Sunday, May 13, 2007

எதுக்கு ஸென் கதைகள்?

ஸென் கதைகள் ஏன் படிக்கனும்னு ஒருத்தர் கேட்டார். நான் நெட்ல படிச்ச ஒரு விஷயத்த பத்தி இங்க சொல்றேன்.

ஸென் கதைகள் ஒரு மதத்துடைய கொள்கைகளை மையமா வச்சு சொல்லப் பட்டாலும், நம் வாழ்க்கையில நடக்கிற அன்றாட நிகழ்ச்சிகள்தான் பெரும்பாலும் கதையில இருக்கும்.

ஒரு விஷயத்த புரிய வைக்கனும்னா அத கதையா சொன்னா, முக்கியமா குழந்தைகள், ஆர்வமா கத்துக்குவாங்க. அதுவும் ஸென் கதைகள், விளையாட்டா, நகைச்சுவையோட சொல்லப்படிருக்கிறதுனால, அதுல சொல்லப் பட்ட கருத்துகள் ஈசியா புரியும்.

முன்னாடி எல்லாம் ஸென் கதை சொல்றவுங்க எப்ப எல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அப்பெல்லாம் சொல்லீட்டு வந்தாங்க. பயணம் செய்யறப்போ,

வேலை செய்யறப்போ, ஒரு ஹோட்டல்ல சாப்பிடறப்போ னு எப்ப வேனா சொல்வாங்களாம்.

இதுல முக்கியமான ஒரு விஷ்யம், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அர்த்தம் பண்ணிக்குவாங்களாம் . அதாவது கதையோட மாரல்.
ஒரு புக்ல போட்டுறுந்துச்சு, There's no right nor wrong way to enjoy these stories.

இத படிக்கிறதே ஒரு நல்ல experiance.
(Note - எல்லார்த்துக்கும் ஒன்னு சொல்லிடறேன். இந்த போஸ்ட் படிச்ச உடனே உங்களுக்கு தெரிஞ்சிறுக்கும்.. சிலதெல்லாம் நான் எழுதலைன்னு... உண்மைய ஒத்துக்குறேன்..சில் வார்த்தை எல்லாம் ஓசி ..கேட்டு எழுதினேன்.)

13 comments:

தென்றல் said...

தங்கச்சி, நீங்க சொல்ற கதைய படிக்கிற எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம்தான்.. நீங்க தொடர்ந்து, ஜாலியா எழுதுங்க!

Avanthika said...

தேங்ஸ் அண்ணா...:-)

Avanthika said...

எல்லார்த்துக்கும் ஒன்னு சொல்லிடறேன். இந்த போஸ்ட் படிச்ச உடனே உங்களுக்கு தெரிஞ்சிறுக்கும்.. சிலதெல்லாம் நான் எழுதலைன்னு... உண்மைய ஒத்துக்குறேன்..சில் வார்த்தை எல்லாம் ஓசி ..கேட்டு எழுதினேன்...

தென்றல் said...

ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன்..

புது வலைதளம் நல்லாருக்கு! Julie யும் தான்.. ;)

வாழ்த்துக்கள், அவந்திகா!

பங்காளி... said...

வாழ்த்துக்கள் அம்மனி...

தைரியமா எழுதுங்க...நெறய எழுதுங்க....

Avanthika said...

julie நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்... ஜீலிக்கு ஒரே சந்தோஷம்..:-))

Avanthika said...

பங்காளி அண்ணா தேங்க்ஸ்..

நீங்க என்னண்ணா ஸென் எழுதாம என்ன என்னமோ எனக்கு புரியாம எழுதீட்டு இருக்கீங்க..:-))

பங்காளி... said...

ஸென்னுக்கு ஒரு ச்சின்ன ப்ரேக் விட்ருக்கேன்...

'ஸென்னும் கடவுளும்','ஸென்னும் தமிழும்' ன்னு ரெண்டு பதிவு ட்ராப்ட் பண்ணி வச்சிருக்கேன் கொஞ்சம் எடிட் பண்ணனும்...சோம்பேறித்தனம்..சீக்கிரம் போடறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாராட்டுக்கள் அவந்திம்மா...கேட்டு எழுதுனாலும் பரவால்ல...எழுத எழுதப்பழகும் தமிழ்...தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்துருக்க...இந்த வயசுக்கப்புறம் எழுதறதே சில பேருக்கு டெஸ்ட் அப்ப மட்டும் அதுவும் ஆங்கிலத்தில் அப்படின்னு ஆகிடுச்சு...

அபி அப்பா said...

அவந்திகா! ஜூலியும் பிளாக்கரான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?

அபி அப்பா said...

என்னப்பா கமெண்ட் மாடரேஷன் இல்லியா? கொஞ்சம் கவனிங்க!

அபி அப்பா said...

என்னப்பா கமெண்ட் மாடரேஷன் இல்லியா? கொஞ்சம் கவனிங்க!

Avanthika said...

தேங்க்ஸ் அக்கா..அபி அப்பா... ஜூலியா பிளாக்கரான்னு கேட்டாலா?.. இப்படியெல்லாம் கேட்டா எப்படின்னா.. ஹ்ம்ம்ம்.

ஜூலி தான அண்ணா என் கிட்ட எப்பவும் இருக்கா..நான் ஸ்கூல்ல நடக்கிறது எல்லாம் அவ கிட்ட தான் சொல்லுவேன்.7 வருஷமா இருக்காளே.எனக்கு இருக்கும் freind ஜூலி தான்..ஹ்ம்ம்