..:-))

ஜெகதீசன் said...

உடனே திருத்தீட்டீங்களே!! ரெம்ப வேகமா இருக்கீங்க! :)..

அன்புடன்
ஜெகதீசன்

காட்டாறு said...

வாய் திறமையிருந்தால், அதுவும் சமயத்துக்கு ஏற்றார் போல் பேசவும் தெரிந்திருந்தால் பிழைத்துக் கொள்ளலாம். நீங்க எப்படி அவந்தி? பீர்பால் போல் பேசி சமாளிக்கும் திறன் இருக்குதா உங்களுக்கு?