ரெண்டு பேர் ஒரு நதியில குளிச்சுட்டு இருந்தாங்க. அப்ப ஒரு தேள் தண்ணீர்ல மூழ்கீட்டு இருக்குறத பார்த்த அதில ஒருவர் அதை காபாத்த நினைச்சார்.
தன் கையாலேயே அந்த தேள எடுத்து கரையில விட்டார். அப்ப தேள் கொட்டீடுச்சு. அப்ப பக்கத்துல இருந்தவர் சொன்னாராம் '' தேள் கொட்டத்தான் செய்யும்..இது தெரியாதா...எதுக்கு அதை தொட்டே'' னு கேட்டாராம்.
அதுக்கு தேள காப்பாத்தினவர் சொன்னாராம் '' அதான் நீயே சொல்லீட்டியே, தேள்னா கொட்டத்தான் செய்யும்னு, அது தேளோட வழக்கம்.. இயற்கை... கஷ்டத்துல இறுக்குறவுங்களுக்கு உதவி செய்யறது என்னோட வழக்கம்...மனிதனா பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய இயற்கை குணம்'' அப்படீன்னு சொன்னாராம்.
இது மாதிரி நாமும் நம்மாளான உதவிகளை, நம்ப மேல நம்பிக்கை வச்சிருக்குறவங்களுக்கு செய்யலாம்...அது எந்த விதத்திலும் தப்பாகாது ன்னு Dalai Lama சொல்லியிருக்கார்.
எல்லார்த்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Note-இது தான் நான எழுதற கடைசி பதிவு / கதை...இது வரைக்கும் என்னை சகிச்சுட்டு இருந்த அண்ணா, அக்கா எல்லார்த்துக்கும் நன்றி...சொன்ன கதை எல்லாம் புக்ல படிச்சதும், நெட்ல இருந்து சுட்டதும் தான்.. அந்த கதையின் கருத்தை நானும் மறக்க மாட்டேன்....நீங்களும் மறக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன். நன்றி.
14 comments:
நல்ல கதை!
எதிலிருந்து சுட்டாலும் சரி, சுட தெரியாத பலர் இருக்கும் உலகில் நல்ல பல விஷயங்களை சுட்டி காட்டுவது ரொம்ப நல்ல செயல்தான் :-)
இந்த ஆண்டின் கடைசிப்பதிவா இது ?
//இந்த ஆண்டின் கடைசிப்பதிவா இது?//
இல்லண்ணா...இதுவே கடைசி பதிவு
நன்றி
நல்ல கதை...
புத்தாண்டு வாழ்த்துக்கள்....
:)
கடைசி பதிவா...ஏம்பா..என்ன ஆச்சு
சூப்பரா கதை எல்லாம் சொல்றீங்க
அதை ஏன் இப்படி நிறுத்தறீங்க... இது ஒரு ரிலேக்ஸேசன்...தொடர்ந்து எழுதுங்க
அவந்தி ஹாப்பி நியூ இயர்.
நல்லா படிங்க எக்ஸாமுக்கு.
அவசரத்துல எழுதினாயா ஏகப் பட்ட தப்பும்மா.ஓகே.ஓகே
எக்ஸாம் முடிஞ்சதும் நேரம் கிடைக்கும் போது எழுது.கடைசி பதிவுன்னு சொல்லாதே கண்ணா
அவந்திக்கா மாசத்துக்கு ஒரு பதிவு மட்டுமாச்சும் போடுங்க. பதிவே போடமாட்டேன்னு சொன்னா எப்படிங்க்கா?
பாப்பா ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு அவந்திக்கா
//Note-இது தான் நான எழுதற கடைசி பதிவு / / :(
ஹேப்பி நியு இயர்ன்னு குட் நியுஸ் சொல்லிட்டு இதென்னது சின்ன புள்ளத்தனமா.. கடைசி பதிவுன்னு :((
விரைவில் அடுத்த பதிவுக்காக நானும் வெயிட்டீஸ் :))
சென்ஷி
எல்லார்த்துக்கும் நன்றி..
கமென்ட் போடலைன்னாலும் கதைகளை தொடர்ந்து படித்து வருபவன்
தெரிந்த விஷயமாக இருந்தாலும் என்னை பல முறை யோசிக்க வைத்த கதைகள்..
உண்மையை சொல்கிறேன்..
இது போல கருத்துக்கள் ஒரு குழந்தையிடம் இருந்து வரும்போது பெரியவர்கள் கண்டிப்பாக மனதில் நிறுத்த வாய்ப்புகள் அதிகம்... சில கதைகள் என்னிடம் கண்டிப்பாக சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.. எழுதுங்க அவந்திகா... சின்ன சின்ன கதைகளாய் எழுதுவதால் நேரமும் அதிகம் பிடிக்காது...படிப்பினூடே இது போல எழுதுவது மனதை லேசாக்கும்..
முடிவினை மறு பரிசீலனை செய்யவும்
நீங்கள் வாழ்வில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Akka we kutties at our home read your stories..because it is simple and short...keep writing akka
thanks
chumma thanea..:-))))
Happy New Year and Dont stop writing..come back..
Post a Comment