Sunday, December 23, 2007

இயற்கை குணம்- கதை


ரெண்டு பேர் ஒரு நதியில குளிச்சுட்டு இருந்தாங்க. அப்ப ஒரு தேள் தண்ணீர்ல மூழ்கீட்டு இருக்குறத பார்த்த அதில ஒருவர் அதை காபாத்த நினைச்சார்.

தன் கையாலேயே அந்த தேள எடுத்து கரையில விட்டார். அப்ப தேள் கொட்டீடுச்சு. அப்ப பக்கத்துல இருந்தவர் சொன்னாராம் '' தேள் கொட்டத்தான் செய்யும்..இது தெரியாதா...எதுக்கு அதை தொட்டே'' னு கேட்டாராம்.

அதுக்கு தேள காப்பாத்தினவர் சொன்னாராம் '' அதான் நீயே சொல்லீட்டியே, தேள்னா கொட்டத்தான் செய்யும்னு, அது தேளோட வழக்கம்.. இயற்கை... கஷ்டத்துல இறுக்குறவுங்களுக்கு உதவி செய்யறது என்னோட வழக்கம்...மனிதனா பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய இயற்கை குணம்'' அப்படீன்னு சொன்னாராம்.

இது மாதிரி நாமும் நம்மாளான உதவிகளை, நம்ப மேல நம்பிக்கை வச்சிருக்குறவங்களுக்கு செய்யலாம்...அது எந்த விதத்திலும் தப்பாகாது ன்னு Dalai Lama சொல்லியிருக்கார்.

எல்லார்த்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Note-இது தான் நான எழுதற கடைசி பதிவு / கதை...இது வரைக்கும் என்னை சகிச்சுட்டு இருந்த அண்ணா, அக்கா எல்லார்த்துக்கும் நன்றி...சொன்ன கதை எல்லாம் புக்ல படிச்சதும், நெட்ல இருந்து சுட்டதும் தான்.. அந்த கதையின் கருத்தை நானும் மறக்க மாட்டேன்....நீங்களும் மறக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன். நன்றி.

Saturday, December 8, 2007

ரொனால்டினோ (Foot Ball Player) வீடு

உங்களுக்கு ரொனால்டினோவ தெரியும் இல்ல... ஃபுட் பால் ப்ளேயர்.. அவரோட வீடு பாருங்க எப்படி இருக்கு...Friday, December 7, 2007

கார் ட்ரிக் பாருங்க....Video

கார் ட்ரிக்

Saturday, December 1, 2007

க்யூட் பப்பீஸ்


எத்தன க்யூட்டா இருக்கு பாருங்க....புஜ் புஜ்னு இருக்கு


Monday, November 26, 2007

த்ரில்லிங்க் experiance- Earthquake

தில்லி வந்த பின்னால earth quake னு சொல்றாங்களே அது எப்படி இருக்கும்னு experiance பண்ணி பார்க்கனும்னு ஆசை. ஆனா வெளியே சொன்னா லூசுன்னு நினச்சுடுவாங்கன்னு யார் கிட்டேயும் சொல்லலை.

இன்னைக்கு காலையில 4.42 மணிக்கு ட்ரம்ஸ் சத்தம் மாதிரி சத்தம் கேட்டுச்சு. பிறகு கட்டில் நல்லா ஆடுது...நான் ஏதோ கனவுன்னு நினச்சுட்டு இருந்தேன். ஆனா கதவெல்லாம் டப்புன்னு அடிச்சது. ஜூலி பயங்கரமா கத்த ஆரம்பச்சிருச்சு....அப்புறம் தான் ஹை பூகம்பம் வந்துடுச்சுன்னு நினச்சுட்டு இருந்தப்பவே அம்மா எழுப்பினாங்க..சீக்கிறம் எழுந்திரு..எல்லாரும் வெளியே நிக்கறாங்கன்னு. ஆனா நமக்கு 4.45 மணிக்கு தானே தூக்கம் நல்லா வரும். ''போம்மா..எனக்கும் தெரியும்'' னு திரும்பி படுத்திட்டேன். பெட்ல படுத்திட்டே ஸ்க்ரீன தள்ளி பார்த்தா, கீழ கார்டென்ல எல்லாரும் குழந்தைகள வச்சுட்டு நின்னுட்டு இருக்காங்க. நல்ல குளிர் 8 டிகிரி, 9 டிகிரி குளிர். பக்கத்துல இருக்கறவுங்க எல்லாம் கீழ இறங்கி வாங்கன்னு எங்களைப் பார்த்து கத்தீட்டு இருந்தாங்க. Dont use the lift..use the stairs and come down fast னு பக்கத்து வீட்டு aunty கத்தல். ஆனா எனக்கு ஒரே சிரிப்பு. ஹை நாங்களும் பூகம்பத்தை அனுபவிச்சுட்டோம்னு.

