
ஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.
அப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.
அப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.
அப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.
அது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்



பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கும்.. படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல?.. ஆனா சுன்லைட் உள்ள இருந்து வர்ரதுனால இது அப்படி இருக்கு. பைகள் மாதிரி இருக்கும்.













