Friday, August 3, 2007

கோபப் படாதீங்க யாரும்....


ராமனுக்கு எப்பவும் பயங்கர போபம் வரும்....அவங்க அப்பா இவன எப்படியாவது திருத்தனும்னு, ஒரு பை நிறைய ஆணிகளை குடுத்து, ராமன் கிட்ட "உனக்கு எப்ப எல்லாம் கோபம் வருதோ, அப்ப எல்லாம் சுவர்ல ஒரு ஆணி அடி'' ன்னு சொன்னார்.


முதல் நாள் சுவர்ல 37 ஆணி இருந்துச்சு. ஆனா நாள் ஆக ஆக அவன் கோபம் குறைய ஆரம்பிச்சது. ஏன்னா ஆணி அடிக்கிறது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அத்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டான். ஒரு நாள் சுத்தமா கோபம் குறைஞ்சு போச்சு.


அவங்க அப்பா கிட்ட போய் ரொம்ப பெருமையா சொன்னான். ''நான் இப்ப எல்லாம் ஆணியே அடிக்கிறதில்லை'' னு.
அவங்க அப்பா ராமன் கிட்ட'' ரொம்ப சந்தோஷம்...சரி இப்ப அடிச்ச ஆணி எல்லாம் பிடிங்கி எதுத்துடு'' ன்னு சொன்னார்.

ஆணி எல்லாத்தையும் சுத்தமா பிடுங்க ரொம்ப நாள் ஆச்சு. எல்லா ஆணியையும் பிடிங்கின அப்புறம் ராமன் அவங்க அப்பா கிட்ட போய் சொன்னான். அவங்க அப்பா ''ஆணி எல்லாம் சுத்தமா எடுத்திட்டே... ஆனா ஆணி அடிச்ச சுவற்றில ஏற்பட்ட ஓட்டைகள் உன்னால சரி படுத்த முடியுமா?.. முடியாதில்ல?...முதல்ல இருந்த அழகு இப்ப இருக்கா?.. அது மாதிரி தான் எத்தனை தடவை 'சாரி" சொன்னாலும், கோபத்துல விட்ட வார்த்தைகள திரும்ப வாங்க முடியாது, அதனால ஏற்பட்ட மக்கஷ்டமும் மாறாதுன்னு" சொன்னார்.


அதனால..குட்டீஸ்...அண்ணா....அக்கா.....யாரும் போபப்படாதீங்க.. அப்ப தான் நீங்களும் அழகா இருப்பீங்க...மத்தவங்ககிட்ட நம்ம ரிலேஷன்ஷிப்பும் அழகா இருக்கும்...
......:-))))))"It is natural for the immature to harm others.

Getting angry with them is like resenting a fire for burning."

30 comments:

பங்காளி... said...

வ்வாவ்...அசத்தல் கதை...

எனக்கெல்லாம் அத்தனை சீக்கிரத்துல கோவம் வராது...என்னவோ ரெண்டு மூணு நாளா கையில சிக்கறவன எல்லாம் பிரிச்சி மேஞ்சிட்டு இருந்தேன்...ம்ம்ம்....யோசிக்க வச்சிட்டீங்க ஆத்தா!

நெம்ப டாங்ஸ்...

பித்தானந்தா said...

இன்னிக்கு நான் எழுத நினைச்ச விஷயம்!

அழகா ஒரு கதைல சொல்லிட்டீங்க!

வெரி குட்!

கண்மணி said...

சூப்பரான கருத்து அதைவிட சூப்பரான கதை அவந்தி.
ஆனாலும் உன் மேல அக்காக்கு கோபம் வருதே;)
குட்டீஸ் ஜங்ஷனும் கொஞ்சம் கண்டுக்கம்மா ஓகே

அவந்திகா said...

பங்காளி அண்ணா உங்களுக்கு கோவம் வந்துச்சா?...

இனிமேல் வராது இல்லண்ணா?..

வர்ரப்போ எல்லாம் என்னை நினச்சுகோங்க அண்ணா...என்னன்னா இந்தப் போஸ்ட்ட..:-)))

அவந்திகா said...

