Monday, September 13, 2010

ஜூலியின் நினைவுகள்-பிறந்தநாள் வாழ்த்து




பத்து வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் ஜூலி எங்களிடம் வந்து சேர்ந்துச்சு... ஒரு செல்லப்பிரானியிடம் இருக்கும் ஒரு உறவை விட அதிகமான் ஒரு உறவு எங்களுக்குள்ள இருந்துச்சு.

நான் நான்காம் வகுப்புல படிக்கும் போது, எங்க பிரின்ஸ்பால் ஜூலிய எனக்கு பரிசா குடுத்தாங்க... ஒரு நாள் சாயங்காலம் ஃபோன் பண்ணி, ஜூலிய வந்து எடுத்துட்டு போக சொன்னாங்க..அம்மா தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.....அம்மா வீடு வர்ரதுக்குள்ள எனக்கு ஆர்வம், சந்தோசம்... அவளுக்கு என்ன பேர் வைக்கலாம்... எங்க படுக்கை போடலாம்.. அவளுக்கு பால் குடிக்க புது கப் ரெடி பண்ணி, பாட்டியோட பழைய காட்டன் புடவை ரெண்டு எடுத்து அதை மெத்தை மாதிரி பண்ணி...எல்லா ஏற்பாடும் செய்து, வீட்டுக்கு வரப்போற புது ஜீவனை வரவேற்க காத்துட்டு இருந்தேன்.


அம்மா வண்டி சத்தம் கேட்டதும்.....ஜூலிய பார்க்க ஓட்டமா ஓடினேன்... ஒரு கூடைல உள்ளங்கை அளவுல, கண் கூட திறக்க முடியாம ,கீ கீ னு கத்தீட்டு இருந்துச்சு. அதோட அம்மா கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்துட்டோம்னு அழுகை. அதை ஆதரவா நெஞ்சோடு அணைச்சுட்டாங்க அம்மா. எனக்கு கையில எடுக்க பயம். ரொம்ப குட்டியா இருந்துச்சு. என்னை உட்கார சொல்லி மடியில போட்டாங்க. ஆனா அது முதல்ல என்கிட்ட வரலை. அம்மா கிட்ட இருந்தா சத்தம் இல்லாம இருக்கும்...நான் தொட்டா அழ ஆரம்பிச்சிரும். அடுத்த நாள் ஸ்கூல்க்கு போக கூட எனக்கு மனசு வரலை. வீட்ல கெஞ்சி எப்படியோ ஒரு நாள் லீவ் போட்டுட்டு ஜீலிய பார்த்துக்க ஸ்கூல்க்கு மட்டம் அடிச்சிட்டேன்.


இப்படியே பக்கத்தில் இருந்து என்னோட ஃப்ரெண்ட்ஷிப்ப வளர்த்துட்டேன். அதுல இருந்து எனக்கு ஜூலி தான் எல்லாம். ஸ்கூல்ல நடக்குறது, ஃப்ரெண்ட்ஸ் பத்தி, கார்ட்டூன்ல, பாப்பாய் ஷோ, சிம்சன்ஸ், பத்தி எல்லாம் சொல்லுவேன். அவளும் ஏதோ புரியற மாதிரி வைத்த கண் மாறாம என் முகத்தையே பார்த்துட்டு இருப்பா. நான் பாட்டுக்கு படிச்சுட்டோ எழுதீட்டோ இருந்தா... அப்பா டீவி பார்க்கும் போது அவர் கிட்ட போய் உட்கார்ந்துட்டு, அங்க இருந்து என்னையே பார்த்துட்டு இருப்பா.... பவ்வ்வ்னு ஒரு சத்தம் குடுத்து, தான் இருக்கறதை எனக்கு நியாபகப்படுத்துவா. அப்பப்போ அவ கூட நான் ஏதாவது பேசனும். தண்ணி வேனும்னாலோ, பசிச்சாலோ, கிச்சன்ல போய் அம்மா கிட்ட போய் நிப்பா.

தில்லியில இருக்கறப்போ, நாங்க மூனு பேரும் போய்ட்டா அவ பேசாம சோஃபால படுத்துட்டு இருப்பா...அவளுக்காக ஃப்ரென்ச் வின்டோல ஒன்னை மட்டும் திறந்து வச்சுட்டு போவோம். அவ வேடிக்கை பார்க்குறதுக்கு. மூனு பேர்ல யார் எந்த நேரத்துல வருவாங்கன்னு நல்லா தெரியும். அப்பா வர்ரதுக்கு லேட்டானா ரெஸ்ட்லெஸ்சா பால்கனிக்கும் கதவுக்கும் ஓடீட்டு இருக்ப்பா. மூனு மணி ஆனா நான் வர்ரனானு ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துட்டு இருப்பா. என்னை பார்த்தா போதும் ஓடிப்போய் கதவு பக்கத்துல உட்கார்ந்துப்பா. உள்ளே வந்த உடனே காலை சுத்தி சுத்தி, நக்கி, பிராண்டி அவளோட பிரியத்தை காமிச்சுக்கும். அப்ப ஏற்படற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அது எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன்.


