Friday, September 14, 2007

நானும் போட்டிக்கு...கலர் காமிக்குறேன்

எல்லாரும் போட்டோ புடிச்சு போடறாங்க..

அதான் அவங்களுக்கு போட்டியா நானும்

எங்கே இருந்து எல்லாமோ புடுச்சி போட்டுட்டேன்..


எனக்கும் பரிசு உண்டா...

எங்க இருந்து புடிக்கனும்னு ரூல்ஸ்ல சொல்லலை இல்ல..:-))




































Friday, September 7, 2007

நீங்க பென்ஸிலா இருப்பீங்களா?


இன்னைக்கு படிச்ச ஒரு விஷயம்.

நாம எப்பவும் ஒரு பென்சில் மாதிரி சில முக்கியமான குணங்களோட இருக்கனும்.

எப்படி.

நம்மை சீவ சீவ தான், அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தான் நாம் பல விஷயங்களை புரிஞ்சுக்க முடியும். இலக்கை அடைய பல உத்திகள் கிடைக்கும் முடியும்.

பென்சில்ல தப்பா எழுதினா உடனே நாம அதை இரேஸர் வச்சு அழிச்சிடறோம். அது மாதிரி நாம செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்திக்கனும்.

பென்சில் வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே எப்படி இருக்கோ அப்படி தான் கையெழுத்தின் தரம் இருக்கும். அது மாதிரி நம் எண்ணங்கள் எப்படி இருக்கோ அப்படித்தான் நம் நடத்தையும் இருக்கும்.நல் எண்ணங்களே நல்ல வாழ்க்கைய குடுக்கும்.

நாம ஏதாவது ஒரு சக்தி மேல நம்பிக்கை வச்சு நம்மள அந்த சக்தி கிட்ட நம்மள ஒப்படைக்கனும். அதன் வழி நடத்தல் படி நடக்கனும். பென்ஸில் யாரு கையில இருந்தாலும் அவங்க கை போற போக்கில போறதுனால தான் அதோட வேலைய செய்ய முடியுது. இல்லன்னா அதுக்கு மதிப்பு இல்ல.பென்சில் நம்ம கையில வந்தப்புறம் தானே பெரிய ஆள் ஆகுது. அது மாதிரி.

பென்ஸில்லால எங்க எழுதினாலும் அது ஒரு மார்க் விட்டுடுது. அது மாதிரி நாம பண்ற வேலைகளிலும் நாம நம்ம முத்திரைய பதிக்கனும். அந்த வேலை எங்க, எப்படி, யாருக்காக இருந்தாலும் சரி. என்ன ஆனாலும் எந்த நேரத்திலும், யார் கையில இருந்தாலும் பென்ஸில் அதோட வேலைய சரியா செஞ்சுதில்ல. அது மாதிரி.

நம்ம கிட்ட இருக்குற நல்ல குணங்கள் யாருக்கு வேனா உபயோகப் படுற மாதிரி நம்ம அனுகுமுறை இருக்கனும். (Anybody should access the gifts (good qualities) in you possess).நம்ம உதவி ஒருத்தருக்கு வேனும்னா, எதையும் யோசிக்காம நம்மனால செய்ய முடியற உதவியா இருந்தா அது நம்ம கடமையா நினச்சு செய்யனும்.

நீங்க பென்சிலா இருப்பீங்களா?

Wednesday, September 5, 2007

ஓட்டை பானை- The Cracked Pot


ஒரு ஊர்ல ஒரு அம்மா தினமும் ரெண்டு பானைல தண்ணி எடுத்துட்டு வந்து ஒரு கோயிலுக்கு குடுத்துட்டு இருந்தாங்க. அது தான் அவங்களுக்கு வேலை. அவங்க வச்சுட்டு இருந்த ரெண்டு பானைல ஒன்னு ஒட்டை பானை. ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. நல்லா இருந்த பானை, ஓட்டை பானைய பார்த்து '' பாரு உன்னால பாதி தண்ணியத்தான் குடுக்க முடியுது. மீதி கீழ தான போகுது. உன்னை சுமந்துட்டு வர்ரது வேஸ்ட் அப்படின்னு'' சொல்லிச்சு. ஓட்டை பானைக்கு மனசு கஷ்டம் ஆய்டுச்சு.