தேங்க்ஸ் பித்தானந்தாஜி... நீங்க எந்த ஆஷ்ரமத்தில இருந்து வந்து இருக்கீங்க?

அவந்திகா said...

கண்மணி அக்கா..இந்த கதை குட்டீஸ் ஜங்ஷன்ல தான் போட நினச்சே... அமத்தி போட்டுட்டேன்...போஸ்ட் பண்ண அப்புறம் தான் பார்த்தேன்.. இதுக்கு நீங்க கோபப் படலாம்..

சாரி அக்கா..ட்யூஷன்...சோச்சிங்க் கிளாஸ் எல்லாம்..அதான் வர முடியலை...மார்க் கம்மி ஆயிட்டா அதுக்கும் கோவம் வரும் இல்ல உங்களுக்கு..:-))

ILA(a)இளா said...

அடடே போட வெச்ச கதை. நல்ல கருத்து.

பித்தானந்தா said...

//தேங்க்ஸ் பித்தானந்தாஜி... நீங்க எந்த ஆஷ்ரமத்தில இருந்து வந்து இருக்கீங்க?
//

பித்தாஸ்ரமத்திலிருந்துதான்!

பித்தானந்தா said...

//சாரி அக்கா..ட்யூஷன்...சோச்சிங்க் கிளாஸ் எல்லாம்..அதான் வர முடியலை...மார்க் கம்மி ஆயிட்டா அதுக்கும் கோவம் வரும் இல்ல உங்களுக்கு..:-)) //

கோபம் வரும்போது நல்லா கலகலன்னு வாய்விட்டு சிரிக்கணும்! அப்புறம் கோபம் தன்னால போயிடும்!

ஒரு முக்கியமான விஷயம்!

கோபம் நமக்கு வரும்போதுதான் சிரிக்கணும். அடுத்தவங்களுக்கு வரும்போது அல்ல!

அவந்திகா said...

பித்தானந்தாஜி...

பித்து ன்னா '' ஒரு மாதிரி '' இருக்கிறது தானே... அப்ப உங்க ஆஷ்ரமத்துல எல்லாரும்ம்ம்?..:-))

ஆனா பித்தானந்தாஜி..எனக்கு சிரிப்பு வருமே..மிஸ் கோபப்படும்போது.. என்ன பண்ண...:-))

அவந்திகா said...

தேங்க்ஸ் இளா அண்ணா

பித்தானந்தா said...

//பித்து ன்னா '' ஒரு மாதிரி '' இருக்கிறது தானே... அப்ப உங்க ஆஷ்ரமத்துல எல்லாரும்ம்ம்?..:-))
//

எங்க ஆஸ்ரமமே கீழ்ப்பாக்கத்துலதான் இருக்கிறது!


//ஆனா பித்தானந்தாஜி..எனக்கு சிரிப்பு வருமே..மிஸ் கோபப்படும்போது.. என்ன பண்ண...:-)) //

உங்களுக்குச் சிரிப்பு வரும்போது அவங்களையும் சிரிக்க வைக்கணும்! இல்லாட்டி அவங்க கோபம் அதிகமாகும் வாய்ப்பு இருக்கு!

ஆனா உங்க சிரிப்பை பார்த்தா கண்மணி டீச்சரும் சிரிச்சிடுங்கண்ணுதான் நினைக்கிறேன்!

அப்புறம் நீங்க "ஜி"ன்னெல்லாம் சொல்லி என்னை ரொம்ப பெரியவனாக்க வேண்டாம்.

நானும் உங்களில் ஒருவன்தான். சும்மா பித்ஸ் னு சொன்னாலே போதும்!

அவந்திகா said...

ஓ அப்படியா...ஒகே பித்ஸ்..:-))

TBCD said...

சொ ஓ சுவீட்.... நல்லா இருக்கு...

மகேந்திரன்.பெ said...

நான் உள்ள வரலாமா கோச்சுக்க மாட்டீங்களே?

அவந்திகா said...

தேங்ஸ் TBCD

மகேந்திரன் அண்ணா...என்ன அண்ணா இப்படி கேட்டுட்டீங்க.. வாங்க வாங்க

காட்டாறு said...