இதை எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கும் போது, ஜூலி ஒரு நாள் எங்களை விட்டு போயிடும் னு எனக்கு தோனலை. இப்ப ஜூலி எங்களை விட்டு பிரிஞ்சு 9 மாதங்கள் ஆயிறுச்சு. இந்த உலகத்துல பிறக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போறாங்க. ஆனாலும் ஜூலி இவ்ளோ சீச்கிரம் போய்டும் நான் எதிர்பார்க்கலை. அது அம்மா மடியில படுத்துட்டு இருக்கும்போது அம்மா முகத்துல தெரிஞ்ச ஒரு நிம்மதிய பார்த்து நான் ரொம்ப நாள் ஆச்சு. யார் யாரோட எப்படி பழகனும், அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குற ஒரு ஜீவன் இனி எனக்கு கிடைக்காது.


எதிர்காலத்துல படிப்பு, வேலை, நண்பர்கள் னு எத்தனையோ விஷயங்கள் எனக்கு வந்து போகும். என்னோட உலகமும் இனி விரியும் தான். ஆனா ஜூலி ஏற்படுத்திட்டும்போன அந்த வெற்றிடம், அப்படியே தான் இருக்கும்.

ஜூலியோட ஆத்மாவும் இன்னைக்கு எங்களை நினச்சுட்டுத்தான் இருக்கும்.

I miss you Julie...Love u... Happy Birthday

காலேஜ் போற அவசரத்துல டைப் அடிச்சிட்டு இருக்கேன்...ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கவும்.

Monday, July 5, 2010

தாத்தாவின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்....

தாத்தாவின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாவிற்கு அவரின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று அவரை வணங்கி நிற்கிறேன்.

Thursday, December 4, 2008

மும்பை டெரர்:அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...ப்ளீஸ்ஸ்ஸ்

இத்தன நாள் எது எதுக்கோ டேக் போட்டுட்டு இருந்தோம்.....இப்ப ஒரு நல்ல காரியத்துக்கு டேக் போட உங்களை அழைக்கிறேன்.... தயவு செய்து எல்லோரும் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

மும்பையில் நடந்த கொடூரம்....முதல் முறையாக மக்கள் அனைவருக்கும் ஒரே கருத்து.....regarding the incompetency and selfishness of our politicians.....

எங்க கிளாஸ்ல தினமும் ஒருவர் இதை பத்தி பேசனும்னு முடிவு பண்ணி பேசீட்டு இருக்கோம்..அதை தொடர்ந்து டிஸ்கஷன்ஸ்.

அதை ஏன் இங்க செய்யக் கூடாதுன்னு தோனுச்சு....எப்பவும் மாதிரி ஒரு மாசம் பேசீட்டு இதை விடக்கூடாது...இந்த கொடூரம் தந்த பாதிப்பு நம்ம மனசுல இருந்துட்டே இருக்கனும்....அப்ப தான் மாற்றம் வேண்டும் என்கிற வெறி இருக்கும்.

ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு கடமை இருக்கு.....education, health, defence, business and house wives, students, etc, etc... அனவருக்கும் ஒரு பங்கு இருக்கு...we should look beyond our immediate preferences, prorities and interests...each one should realise his / her responisbility as a citizen.
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய உங்கள் எண்ணங்கள், நம்ம பஃப்வூன்ஸ் (அரசியல் வாதிகள்) பற்றிய கருத்துக்கள்... and some good leaders who can take us and lead us ...

நான் 4 பேரை டேக் பண்றேன்.... அவங்க ஒருத்தரை பண்ணா கூட போதும், அவங்க இஷ்டம்....

இந்த அருமையான மீடியாவை ஒரு நல்ல காரியத்துக்கு உபயோகிக்கலாமே.

{பி.கு - அவசரத்துல அடிச்சது....அதான் இங்கலீஷ் ம் சேர்ந்துருச்சு... சாரி.... கண்டுக்காதீங்க....:-)}
நான் கூப்பிடறது..


கண்டிப்பா எழுதுங்க..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Wednesday, November 26, 2008

நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்

{வடிவேலு ஸ்டைல்..:-)))}

என் கஸின்ஸ், பிரெண்ட்ஸ் ஏன் தில்லியில ஸ்கூல் டீச்சர்ஸ் கூட என்னை கிண்டல் பண்ணுவாங்க. என்ன பொண்ணு நீ...இப்படி இருக்கேன்னு அனுபவிக்க தெரியலைன்னு திட்டுவாங்க...ஆனா நான் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு என் ஜூலியும் கிரிக்கெட்டும் இருந்தா போதும்.

