Monday, September 13, 2010

ஜூலியின் நினைவுகள்-பிறந்தநாள் வாழ்த்து




பத்து வருடங்களுக்கு முன் இதே நாளில் தான் ஜூலி எங்களிடம் வந்து சேர்ந்துச்சு... ஒரு செல்லப்பிரானியிடம் இருக்கும் ஒரு உறவை விட அதிகமான் ஒரு உறவு எங்களுக்குள்ள இருந்துச்சு.

நான் நான்காம் வகுப்புல படிக்கும் போது, எங்க பிரின்ஸ்பால் ஜூலிய எனக்கு பரிசா குடுத்தாங்க... ஒரு நாள் சாயங்காலம் ஃபோன் பண்ணி, ஜூலிய வந்து எடுத்துட்டு போக சொன்னாங்க..அம்மா தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.....அம்மா வீடு வர்ரதுக்குள்ள எனக்கு ஆர்வம், சந்தோசம்... அவளுக்கு என்ன பேர் வைக்கலாம்... எங்க படுக்கை போடலாம்.. அவளுக்கு பால் குடிக்க புது கப் ரெடி பண்ணி, பாட்டியோட பழைய காட்டன் புடவை ரெண்டு எடுத்து அதை மெத்தை மாதிரி பண்ணி...எல்லா ஏற்பாடும் செய்து, வீட்டுக்கு வரப்போற புது ஜீவனை வரவேற்க காத்துட்டு இருந்தேன்.


அம்மா வண்டி சத்தம் கேட்டதும்.....ஜூலிய பார்க்க ஓட்டமா ஓடினேன்... ஒரு கூடைல உள்ளங்கை அளவுல, கண் கூட திறக்க முடியாம ,கீ கீ னு கத்தீட்டு இருந்துச்சு. அதோட அம்மா கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்துட்டோம்னு அழுகை. அதை ஆதரவா நெஞ்சோடு அணைச்சுட்டாங்க அம்மா. எனக்கு கையில எடுக்க பயம். ரொம்ப குட்டியா இருந்துச்சு. என்னை உட்கார சொல்லி மடியில போட்டாங்க. ஆனா அது முதல்ல என்கிட்ட வரலை. அம்மா கிட்ட இருந்தா சத்தம் இல்லாம இருக்கும்...நான் தொட்டா அழ ஆரம்பிச்சிரும். அடுத்த நாள் ஸ்கூல்க்கு போக கூட எனக்கு மனசு வரலை. வீட்ல கெஞ்சி எப்படியோ ஒரு நாள் லீவ் போட்டுட்டு ஜீலிய பார்த்துக்க ஸ்கூல்க்கு மட்டம் அடிச்சிட்டேன்.


இப்படியே பக்கத்தில் இருந்து என்னோட ஃப்ரெண்ட்ஷிப்ப வளர்த்துட்டேன். அதுல இருந்து எனக்கு ஜூலி தான் எல்லாம். ஸ்கூல்ல நடக்குறது, ஃப்ரெண்ட்ஸ் பத்தி, கார்ட்டூன்ல, பாப்பாய் ஷோ, சிம்சன்ஸ், பத்தி எல்லாம் சொல்லுவேன். அவளும் ஏதோ புரியற மாதிரி வைத்த கண் மாறாம என் முகத்தையே பார்த்துட்டு இருப்பா. நான் பாட்டுக்கு படிச்சுட்டோ எழுதீட்டோ இருந்தா... அப்பா டீவி பார்க்கும் போது அவர் கிட்ட போய் உட்கார்ந்துட்டு, அங்க இருந்து என்னையே பார்த்துட்டு இருப்பா.... பவ்வ்வ்னு ஒரு சத்தம் குடுத்து, தான் இருக்கறதை எனக்கு நியாபகப்படுத்துவா. அப்பப்போ அவ கூட நான் ஏதாவது பேசனும். தண்ணி வேனும்னாலோ, பசிச்சாலோ, கிச்சன்ல போய் அம்மா கிட்ட போய் நிப்பா.