ரொம்ப நல்ல கதை அவந்தி. நமக்கு கோபம் வராதுங்க. அப்படியே வந்தாலும் அமைதி தான் நம்ம ஆயுதம்.

இந்த கதைல ஆணி வருதே.. இதுல உள்குத்து எதுவும் இல்லீங்களே. ஏன்னா ஆணி பிடுங்குறவங்க தமிழ்மணத்துல நெறைய பேருன்னு கேள்வி பட்டிருக்கேன். ;-)

அவந்திகா said...

காட்டாறு அக்கா..தேங்க்ஸ் அக்கா..

இங்க நிறைய பேர் ஆணி பிடுங்கறாங்களா..அப்பட்டீன்னா என்ன?...அப்படீன்னா எல்லாருக்கும் கோபம் வருமா ?...

கண்மணி said...

ஆமாம் அவந்தி படிப்பு ஃபர்ஸ்ட் பிளாக் நெக்ஸ்ட் ஓகே.
எங்க அவந்தி பேரு ரேங்க் ஹோல்டர்னு பேப்ப்பர்ல வரனும் சரியா இல்லாட்டி அக்கா ;) ஆண்ட்டிக்கு கோபம் ;)

அவந்திகா said...

thanks Kanamani akka...i will try my best

அபி அப்பா said...

ஓக்கே அவந்தி! நான் கோபமே பட மாட்டேன்! சரி உள்ளூர்லயே இருக்கும் முத்துலெஷ்மியக்கா இந்த பதிவு பக்கமே காணுமே:-)))

தஞ்சாவூரான் said...

தங்கச்சி, எனக்கும் அப்பப்போ கோவம் வரும். நல்ல வேளை, யாரும் எங்கிட்ட ஆணி குடுக்கலே!!

நல்ல கதை... அடிக்கடி குட்டிக் கதைகளெ போடுங்க.... இல்லே....ஹ்ம்ம்ம்ம்ம் எனக்கு கோவம் வந்துச்சுன்னா..... :)

Anonymous said...

very good story sister..

கோபிநாத் said...

\\அது மாதிரி தான் எத்தனை தடவை 'சாரி" சொன்னாலும், கோபத்துல விட்ட வார்த்தைகள திரும்ப வாங்க முடியாது, \\

இப்போதைக்கு தேவையான கதை தான் தங்கச்சிம்மா ;-))

சூப்பர்!

இராம் said...

ஏற்கெனவே இதை படிச்சிருக்கேன்.... ஆனா இன்னொரு தடவை படிக்கவும் நல்லாதான் இருக்கு.... :)

அவந்திகா said...

அபி அப்பா..தேங்க்ஸ்...லட்சுமி அக்கா பிஸி போல இருக்கு.. இல்லன்னா இதுக்குள்ள வந்து இருப்பாங்க...

அவந்திகா said...

//தஞ்சாவூரான் said...
தங்கச்சி, எனக்கும் அப்பப்போ கோவம் வரும். நல்ல வேளை, யாரும் எங்கிட்ட ஆணி குடுக்கலே!!//

நல்ல வேளையா?...சரி அண்ணா..நான் குடுக்குறேன்...பார்க்கலாம்..:-))

தேங்கஸ் அனானி..

கோபி அண்ணா...என்ன இப்ப தேவை... நீங்க கோபப்பட்டீங்களா?

தேங்க்ஸ் இராம் அண்ணா...

முத்துலெட்சுமி said...

கதையும் நீதியும் நல்லா இருக்கு..அவந்திம்மா.

அபி அப்பா எனக்கு என்ன்மோ சேதி சொல்லி இருக்கீங்களே..கோபம் எனக்கு அதிகமா வராது..வந்தால் ரொம்ப வும் நியாயமாவரும்...வந்தால் யாரையும் புண்படுத்துவதில்லை...
எதனால் கோபம் வந்தது என்று நேரடியாக சொல்லி அந்த தவறை செய்யாதீர்கல் இனிமேல் என்று நிதானமாக சொல்லிவிடுவேன்.

அவந்திகா said...

thanks lakshmi akka

Anonymous said...

என்ன அவந்திகா எப்ப வந்து எங்களுக்கெல்லாம் கதை சொல்லப்போறீங்க???