மனசு கஷ்டமா இருக்குன்னு அந்த அம்மா கிட்ட ஓட்டை பானை சொல்லுச்சு '' அம்மா என்னை ஏன் சுமந்துட்டு வர்ரே, நான் தான் உனக்கு உபயோகம இல்லையே. என்னை மன்னிச்சுடு. நீ சுமந்துட்டு வரும்போதே பாதி தண்ணீர் கீழ போயிடுதே'' ன்னு சொல்லி அழுதுச்சு.

அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க '' நாளைக்கு உன்னை சுமந்துட்டு வர்ரப்போ உன் பக்கம் பார்த்துட்டே வா, அப்ப புரியும்'' னு சொன்னாங்க.
அடுத்த நாள் அந்த அம்மா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர்ரப்போ பக்கத்துல பார்த்துட்டே வந்துச்சு ஓட்ட பானை. ஒன்னும் தெரியலை. வழி பூராவும் நிறைய பூக்களோட செடிகள் மட்டும் இருந்துச்சு. ஆனா மனசுக்குள்ள வருத்தம் மட்டும் போகவே இல்லை. கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அந்த அம்மா '' பானை ஓட்டை ஆனதும் உன்னை சுமந்துட்ட வந்த வழியெல்லாம் சின்ன சின்ன செடிகள் வச்சேன். அது இப்ப இவ்வளவு அழகா பூக்களோட இருக்கு பார்த்தியா. அதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லனும். இல்லன்னா இத்தன தூரத்துக்கு நான் ஒவ்வொரு செடியா தண்ணி ஊத்தரது கஷ்டம் தானே. உன்னால தானே சாமிக்கு அழகா மாலை கட்டி போட முடியுது.. பாரு சாமி எவ்வளவு அழகா இருக்கார்" அப்படீன்னு சொன்னாங்க.

அப்புறம் ரெண்டு பானைகள் கிட்டேயும் ''யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும். பாரு அந்த பூக்கள் வச்சு கட்டுன மாலைனால தான் சாமி அழகா இருக்கார் ' அப்படீன்னு சொன்னாங்க.

Friday, August 31, 2007

நம் மதிப்பு - கதை


ஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.

அப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.

அப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.

அப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.

அது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்

Thursday, August 30, 2007

வெற்றியும் தோல்வியும் -பீர்பால் கதை


பீர்பால் கிட்ட எப்பவும் தோத்துட்டே இருந்த அக்பர், ஒரு நாள் எப்படியாவது பீர்பால முட்டாள ஆக்கி தோக்கடிக்கனும்னு நினச்சார். குறுக்குவழியில பீர்பால தோற்கடிக்க நினச்சு மாளிகையில இருக்குற எல்லார்த்தையும் வர சொன்னார்.

ஒரு குளத்து கிட்ட போய் இப்ப எல்லாரும் குளத்துகுள்ள குதிச்சு வெளியே வர்ரப்போ ஒரு முட்டை எடுத்துட்டு வரனும்னு உத்தரவு போட்டார். முதலிலேயே பீர்பால் தவிர மற்ற எல்லார் கையிலேயும் ஒரு முட்டைய குடுத்து வச்சிறுந்தார். அதனால அவங்க குளத்தில் இருந்து வெளியே வர்ரப்போ கையில முட்டை எடுத்துட்டு வந்தாங்க.

குளத்தில் இருந்து வெளியே வந்த எல்லார் கையிலேயும் முட்டை இருக்குறத பார்த்த பீர்பார்லுக்கு அக்பர் தான் எதோ பண்றார்னு புரிஞ்சு போச்சு. அவரும் குளத்துல குதிச்சு வெளியே வந்ததும் மாளிகைக்குள்ள சேவல் மாதிரி பலமா கத்திட்டே போனார்.

அக்பருக்கு பயங்கர கோவம்.
''என்ன பீர்பால், எதுக்கு இப்படி கத்தறே, குளத்துக்குள்ள குதிச்சவுங்க எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துட்டாங்க, உன்னோட முட்டை எங்கே'' அப்படீன்னு கேட்டார்.