''என்னது ஹையா....என்ன திமிறா, பேவகூஃப் லடுக்கி'' ன்னு கீழ் வீட்டு பாட்டி திட்டு... ஹா ஹா ஹா....

ஆனா ஏதாவது பெருசா நடந்திருந்தா...நல்ல வேலை ஒன்னும் ஆகலை....

உண்மையிலேயே திரில்லிங்கா இருந்துச்சு....

Saturday, November 17, 2007

நாய் கடியும் டாக்டரும்...

Delphine aunty டாக்டர்ஸ் ஜோக்ஸ் போடறது சரியாதான் இருக்கு.

இந்த ஜூலி பிசாசு அம்மாவ கடிச்சு வச்சுடுச்சு. வியாழக்கிழமை காலையில வேலைக்காரம்மா வந்ததும் எப்பவும் போல அம்மா ஜூலிய Balcony ல கட்டலாம்னு செயின அவுக்க போகும் போது, என்ன நினச்சதோ கால பலமா கடிச்சு வச்சிடுச்சு. அம்மா சத்தம் கேட்டு நான் எழுந்து வந்தேன். பார்த்தா பாதத்துக்கு மேல ப்ளட் நல்லா வந்துட்டு இருக்கு. அந்த நேரத்துல டாக்டர்ஸ்சும் யாரும் இல்லை.

Anti rabbies injection வாங்கலாம்னா கடையும் திறக்கலை. 9 மணிக்கு டெல்ஃபின் ஆண்டிக்கு போன் பண்ணி பேசுனாங்க. உடனே Anti rabbies injection போட்டுக்கோ சொன்னாங்க. அம்மா ஆபீஸ்க்கு போயிட்டு பின்ன டாக்டர் கிட்ட போனாங்க. அங்க இருந்த டாக்டர் மாதிரி ஒரு லூசு டாக்டர் இருக்க மாட்டாங்க. போறப்பவே இன்ஜெக்ஷன் வாங்கீட்டு போனதுனால சீக்கிறம் உள்ளே வர சொல்லிட்டார்.

உள்ளே போனா அவரோட சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொல்லி அவர் எப்ப தில்லி வந்தார், எதுக்கு வந்தார், இதுக்கு முன்னாடி என்ன பண்ணீட்டு இருதார்னு கதை. '' இதுக்கு முன்னாடி நான் அஸாம்ல இருந்தேன், அங்க Ulfa terrorists என்னை கடத்தீட்டு போயிட்டாங்க. என்னோட சொத்து எல்லாம் போயிடுச்சு..அதுக்கு அப்புறம் தான் நான் தில்லி வந்தேன்னு உளரீட்டே இன்ஜெக்ஷன் போட்டு...அது ரெண்டா break ஆயிடிச்சு. Needle குத்தினது அரைவாசி அம்மா கைக்குள்ளே, மீதி டாக்டர் கையில. "பார்த்தீங்களா இது கூட ஒழுங்கா இல்லை "னு complaint. நல்ல வேலை பிரேக் ஆன ஊசி உள்ளே போகலை. கொஞ்சம் வெளியே நீட்டிட்டு இருந்தாலே அம்மாவே உடனே வெளியே எடுத்துட்டாங்க. அம்மாக்கு ஒரே கோவம் சிரிப்பு எல்லாம். வீசிங்கும் சேர்ந்துருச்சு. ஏதோ ஜனகராஜ் ஜோக் நியாபகத்துல வருத்துன்னு தெலுங்குல சொன்னா, அந்த ஜோக்குங்குற வார்த்தை மட்டும் அந்த லூசுக்கு புரிஞ்சு..என்ன சிஸ்டர் ஜோக்னு என்னமோ சொல்றீங்க...எனக்கும் சொல்லுங்க நானும் சிரிக்குறேனு சொல்லிட்டு சிரிப்பு வேற.