தில்லியில இருக்கறப்போ, நாங்க மூனு பேரும் போய்ட்டா அவ பேசாம சோஃபால படுத்துட்டு இருப்பா...அவளுக்காக ஃப்ரென்ச் வின்டோல ஒன்னை மட்டும் திறந்து வச்சுட்டு போவோம். அவ வேடிக்கை பார்க்குறதுக்கு. மூனு பேர்ல யார் எந்த நேரத்துல வருவாங்கன்னு நல்லா தெரியும். அப்பா வர்ரதுக்கு லேட்டானா ரெஸ்ட்லெஸ்சா பால்கனிக்கும் கதவுக்கும் ஓடீட்டு இருக்ப்பா. மூனு மணி ஆனா நான் வர்ரனானு ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துட்டு இருப்பா. என்னை பார்த்தா போதும் ஓடிப்போய் கதவு பக்கத்துல உட்கார்ந்துப்பா. உள்ளே வந்த உடனே காலை சுத்தி சுத்தி, நக்கி, பிராண்டி அவளோட பிரியத்தை காமிச்சுக்கும். அப்ப ஏற்படற சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அது எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன்.


இதை எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கும் போது, ஜூலி ஒரு நாள் எங்களை விட்டு போயிடும் னு எனக்கு தோனலை. இப்ப ஜூலி எங்களை விட்டு பிரிஞ்சு 9 மாதங்கள் ஆயிறுச்சு. இந்த உலகத்துல பிறக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் இறக்கத்தான் போறாங்க. ஆனாலும் ஜூலி இவ்ளோ சீச்கிரம் போய்டும் நான் எதிர்பார்க்கலை. அது அம்மா மடியில படுத்துட்டு இருக்கும்போது அம்மா முகத்துல தெரிஞ்ச ஒரு நிம்மதிய பார்த்து நான் ரொம்ப நாள் ஆச்சு. யார் யாரோட எப்படி பழகனும், அவங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்குற ஒரு ஜீவன் இனி எனக்கு கிடைக்காது.


எதிர்காலத்துல படிப்பு, வேலை, நண்பர்கள் னு எத்தனையோ விஷயங்கள் எனக்கு வந்து போகும். என்னோட உலகமும் இனி விரியும் தான். ஆனா ஜூலி ஏற்படுத்திட்டும்போன அந்த வெற்றிடம், அப்படியே தான் இருக்கும்.

ஜூலியோட ஆத்மாவும் இன்னைக்கு எங்களை நினச்சுட்டுத்தான் இருக்கும்.

I miss you Julie...Love u... Happy Birthday

காலேஜ் போற அவசரத்துல டைப் அடிச்சிட்டு இருக்கேன்...ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கவும்.

6 comments:

கோபிநாத் said...

ஜூலியின் நினைவுகளை அழகாக பகிர்ந்துயிருக்கீங்க. நானும் கூட சேர்ந்து மனசார வாழ்த்து சொல்லிக்கிறேன்.

\\ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கவும்.\\

இது ஜூலியி தான் சொல்லனும் ;))

அ.முத்து பிரகாஷ் said...

எங்களுடன் வீட்டிலிருந்த சக்தி ஞாபகத்திற்கு வருகிறான் தோழர் ... மழைக் காலத்தில் குளிக்க போன போது ஆற்றோடு ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான பகிர்வு அவந்தி..

ஜுலிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

அழகான நினைவுகள் அவந்திகா.. நீங்க பதிவு போட ஜூலியின் நினைவுதான் துணை போல.. வாழ்த்துகள்..

தோழி said...

நிஜத்தில் ஜூலி உங்களை விட்டு போய்விட்டாலும், உங்களின் நினைவுகளில் என்றென்றும் ஜூலி பொக்கிஷமாய் இருக்கிறாள், இருப்பாள்...

இனி தொடர்ந்து எழுதுங்கள், நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து...

வசந்த் said...

Well done Avanthi... yes julie was very loving and cute... I spent an half a day with julie when she was in Delhi... very loving dog...