அதுக்கு பீர்பால் '' மன்னா! கோழி தான முட்டை போடும், நான் சேவல். குளத்துல குதிச்ச கோழிகள் எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துடுச்சு. ஆனா நான் சேவல்ங்குறதுனால முட்டை கிடைக்கலை'' ன்னு சொன்னார்.

அக்பருக்கு எப்பவும் போல நோஸ் கட். மாளிகைல இருந்தவுங்களுக்கும் இந்த அக்பர் பண்ணின கூத்துனால நம்மையும் கோழின்னு சொல்லிட்டாரே ன்னு அவமானமா போச்சு.

பீர்பால் சொன்னார் " ஜெயிக்கிறது பெரிசு இல்ல எப்படி ஜெயிக்கிறோங்கிறது தான் பெருசு. தோக்கறதும் தப்பு இல்ல, தோல்வியிலும் ஒரு மரியாதை இருக்கனும்னு சொன்னார்"

Sunday, August 26, 2007

எதிரொலி


ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப பையன் கல் தடுக்கி கீழ விழுந்துட்டான். அடி பட்டதுனால ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுச்சு. பையன் சத்தம் வர்ர திசைய பார்த்து '' நீ யார்'' அப்படீன்னு கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கம் இருந்து '' நீ யார்'' னு கேட்டுச்சு.

பையன் '' நான் உன்னை அட்மையர் பண்றேன் '' னு சொன்னான். அந்தப் பக்கமும் அதே திரும்ப வந்துச்சு. பையன் '' நீ ஒரு கோழை" அப்படீன்னு சொன்னான். அதே திரும்ப கேட்டுச்சு.

பைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவங்க அப்பா கிட்ட கேட்டான். '' அது யாரு, நான் சொல்றது எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். அவங்க அப்பா சொன்னார் அது யாரும் இல்லை. அது எதிரொலி. ஆனா இது தான் வாழ்க்கையும்னு சொன்னார்.

அப்பா சொன்னார் '' நீ என்ன எல்லாம் கொடுக்கறியோ அது தான் திரும்ப கிடைக்கும். உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கோ அப்படித்தான் உன் கிட்ட பழகறவுங்களும் இருப்பாங்க. உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையை தான் கொடுக்கும். நீ உன்னை சுத்தி இருக்குறதை ரசிச்சேனா வாழ்க்கையும் ரொம்ப ரசுக்கும் படியா இருக்கும்'' னு சொன்னார்.

Tuesday, August 21, 2007

நன்றி மறப்பது நன்றன்று - கதை

ராஜாவும் ராமும் ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரு தடவை அவங்க ஒரு பாலைவணத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை வந்து ராஜா, ராம் கண்ணத்துல அடிச்சுட்டார்.

உடனே ராம் கீழ மணல்ல இப்படி எழுதினார்.'' என்னோட உயிர் நண்பன் இன்னைக்கு என்னை கண்ணத்தில் அறைஞ்சுட்டார்'' னு.

இன்னும் கொஞ்சம் நடந்து போயிட்டே இருந்தப்போ ஒரு Oasis வந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இறங்குனாங்க. அப்ப தண்ணிக்குள்ள ராம் மாட்டினதுனால, ராஜா, ராம காப்பாத்தினார். ராஜா காப்பாத்தினதுனால உடனே ராம் அங்க இருந்த ஒரு பாறையில இப்படி எழுதினார் '' என்னோட உயிர் நண்பன் என்னோட உயிர இன்னைக்கு காப்பாதிட்டான்'' னு.


அதுக்கு ராஜா கேட்டார், '' என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் பாறையில எழுதற..'' ன்னு..

அதுக்கு ராம் சொன்னான் '' நமக்கு ஒருத்தர் பண்ண கெடுதல மணல்ல எழுதற மாதிரி மனசுல எழுதினா.. அது மன்னிப்புங்க்குற காத்து அடிச்சு எழுதினது அழிஞ்சு போகும்.. ஆனா ஒருத்தர் செய்த உதவியை நாம பாறையில எழுதற மாதிரி மனசுல வச்சுக்கனும். காலத்துக்கும் மறக்க கூடாது'' னு சொன்னார்.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.