சரி விஷயம் என்னன்னா....நான் தனியா ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயும் போனது இல்லை... சினிமா சுத்தம்.....ஆனா இன்னைக்கு போனேன்.... இது என்ன பெரிய மேட்டர்னு கேக்கறீங்களா.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போனேன். அதுவும் சினிமாவுக்கு.

இது வரைக்கும் நான் பார்த்த மொத்த படமே 7..... நிஜமாவே சொல்றேன்... அதுல 4 படம் குழந்தைகள் படம்.. அதுக்கே நான் அழுத அழுகையில கூட வந்தவங்க சினிமா பார்க்குறதே ஸ்டாப் பண்ணிட்டாங்க... அப்புறம் ஸ்கூல்ல இருந்து கூப்டுட்டு போனாங்க.....வேற வழியில்லாம உட்கார வேண்டி இருந்துச்சு... அழுதா மிஸ் அடிப்பாங்களே.... அப்புறம் பத்தாவது படிக்கும் போது கஸின் எல்லாரும் சேர்ந்து சும்மா வெளியே போகலாம்னு பொய் சொல்லி கூப்டுட்டு போய் ஒரு படம்.....அழுதா அவ்வளோ தான்... இங்கேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டி மில்க் சாக்லேட் வாங்கி குடுத்து உட்காரவச்சாங்க... அது என்ன படம்னு கூட மறந்து போச்சு.

அதுக்கு அப்புறம் இன்னைக்கு என் கூட படிச்ச ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இழுத்துட்டு போனாங்க.... முக்கியமான விஷயம் நிஜமா இன்னைக்கு அழுகலை.....

அதுனால நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்.....

Note-(லட்சுமி அக்கா... என்னோட போன போஸ்ட்ல உங்க கமெண்ட் பார்த்து தான் இந்த போஸ்ட் போட ஐடியா வந்துச்சு...தேங்கஸ் அக்கா...:-))

Tuesday, November 25, 2008

கண்ணாடி- ஸென் கதை 10

ஒருத்தர் எப்பவும் எங்க போனாலும் கையில ஒரு கண்ணாடி வச்சுட்டு இருப்பாராம். இதப் பார்த்துட்டிருந்த மற்றவர் " இந்த ஆளு, தன் அழகை பற்றி ப்ரீயாக்குபைடா இருப்பார் போல இருக்கு. அதான் எப்பவும் கையில கண்ணாடி வச்சுட்டு அடிக்கடி தன் முகத்தை பார்த்துக்கறார்" னு சொன்னாராம்.

சரி அவரையே கேட்கலாம்னு ' நீங்க ஏன் எப்பவும் கண்ணாடிய கையில வச்சுட்டு இருக்கீங்க' ன்னு கேட்டாராம்.

அதுக்கு முதலாமவர் " எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் இந்த கண்ணாடிய பார்த்துப்பேன், இதுல விடை தெரியும்' னு சொன்னாராம்.

'எப்படி' னு அந்த நபர் கேட்க

முதலாமவர் "இப்ப இதுல என்ன தெரியுது?"

நபர் ' உங்க முகம்'


முதலாமவர் " அதான் விடை, எனக்கு ஏற்படும் எந்த பிரச்சனைக்கும் நான் தான் காரணம், அதை தீர்ப்பதற்கான வழியும் என் கிட்ட தான் இருக்குன்னு நினைவு படுத்திக்கத்தான் இந்த கண்ணாடி' னு சொன்னாராம்.

Friday, November 21, 2008

அம்மா அம்மா தான்..........





என்னா ஒரு லுக்கு பாருங்க.....
இருந்தாலும் என் ஜூலி இது எல்லாம் பண்ணாது.....
பூனை கழுத்த மட்டும் தான் பிடிக்கும்.....:-))

Friday, October 17, 2008

கனவு - சென் கதை


ரொம்ப புகழ் பெற்ற சென் மாஸ்டர் சுவாங் ட்சு ஒரு முறை ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவுல அவர் ஒரு பட்டாம் பூச்சியா அங்கேயும் இங்கேயும் பறந்துட்டு இருந்தாராம். பாட்டாம் பூச்சியாவே மாறி ரொம்ப சந்தோஷமா பறந்துட்டு இருந்தாராம். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ படுக்கையில மீண்டும் தான் மனுஷனா இருக்குறது உணர்ந்தாராம்.

அதுக்கு அப்புறம் " நான் மனிதனா இருந்து பட்டாம் பூச்சியா கனவு கண்டனா, இல்லை பட்டாம்பூச்சி மனுஷனா கனவு கண்டுட்டு இருக்கனா' னு மனசுக்குள்ள நினச்சாராம்.

இதை படிச்சுட்டு என் கஸின் கிட்ட சொன்னா, அவன் கேட்குறான் "அவர் மனசுக்குள்ள நினச்சது உனக்கு எப்படி தெரியும்" னு...:-)))

அது மாதிரி நீங்களும் கேட்காதீங்க...மெயில்ல வந்தது...