வெளியே வந்த பிறகு டாக்டர் சொல்றார் ''சிஸ்டர் தில்லிக்கு வந்த பிறகு நீங்க தான் நான் பார்க்கும் முதல் பேஷன்ட்... third day and seventh day இன்னும் ரெண்டு ஊசி போடனும். மறக்காம வந்துடுங்க'' .

எங்க ஊர் ரோடுங்க்....

எல்லாரும் அவங்கவங்க ஊர் ஃபோட்டோவ போடறாங்க. எங்க ஊர் மாதிரி வருமா?... ஆனா நான் போட்டியில கலந்துக்கிட்டா மத்தவங்களுக்கு பரிசு கிடைக்காம போயிறும். எல்லாரும் ஒரே அழுகை....ப்ளீஸ் கலந்துக்காதேனு.. சரி சரி....ஃபோட்டோ மட்டும் போடறேன்னு சொல்லிட்டேன்..
நாங்க பரிசு குடுத்து தான் பழக்கம் வாங்கி பழக்கம் இல்லை:-)))

Mettupalayam Road from North coimbatore

Coimbatore Race course Road


Road to Isha Yoga Centre


By-pass Road


Fly over
Another view of Mettupalayam Roadஎங்க ஊர் பார்த்தீங்களா, இப்ப கீழ பாருங்க நம்ம நாட்டுலேயும் எவ்வளவு அழகான சாலைகள் இருக்குன்னு
Scintillating Sikkim


Awesome Assam
Corbett Park

Monday, November 5, 2007

குழந்தைகளை எப்படி எல்லாம் ஏமாத்தறீங்க...


சின்ன குழந்தைகளை வீட்ல எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க.. நீங்களும் தான்

வீட்ல ஃபார்மஸிக்கு போய் Benadryl வாங்கீட்டு வர சொன்னாங்க. நான் போக சோம்பல் பட்டதுக்கு அப்பா சொன்னார் நான் 100 எண்ணுறேன்... அதுக்குள்ள நீ வந்துடு, பார்க்கலாம் நான் முதல்ல 100 சொல்லி முடிக்கிறனா இல்லை நீ வர்ரியான்னு சொன்னார். நான் சொன்னேன் நான் என்ன குழந்தையா இப்படியெல்லாம் சொல்றதுக்கு...சரி சரி போயிட்டு வரேன்னு சொலிட்டு போயிட்டு வந்தேன்.

வீட்டுக்குள்ள வந்தா, அப்பா 86, 87 அப்படீன்னு சொல்லீட்டு, ''ஹை குட் கேர்ல் நீ தான் ஜெயிச்சே"ன்னு சொன்னார். எனக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லையே நான் வேகமா போயிட்டு வந்துட்டேனு எனக்கு அல்ப சந்தோஷம் ஆயுடுச்சு. அம்மா சிரிச்சாங்க. என்னன்னு கேட்டா இன்னும் அரைமணி கழிச்சு வந்திருந்தாலும் நீ தான் ஜெயிப்பேன்னு சொன்னாங்க. ஏன்னு தெரியுமா இவங்க count பண்ணவே இல்லை. நான் வர்ரது பார்த்துட்டு சும்மா 86, 87 னு சொல்லிட்டு இருந்திருக்காங்க. அப்ப தான அடுத்த தடவை ஏதாவது வேலை சொன்னா செய்வேன். அதுக்கு தான்

சின்ன பொண்ணா இருந்தப்போ இப்படித்தான் ஒரு வேலை சொல்லீட்டு அம்மா 1 to 10 சொல்வாங்க. நானும் பண்ணுவேன், கடைசியில எனக்கு கேக்குற மாதிரி 8, 9, 10 சொல்லுவாங்களா, நானும் ஹை ஜெயிச்சிட்டேன்னு லூசு மாதிரி சந்தோஷப்பட்டுட்டு, அடுத்த தடவையும் செய்வேன். இப்படி 8 சொல்றதுக்கு முன்னாடி செய்து முடிச்சதுக்கு ஒரு ஜெம்ஸ் பேக்கட் வேற குடுப்பாங்க.

