ராஜாவும் ராமும் ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரு தடவை அவங்க ஒரு பாலைவணத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை வந்து ராஜா, ராம் கண்ணத்துல அடிச்சுட்டார்.உடனே ராம் கீழ மணல்ல இப்படி எழுதினார்.'' என்னோட உயிர் நண்பன் இன்னைக்கு என்னை கண்ணத்தில் அறைஞ்சுட்டார்'' னு.
இன்னும் கொஞ்சம் நடந்து போயிட்டே இருந்தப்போ ஒரு Oasis வந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இறங்குனாங்க. அப்ப தண்ணிக்குள்ள ராம் மாட்டினதுனால, ராஜா, ராம காப்பாத்தினார். ராஜா காப்பாத்தினதுனால உடனே ராம் அங்க இருந்த ஒரு பாறையில இப்படி எழுதினார் '' என்னோட உயிர் நண்பன் என்னோட உயிர இன்னைக்கு காப்பாதிட்டான்'' னு.
அதுக்கு ராஜா கேட்டார், '' என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் பாறையில எழுதற..'' ன்னு..
அதுக்கு ராம் சொன்னான் '' நமக்கு ஒருத்தர் பண்ண கெடுதல மணல்ல எழுதற மாதிரி மனசுல எழுதினா.. அது மன்னிப்புங்க்குற காத்து அடிச்சு எழுதினது அழிஞ்சு போகும்.. ஆனா ஒருத்தர் செய்த உதவியை நாம பாறையில எழுதற மாதிரி மனசுல வச்சுக்கனும். காலத்துக்கும் மறக்க கூடாது'' னு சொன்னார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கும்.. படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல?.. ஆனா சுன்லைட் உள்ள இருந்து வர்ரதுனால இது அப்படி இருக்கு. பைகள் மாதிரி இருக்கும்.


















