நாங்க ரொம்ப விரும்பி பார்க்கிறது மேகங்கள்தான்...பார்க்க பார்க்க புதுசு புதுசா கதை சொல்ற மாதிரி தோனுமில்ல?. ஒவ்வொன்னும் ஒரு ஷேப்ல. மேகங்களைப் பார்த்து ஒவ்வொருத்தருக்கும் என்ன தோனுதுன்னு பேசிக்குவோம். எங்களுக்கு அது தான் entertainment.
மேகங்கள் பேசிக்கா 2 வகைகள் இருக்கு stratus clouds & cumulus clouds.. மேகங்களோட ஆல்டிட்யூட் பொருத்து இது இன்னும் நாலு பிரிவுகளா பிரிக்கபட்டிருக்கு.
இதுல ஒரு சப் டைப் தான் மாமடஸ் மேகங்கள் (mammatus clouds) . இதப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா....பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கும்.. படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல?.. ஆனா சுன்லைட் உள்ள இருந்து வர்ரதுனால இது அப்படி இருக்கு. பைகள் மாதிரி இருக்கும்.
பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கு.. ஆனா சூரிய வெளிச்சத்துனால இது அப்படி இருக்கு.
14 comments:
Wow! Excellent Post, Avantika!
Keep Up!
அவந்தி,
சூப்பர்ப் படங்கள். ரொம்ப கவிதைத்துவமா இருக்கு. என்ன மேகங்களின் மீது ஆராய்ச்சியில் இறங்கியாச்சா? பேசமா, ஒரு மெட்டிராலாஜிஸ்டுக்கு படிக்கப் போக வேண்டியதுதான் ட்டி.வியில வேலை பார்க்கலாம் :-).
ஒரு குறிப்பு, இரண்டு தடவை ....படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல?.. ... ரிபீட் ஆகியிருக்கு ஒண்ண தூக்கிடுப்பா.
அவந்திகா
நான் இன்னிக்குத்தான் உங்க பதிவை பார்த்தேன். ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. சின்ன வயசுல எனக்கு கூட மேகம் பார்க்க பிடிக்கும், அதனோட வடிவத்தை யானை, குதிரை, ரதம் மாதிரி இருக்கு கற்பனை பண்ணி பார்ப்போம். நல்ல படங்கள்
தேங்கஸ் சிவபாலன் அண்ணா
இயற்கை நேசி அண்ணா..நல்லா இருக்கா..இன்னும் இருக்கு மாமடஸ் பத்தி எழுத.. ஆனா தமிழ்ல எழுத தெரியலை...ரொம்ப டெக்னிக்கல் வார்த்தைகள் தெரியலை..தேங்கஸ் அண்ணா
பத்மா அக்கா தேங்க்ஸ்
இப்பத்தான் இதப்பத்தியெல்லாம் கேள்விப்படறேன்....
ஆச்சர்யமா இருக்கு...
அருமையான தகவல் எல்லாம் திரட்டித் தரும் அவந்திகாவுக்கு..."தகவல் திலகம்" பட்டம் கொடுக்கலாம்னு முன் மொழியறேன்...
வழிமொழியறவங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா.....ஹி..ஹி...
பங்காளி அண்ணா..அந்த 5 கப்ல ஒரு கப் குடிபீங்க இல்ல...:-))
தேங்க்ஸ் Delphine aunty..
நீங்கதான் வாங்கி குடுக்கனும் பங்காளி அண்ணா கிட்ட..:-))
அவந்திகா ,
என்னோட அடுத்த பதிவா வர வேன்டியது( ரொம்ப நாளா கிடப்பில் இருக்கு) இந்த மேகங்கள் , அதுக்கு முன்ன போட்டு கவுதாச்சு என்னை:-((
போட்டது தான் போட்டிங்க ஒழுங்கா முழுசா போட்டு இருக்க வேணாமா?
ஜெனிரா , அதுக்குள்ள ஸ்பீஸிஸ் , அப்புறம் வெரைட்டி என்று எத்தனை இருக்கு மேகத்துகுள்ள, அதை எல்லாம் யோசித்து தான் எப்படி போடாலாம்னு இருந்தேன் , அதுகுள்ள முந்திகிட்டிங்க , எப்படி இருந்த போதிலும் மேகம் என்பதற்கும் வகைப்பாடு இருக்கும் என அறிவித்ததற்கு நன்றி!
எத்தனையோ தடவைகள் மேகங்களைப் பார்க்கிறோம். அவை நம் வாழ்க்கையின் உடன்பிறப்பாகி
விட்டதை உணர்கிறோம். விமானத்தில் பறக்கும் பொழுது, கீழே மேகம்--மேலே நாம் என்கிற நிலை.
விமானத்தின் துளியூண்டு ஜன்னலின்
வழி மேகக்கூட்டத்தைப் பார்த்தபொழுது
ஆச்சரியமாய் இருந்ததுண்டு. ஆனால்,
உங்கள் காமாராவில் நீங்கள் சிறைப்படுத்தியிருக்கும் மேகப்பதிவுகள், பஞ்சுப்பொதிகளை
ஒத்த அவற்றின் அழகு, மனசைக்
கொள்ளை கொண்டன.
நல்ல பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள். "பூங்கா"க்காரர்களே,
இங்கே பாருங்கள்!...
வவ்வால் அண்ணா..
நான் ஒன்னுமே எழுதலை... மேகங்கள் பத்தி எனக்கு இவ்வளவு தான் தெரியும்..மாமடஸ் பற்றிய படங்கள் தான் எனக்கு கிடச்சது..எப்பவோ ஒரு தடவை National Geographic Channel ல பார்த்தது..அப்புறம் இப்ப மெயில்ல இந்தப் படங்கள் வந்துச்சு..அதுனால போட்டேன்...மாமடஸ் னு தமிழ்ல சொன்னது கூட சரியா தப்பான்னு தெரியலை...இதுக்கு மேல எனக்கு எழுத தெறியலை...
நீங்க எழுதுங்க...மேகம் எப்படி
ஃபார்ம் ஆகுதுன்னு ஆரம்பிச்சு
எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜக்ட்.. ஆனா இதுக்கு மேல தமிழ்ல எழுத தெரியாது அண்ணா..நீங்க எழுதுனா நான் இன்ட்ரெஸ்டா படிப்பேன்..
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா
ஜீ வி அண்ணா...
:-))).. இது எல்லாம் நான் படம் எடுக்கலை...இது நம்ம ஊரே இல்லை... மெயில்ல வந்துச்சு.. தேங்க்ஸ் அண்ணா
hai i am new for this blog world i was close relation to nammakal shibi.i like your posts they are really usefull. thank u...
வாவ்...அருமை அருமை...இது போல வித்தியாசமான பதிவுகளை தொடுத்து இருக்கீங்க...தொடர்ந்து எழுதுங்க
Post a Comment