அப்புறம் நைட் கதை சொல்றப்போ காக்காய் வடை தூக்கிட்டு போய் உக்கார்ந்து நரி வர்ர வரைக்கும் சொல்லுவாங்க. வடை கீழ விழுந்துச்சான்னு சொல்லவே மாட்டாங்க. நீ தூங்கு அப்ப தான் சொல்லுவேன்னு சொல்லி தூங்க வச்சுடுவாங்க. இதுவே தினமும் நடக்கும் நானும் லூசு மாதிரி தினமும் வடை கதைய கேட்டுட்டு இருந்து இருக்கேன்.

இப்படித்தான் ஏமாத்தறீங்க குழந்தைகளை...:-)))

Thursday, November 1, 2007

Paul Warfield Tibbets- ஹிரோஷிமா குண்டு- பைலட்Paul Warfield Tibbets Jr - இது யாருன்னு தெரியுமா?... ஆகஸ்ட் 6, 1945 ல ஹிரோஷிமா மேல " Little Boy" அணு குண்டு ( 5 டன்) போட்ட விமானத்தை ஓட்டிட்டு போன பைலட். அவரோட 92 ஆவது வயசுல Columbus, Ohio வுல இறந்துட்டார். 1,40,000 மக்கள் அப்ப இறந்து போனாங்க.

பாம் போட்ட 60 ஆம் ஆண்டு நிறைவு அப்போ இந்த ப்ளேன்ல இருந்த மூனு பேரும்'' எங்களுக்கு அந்த அணு குண்டு போட்டதுல எந்த வருத்தமும் இல்லை'' ன்னு சொன்னாங்களாம்

இப்ப இறந்து போன டிப்பட்ஸ், "நான் இறந்த பின்ன எனக்கு சமாதியோ, இறுதிச்சடங்கோ ஒன்னும் வேண்டாம். ஏன்னா என் மேல கோபம் இருக்குறவங்க என் சமாதி அருகில வந்து போராட்டம் நடத்துவாங்க'' ன்னு சொல்லிட்டாராம்.

இந்த அணு குண்டு போட்டப்போ எப்படி விமானத்தை ஓட்டீட்டு போனாரோ அதே மாதிரி, 1976 ஆம் ஆண்டு ஏர் ஷோ செய்து காமிச்சாராம்.

Thursday, October 18, 2007

நண்பனுக்கு குடுத்த செக் - கதை


ஒரு ஊர்ல ஒரு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப டியர் ப்ரெண்ட்ஸ். ஒன்னாவே வாழ்ந்தாங்க. ஒரே தொழிலும் பண்ணீட்டு இருந்தாங்க. நிறைய சொத்து சேர்ந்துட்டாங்க.

அதுல ஒரு நண்பர் இன்னொருவர் கிட்ட கேட்டார், '' நான் இறந்துட்டா நீ என்ன பண்ணுவே'' .

அதுக்கு நண்பர், '' நீயே போன பிறகு எனக்கு என்ன இருக்கு இந்த உலகத்துல... நினச்சுப் பார்க்க முடியலை'' னார்.

இதை கேட்ட உடனே அவருக்கு ரொம்ப சந்தோஷம் ஆயுடுச்சு '' அப்ப நான் இறந்த பிறகு நாம சேர்த்த சொத்தை எல்லாம் என்னை புதைக்குற குளிக்குள்ள போட்டுறு'' னார். '' ஊர்ல இருக்குற பெரியவங்க முன்னாடி நீ சத்தியம் செய்து கொடுக்கனும்'' னு சொல்லிட்டார்.

நண்பருக்கு அதிர்ச்சி ச்சே என்ன இவன் இப்படி இருக்கான்னு. ஆனா நண்பர் கிட்ட '' சரி நண்பா அப்படியே செய்யறேன்'' னார். சத்தியமும் செய்து கொடுத்தார்.

சில நாள் கழிச்சு முதல் நண்பர் ஏதோ நோய் வந்து இறந்து போயிட்டார்.

க்ளைமேக்ஸ் வந்துடுச்சா. நண்பர புதைக்குற டைம் வந்துடுச்சு. அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாம் இரண்டாம் நண்பர் என்ன செய்யப் போரார்னு பார்த்துட்டு இருந்தாங்க. நண்பர் ஒரு செக்ல கை எழுத்து போட்டு குழிக்குள்ள போட்டார்.

