Friday, September 14, 2007

நானும் போட்டிக்கு...கலர் காமிக்குறேன்

எல்லாரும் போட்டோ புடிச்சு போடறாங்க..

அதான் அவங்களுக்கு போட்டியா நானும்

எங்கே இருந்து எல்லாமோ புடுச்சி போட்டுட்டேன்..


எனக்கும் பரிசு உண்டா...

எங்க இருந்து புடிக்கனும்னு ரூல்ஸ்ல சொல்லலை இல்ல..:-))




































Friday, September 7, 2007

நீங்க பென்ஸிலா இருப்பீங்களா?


இன்னைக்கு படிச்ச ஒரு விஷயம்.

நாம எப்பவும் ஒரு பென்சில் மாதிரி சில முக்கியமான குணங்களோட இருக்கனும்.

எப்படி.

நம்மை சீவ சீவ தான், அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தான் நாம் பல விஷயங்களை புரிஞ்சுக்க முடியும். இலக்கை அடைய பல உத்திகள் கிடைக்கும் முடியும்.

பென்சில்ல தப்பா எழுதினா உடனே நாம அதை இரேஸர் வச்சு அழிச்சிடறோம். அது மாதிரி நாம செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்திக்கனும்.

பென்சில் வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே எப்படி இருக்கோ அப்படி தான் கையெழுத்தின் தரம் இருக்கும். அது மாதிரி நம் எண்ணங்கள் எப்படி இருக்கோ அப்படித்தான் நம் நடத்தையும் இருக்கும்.நல் எண்ணங்களே நல்ல வாழ்க்கைய குடுக்கும்.

நாம ஏதாவது ஒரு சக்தி மேல நம்பிக்கை வச்சு நம்மள அந்த சக்தி கிட்ட நம்மள ஒப்படைக்கனும். அதன் வழி நடத்தல் படி நடக்கனும். பென்ஸில் யாரு கையில இருந்தாலும் அவங்க கை போற போக்கில போறதுனால தான் அதோட வேலைய செய்ய முடியுது. இல்லன்னா அதுக்கு மதிப்பு இல்ல.பென்சில் நம்ம கையில வந்தப்புறம் தானே பெரிய ஆள் ஆகுது. அது மாதிரி.

பென்ஸில்லால எங்க எழுதினாலும் அது ஒரு மார்க் விட்டுடுது. அது மாதிரி நாம பண்ற வேலைகளிலும் நாம நம்ம முத்திரைய பதிக்கனும். அந்த வேலை எங்க, எப்படி, யாருக்காக இருந்தாலும் சரி. என்ன ஆனாலும் எந்த நேரத்திலும், யார் கையில இருந்தாலும் பென்ஸில் அதோட வேலைய சரியா செஞ்சுதில்ல. அது மாதிரி.

நம்ம கிட்ட இருக்குற நல்ல குணங்கள் யாருக்கு வேனா உபயோகப் படுற மாதிரி நம்ம அனுகுமுறை இருக்கனும். (Anybody should access the gifts (good qualities) in you possess).நம்ம உதவி ஒருத்தருக்கு வேனும்னா, எதையும் யோசிக்காம நம்மனால செய்ய முடியற உதவியா இருந்தா அது நம்ம கடமையா நினச்சு செய்யனும்.

நீங்க பென்சிலா இருப்பீங்களா?

Wednesday, September 5, 2007

ஓட்டை பானை- The Cracked Pot


ஒரு ஊர்ல ஒரு அம்மா தினமும் ரெண்டு பானைல தண்ணி எடுத்துட்டு வந்து ஒரு கோயிலுக்கு குடுத்துட்டு இருந்தாங்க. அது தான் அவங்களுக்கு வேலை. அவங்க வச்சுட்டு இருந்த ரெண்டு பானைல ஒன்னு ஒட்டை பானை. ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. நல்லா இருந்த பானை, ஓட்டை பானைய பார்த்து '' பாரு உன்னால பாதி தண்ணியத்தான் குடுக்க முடியுது. மீதி கீழ தான போகுது. உன்னை சுமந்துட்டு வர்ரது வேஸ்ட் அப்படின்னு'' சொல்லிச்சு. ஓட்டை பானைக்கு மனசு கஷ்டம் ஆய்டுச்சு.

மனசு கஷ்டமா இருக்குன்னு அந்த அம்மா கிட்ட ஓட்டை பானை சொல்லுச்சு '' அம்மா என்னை ஏன் சுமந்துட்டு வர்ரே, நான் தான் உனக்கு உபயோகம இல்லையே. என்னை மன்னிச்சுடு. நீ சுமந்துட்டு வரும்போதே பாதி தண்ணீர் கீழ போயிடுதே'' ன்னு சொல்லி அழுதுச்சு.

அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க '' நாளைக்கு உன்னை சுமந்துட்டு வர்ரப்போ உன் பக்கம் பார்த்துட்டே வா, அப்ப புரியும்'' னு சொன்னாங்க.
அடுத்த நாள் அந்த அம்மா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர்ரப்போ பக்கத்துல பார்த்துட்டே வந்துச்சு ஓட்ட பானை. ஒன்னும் தெரியலை. வழி பூராவும் நிறைய பூக்களோட செடிகள் மட்டும் இருந்துச்சு. ஆனா மனசுக்குள்ள வருத்தம் மட்டும் போகவே இல்லை. கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அந்த அம்மா '' பானை ஓட்டை ஆனதும் உன்னை சுமந்துட்ட வந்த வழியெல்லாம் சின்ன சின்ன செடிகள் வச்சேன். அது இப்ப இவ்வளவு அழகா பூக்களோட இருக்கு பார்த்தியா. அதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லனும். இல்லன்னா இத்தன தூரத்துக்கு நான் ஒவ்வொரு செடியா தண்ணி ஊத்தரது கஷ்டம் தானே. உன்னால தானே சாமிக்கு அழகா மாலை கட்டி போட முடியுது.. பாரு சாமி எவ்வளவு அழகா இருக்கார்" அப்படீன்னு சொன்னாங்க.

அப்புறம் ரெண்டு பானைகள் கிட்டேயும் ''யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும். பாரு அந்த பூக்கள் வச்சு கட்டுன மாலைனால தான் சாமி அழகா இருக்கார் ' அப்படீன்னு சொன்னாங்க.