Thursday, August 2, 2007

அதிசியமான இரட்டை குழந்தைகள்

ஓஹியோ வில பிறந்த இரடை குழந்தைகள் கதை மாதிரி ஆதிசியமான, இன்டரெஸ்டிங்கான வேற கதை இருக்காது।

இந்த இரட்டை குழந்தைகள் பிறந்த போது அவங்கள வேற வேற குடும்பங்கள் அடாப்ட் பண்ணிட்டாங்களாம்।

இரண்டு பேருக்குமே ஜேம்ஸ் னு பேர்வச்சிருக்காங்க। ஆனா இரண்டு குடும்பத்துக்கும் தெரியாது।

பெரியவங்க ஆன அப்புறம் ரெண்டு பேருமே லா படிச்சாங்களாம்।

ரெண்டு பேருக்கும் மெக்கேனிக்கல் ட்ராயிங்கும் தட்டச்சு வேலையும் நல்லா வந்துச்சாம்।

ரெண்டு பேரோட மனைவி பேரும் லிண்டா.

ரெண்டு பேரும் அவங்க மகனுக்கு ஆலன் னு பேர் வச்சு இருக்காங்க.

ரெண்டு பேரும் முதல் மனைவிய டைவ்ர்ஸ் பண்ணீட்டு, இரண்டாவது கல்யாணம் பண்ணாங்க, அவங்க பேரு பெட்டி (betty)

முக்கியமானது அவங்க ரெண்டு பேரோட நாய்குட்டி பேர் டாய் (toy)..:-))

40 வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் சந்திச்சப்போ, அவங்க லைஃப்ல எல்லாமே ஒரே மாதிரி நடந்தது நினச்சு ஆச்சிரியமும் சந்தோஷமும் பட்டாங்களாம்

(Source: Reader's Digest, January 1980)

10 comments:

Anonymous said...

மேட்டர்...ஸ்வாரஸ்யமாயிருக்கு...நைஸ்...

தமிழ்ல எழுதிருக்கலாம்....ட்ரை பண்ணுங்க அம்மனி...

காட்டாறு said...

அடடே... கலக்கலா இருக்குதே. ரொம்ப ஆச்சரியமா இருக்குதில்ல.

எங்க ஊருல 2 வருடங்களுக்கு முன் ஒரு பள்ளிக் கூடத்தில் ரெட்டையர்கள் பற்றி கணக்கெடுப்பு நடந்தது. நம்புறீங்களா? அந்த பள்ளியில் மொத்தம் 43 இரட்டையர்கள் இருந்தனர். சன் டீவியில் வந்தது இந்நிகழ்ச்சி. இதுல நம்மூட்டு குழந்தைகளும் உண்டு. ;-)

Avanthika said...

தேங்கஸ் அண்ணா..
தமிழ்ல எழுதிட்டேன்...நல்லா இருக்காண்ணா..

முதல்ல ட்ரை பண்ணிட்டு பயந்துட்டு விட்டுட்டேன்...:-)

Avanthika said...

தேங்கஸ் அக்கா..

43 பேர் இருந்தாங்களா....

இங்க எங்க வீட்ல Bottled water கொண்டு வர்ர பசங்க ரெண்டு பேர்..ட்வின்ஸ்... ரொம்ப நாள் கழிச்சு தான் எங்களுக்கு தெரிஞ்சது ரெண்டு பேர் இருக்காங்கன்னு
ஏன்னா எப்பவும் ஒருத்தன் தான் பேல வருவான் தண்ணி பாட்டில் எடுத்துட்டு..
கண்டுபிடிக்கவே முடியாது... ஜீன்ஸ் படத்துல செந்தில் முழிக்கிற மாதிரி அம்மா முழிப்பாங்க...:-))).. அது தான் ஹைலைட் அக்கா..

பங்காளி... said...

அவ்...அவ்...அவ்....

(அளுவாச்சி...ஹி..ஹி..)

நல்லா வந்திருக்கு

Avanthika said...

பங்காளி அண்ணா...

அய்யோ..ஏண்ணா அளுகரீங்க
நல்லா இல்லையா... அளுகாதீங்க
இனிமேல் ட்ரான்ஸ்லேட் பண்ண மாட்டேன்..

இப்படித்தான் ஸ்கூல்ல நாங்க composition note ல ட்ரான்ஸ்லேட் பண்ணா மிஸ் அளுவாங்க.. அது மாதிரி நீங்களும் அளுகரீங்க..:-))

அபி அப்பா said...

அவந்தி! இந்த பதிவை எப்படி விட்டேன்! வர வர ஆபீஸ்ல ரொம்ப கொடுமை படுத்தறாங்கப்பா வேலை செய்ய சொல்லி:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது மாதிரி நிஜத்தில் நடப்பது அதிசயம் தான்..
இங்க தமிழ்சினிமால தான் இப்படி இரட்டையருக்கு எல்லாமே ஒரே மாதரி நடப்பதாக காண்பிப்பார்கள்..:)

Avanthika said...

அபி அப்பா..
ஆமாண்ணா..என்னையும் படிக்க சொல்லி ரொம்ப நச்சறாங்க.. ச்சே..ச்சே..:-))

Avanthika said...

லட்சுமி அக்கா..தேங்கஸ்..