ஊர்க்காரங்க என்ன இதுன்னு கேட்டாங்க. அதுக்கு அவர் '' நான் எங்களோட சொத்தை எல்லாம் வித்து பேங்க்ல போட்டு இருக்கேன். அதோட செக் தான் இது. என்னோட பங்கையும் சேர்த்து போட்டுட்டேன்'' னார்.

Saturday, October 6, 2007

தூங்கு மூஞ்சி வாத்தியார்.


ஒரு கணக்கு வாத்தியார் தினமும் மதியம் கிளாஸ்கு வந்த பின்ன ஏதாவது ஒரு கணக்க மாணவர்களுக்கு குடுத்துட்டு டேபிள்ல படுத்து தூங்கப் போயிடுவார். மாணவர்கள் கேட்டாங்க '' சார் என்ன தினமும் இப்படி தூங்கரீங்களே..ஏன்?... அதுக்கு வாத்தியார், '' நான் தினமும் ஒரு காட்டுக்குள்ள இருக்குற ஒரு மகான பார்க்க போறேன்'' அப்படின்னார்.

அடுத்த நாள்..மாணவர்களும் இவரோட வகுப்புல தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. வாத்தியார் கேட்டார் ''என்ன எல்லாரும் தூங்கரீங்க'' அப்படீன்னு. அதுக்கு மாணவர்கள், நீங்க போன அதே மகான பார்க்கலாம்னு போனோம்'' னு சொன்னாங்க.

அதை கேட்டதும் வாத்தியார்க்கு சந்தோஷம். ''ரொம்ப சந்தோஷம்..நல்ல விஷயம்...என்ன சொன்னார் மகான்'' அப்படீன்னு கேட்டார்.

மாணவர்கள் ''உங்களைப் பற்றி கேட்டோம். அப்படி யாரும் இங்க தினமும் வரலையேன்னு சொல்லிட்டார்'' அப்படின்னாங்க. :-)))))

Friday, September 14, 2007

நானும் போட்டிக்கு...கலர் காமிக்குறேன்

எல்லாரும் போட்டோ புடிச்சு போடறாங்க..

அதான் அவங்களுக்கு போட்டியா நானும்

எங்கே இருந்து எல்லாமோ புடுச்சி போட்டுட்டேன்..


எனக்கும் பரிசு உண்டா...

எங்க இருந்து புடிக்கனும்னு ரூல்ஸ்ல சொல்லலை இல்ல..:-))
Friday, September 7, 2007

நீங்க பென்ஸிலா இருப்பீங்களா?


இன்னைக்கு படிச்ச ஒரு விஷயம்.

நாம எப்பவும் ஒரு பென்சில் மாதிரி சில முக்கியமான குணங்களோட இருக்கனும்.

எப்படி.

நம்மை சீவ சீவ தான், அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தான் நாம் பல விஷயங்களை புரிஞ்சுக்க முடியும். இலக்கை அடைய பல உத்திகள் கிடைக்கும் முடியும்.

பென்சில்ல தப்பா எழுதினா உடனே நாம அதை இரேஸர் வச்சு அழிச்சிடறோம். அது மாதிரி நாம செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்திக்கனும்.

பென்சில் வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே எப்படி இருக்கோ அப்படி தான் கையெழுத்தின் தரம் இருக்கும். அது மாதிரி நம் எண்ணங்கள் எப்படி இருக்கோ அப்படித்தான் நம் நடத்தையும் இருக்கும்.நல் எண்ணங்களே நல்ல வாழ்க்கைய குடுக்கும்.

நாம ஏதாவது ஒரு சக்தி மேல நம்பிக்கை வச்சு நம்மள அந்த சக்தி கிட்ட நம்மள ஒப்படைக்கனும். அதன் வழி நடத்தல் படி நடக்கனும். பென்ஸில் யாரு கையில இருந்தாலும் அவங்க கை போற போக்கில போறதுனால தான் அதோட வேலைய செய்ய முடியுது. இல்லன்னா அதுக்கு மதிப்பு இல்ல.பென்சில் நம்ம கையில வந்தப்புறம் தானே பெரிய ஆள் ஆகுது. அது மாதிரி.

