Sunday, May 13, 2007

ஒழுக்கம் - ஸென் கதை-8

பேங்க்கீ ன்னு ஒரு ஸென் டீச்சர், ஸென் பத்தி சொல்றப்போ, ரொம்ப மந்திரங்களோ, philosophy எல்லாம் சொல்லாம், அவர் மனச விட்டு, எல்லார்க்கும் பிடிக்கிற மாதிரி பேசறதுனால, அவர் பேசற கூட்டத்தில எல்லாம் நிறைய பேர் வந்து கேட்டுட்டு இருந்தாங்க.

அப்ப இன்னொரு பிரிவ சேர்ந்த சாமியார்க்கு அவர் மேல ஒரு கோவம், வெறுப்பு. இவர் பேசினா மட்டும் இவ்ளோ கூட்டம் வருதேன்னு.

நேரா அவர் கிட்ட போய், உன் மேல மரியாதை வச்சுட்டு இருக்குறவுங்க தான் நீ சொல்றத கேட்பாங்க. எனக்கு உன் மேல மரியாதை இல்ல. அதனால நீ சொல்றத நான் கேட்க மாட்டேன் ன்னு சொன்னார்.

அதுக்கு பேங்க்கீ, "சரி. என் கிட்ட வா, வாதம் பண்ணலாம். ரெண்டு பேரும் பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு பார்க்கலாம்னு சொன்னார்"..

அந்த சாமியாரும் ரொம்ப பெருமையா, அத்தன பேருக்கு முன்னாடி பேங்க்கீ கிட்ட வாதம் பண்ணப் போறோம்னு மேடைக்கு போனார்.

பேங்க்கீ என் இடப்பக்கம் வந்து உட்காருங்கன்னு சொன்னார். இடப் பக்கம் வந்து உக்கார்ந்தா, இல்ல வலது பக்கம் தான் பேச வசதியா இருக்கும், அதனால வலது பக்கம் வந்து உக்காருங்க ன்னனு சொன்னாராம். சாமியாரும் அவர் சொன்ன இடத்துல ஒன்னும் மறுப்பு ஏதும் பேசாம வந்து உட்கார்ந்துட்டார்.

அப்ப பேங்க்கீ சொன்னாராம், "பார்த்தீங்களா. நான் சொல்றது எல்லாம் நீங்க கேக்கரீங்க. இது தான் உங்களுக்குள்ள இருக்க ஒழுக்கம்.... அதனால ஸென் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க பேசாம உர்கார்ந்து கேளுங்க" ன்னு சொல்லி உட்கார வச்சுட்டார்.

7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லது செஞ்ச அவந்திம்மா..
இனிமே சும்மா இந்த பதிவுக்கு மட்டும் சும்மா வந்து எட்டிப்பார்த்துக்குவேன்...அந்த பெவிலியன் பார்க்க வேண்டியது இல்லப்பார்... :)

Avanthika said...

அக்கா எல்லாமே இனி கொறஞ்சிறும்.. :-))..தேங்க்ஸ் அக்கா

பங்காளி... said...

ஓஹ்...

இது புது பதிவா...ஹி..ஹி..நமக்கு அதே புரியல...

நான் ஒரு ட்யூப்லைட்...ஹி..ஹி

Avanthika said...

//இது புது பதிவா...ஹி..ஹி..நமக்கு அதே புரியல...

நான் ஒரு ட்யூப்லைட்...ஹி..ஹி//

அண்ணா..எத்தன கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டப்பட்ட்ட்ட்டு ஒரு புது பிளாக் போட்டு இருக்கேன்....

தருமி said...

அன்புள்ள அவந்திகா,
உங்கள் பின்னூட்டத்திற்கு முன்பே இங்கு வந்து விட்டுப் போனேன். பள்ளியில் படிப்பதாகப் போட்டிருப்பதையும், ஸென் கதைகள் எழுதி வருவதையும் பார்த்து ஒரு ஐயம் வரவே ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன்.

பள்ளியில், அதுவும் டெல்லியில் படிக்கும் மாணவி ப்ளாக், அதுவும் தமிழ் ப்ளாக் எழுதுவது, அதுவும் ஸென் பற்றி எழுதுவது - ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன், தருமி

தருமி said...

சரி அதென்ன, ஸென் கதை - 8 .
அப்டின்னா, 1-7 எங்கே...???

Avanthika said...

// தருமி said...
சரி அதென்ன, ஸென் கதை - 8 .
அப்டின்னா, 1-7 எங்கே...??? ///

அங்கிள்..இதுக்கு முன்னாடி பாகம் எல்லாம், " http://crickchat.blogspot.com இங்க இருக்கு...

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்....