ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப பையன் கல் தடுக்கி கீழ விழுந்துட்டான். அடி பட்டதுனால ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுச்சு. பையன் சத்தம் வர்ர திசைய பார்த்து '' நீ யார்'' அப்படீன்னு கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கம் இருந்து '' நீ யார்'' னு கேட்டுச்சு.
பையன் '' நான் உன்னை அட்மையர் பண்றேன் '' னு சொன்னான். அந்தப் பக்கமும் அதே திரும்ப வந்துச்சு. பையன் '' நீ ஒரு கோழை" அப்படீன்னு சொன்னான். அதே திரும்ப கேட்டுச்சு.
பைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவங்க அப்பா கிட்ட கேட்டான். '' அது யாரு, நான் சொல்றது எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். அவங்க அப்பா சொன்னார் அது யாரும் இல்லை. அது எதிரொலி. ஆனா இது தான் வாழ்க்கையும்னு சொன்னார்.
அப்பா சொன்னார் '' நீ என்ன எல்லாம் கொடுக்கறியோ அது தான் திரும்ப கிடைக்கும். உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கோ அப்படித்தான் உன் கிட்ட பழகறவுங்களும் இருப்பாங்க. உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையை தான் கொடுக்கும். நீ உன்னை சுத்தி இருக்குறதை ரசிச்சேனா வாழ்க்கையும் ரொம்ப ரசுக்கும் படியா இருக்கும்'' னு சொன்னார்.
7 comments:
எப்படி...எப்படி இதெல்லாம்....
அம்மாகிட்ட சொல்லி ச்சுத்திப் போடச்சொல்லனும்....ஹி..ஹி....
தேங்கஸ் அண்ணா..
அண்ணா எழுதறதுக்கே திட்டு வாங்கீட்டு இருக்கேன்... இது சொன்னா..என்ன சுத்தி சுத்தி தூர போட்டுறுவாங்க..:-))
//என்ன சுத்தி சுத்தி தூர போட்டுறுவாங்க..:-))//
:-)) என்னாத்துக்கு போடணும், இப்பவே எழுத நல்லா பயிற்சி எடுத்துட்டு இருக்கிறது பிடிக்கலையா அப்ப அவங்களுக்கு...
அருமையான கதையின் மூலம் வாழ்வின் நெறி, அவந்தி! சூப்பர்ப்... இந்த கதையில் சொன்னது போலவேத்தான் நம் வாழ்வும். நம் எண்ணங்கள்தான் உருபெற்று அது நம்மோட நண்பர்களாகவும், வாழ்கையாகவும் அமைகிறது நம்மைச் சுற்றியும் :-)
thanks theka anna..:-)
எங்கேயிருந்தும்மா கதையெல்லாம்.... ரொம்ப நல்லா எழுதுற. Keep it up. சூப்பர் எதிரொலி.
ஏன் இப்ப எல்லாம் கதை எழுதறதில்லை?
நல்லா எழுதியிருக்கீங்களே..ஆனா ரொம்ப நாளா எழுதாத மாதிரி இருக்கு.. எழுதுங்க அவந்திகா
Post a Comment