பென்ஸில்லால எங்க எழுதினாலும் அது ஒரு மார்க் விட்டுடுது. அது மாதிரி நாம பண்ற வேலைகளிலும் நாம நம்ம முத்திரைய பதிக்கனும். அந்த வேலை எங்க, எப்படி, யாருக்காக இருந்தாலும் சரி. என்ன ஆனாலும் எந்த நேரத்திலும், யார் கையில இருந்தாலும் பென்ஸில் அதோட வேலைய சரியா செஞ்சுதில்ல. அது மாதிரி.

நம்ம கிட்ட இருக்குற நல்ல குணங்கள் யாருக்கு வேனா உபயோகப் படுற மாதிரி நம்ம அனுகுமுறை இருக்கனும். (Anybody should access the gifts (good qualities) in you possess).நம்ம உதவி ஒருத்தருக்கு வேனும்னா, எதையும் யோசிக்காம நம்மனால செய்ய முடியற உதவியா இருந்தா அது நம்ம கடமையா நினச்சு செய்யனும்.

நீங்க பென்சிலா இருப்பீங்களா?

Wednesday, September 5, 2007

ஓட்டை பானை- The Cracked Pot


ஒரு ஊர்ல ஒரு அம்மா தினமும் ரெண்டு பானைல தண்ணி எடுத்துட்டு வந்து ஒரு கோயிலுக்கு குடுத்துட்டு இருந்தாங்க. அது தான் அவங்களுக்கு வேலை. அவங்க வச்சுட்டு இருந்த ரெண்டு பானைல ஒன்னு ஒட்டை பானை. ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. நல்லா இருந்த பானை, ஓட்டை பானைய பார்த்து '' பாரு உன்னால பாதி தண்ணியத்தான் குடுக்க முடியுது. மீதி கீழ தான போகுது. உன்னை சுமந்துட்டு வர்ரது வேஸ்ட் அப்படின்னு'' சொல்லிச்சு. ஓட்டை பானைக்கு மனசு கஷ்டம் ஆய்டுச்சு.

மனசு கஷ்டமா இருக்குன்னு அந்த அம்மா கிட்ட ஓட்டை பானை சொல்லுச்சு '' அம்மா என்னை ஏன் சுமந்துட்டு வர்ரே, நான் தான் உனக்கு உபயோகம இல்லையே. என்னை மன்னிச்சுடு. நீ சுமந்துட்டு வரும்போதே பாதி தண்ணீர் கீழ போயிடுதே'' ன்னு சொல்லி அழுதுச்சு.

அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க '' நாளைக்கு உன்னை சுமந்துட்டு வர்ரப்போ உன் பக்கம் பார்த்துட்டே வா, அப்ப புரியும்'' னு சொன்னாங்க.
அடுத்த நாள் அந்த அம்மா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர்ரப்போ பக்கத்துல பார்த்துட்டே வந்துச்சு ஓட்ட பானை. ஒன்னும் தெரியலை. வழி பூராவும் நிறைய பூக்களோட செடிகள் மட்டும் இருந்துச்சு. ஆனா மனசுக்குள்ள வருத்தம் மட்டும் போகவே இல்லை. கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அந்த அம்மா '' பானை ஓட்டை ஆனதும் உன்னை சுமந்துட்ட வந்த வழியெல்லாம் சின்ன சின்ன செடிகள் வச்சேன். அது இப்ப இவ்வளவு அழகா பூக்களோட இருக்கு பார்த்தியா. அதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லனும். இல்லன்னா இத்தன தூரத்துக்கு நான் ஒவ்வொரு செடியா தண்ணி ஊத்தரது கஷ்டம் தானே. உன்னால தானே சாமிக்கு அழகா மாலை கட்டி போட முடியுது.. பாரு சாமி எவ்வளவு அழகா இருக்கார்" அப்படீன்னு சொன்னாங்க.

அப்புறம் ரெண்டு பானைகள் கிட்டேயும் ''யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும். பாரு அந்த பூக்கள் வச்சு கட்டுன மாலைனால தான் சாமி அழகா இருக்கார் ' அப்படீன்னு சொன்னாங்க.

Friday, August 31, 2007

நம் மதிப்பு - கதை


ஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.

அப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.

அப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.

அப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.

அது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்