Wednesday, November 26, 2008

நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்

{வடிவேலு ஸ்டைல்..:-)))}

என் கஸின்ஸ், பிரெண்ட்ஸ் ஏன் தில்லியில ஸ்கூல் டீச்சர்ஸ் கூட என்னை கிண்டல் பண்ணுவாங்க. என்ன பொண்ணு நீ...இப்படி இருக்கேன்னு அனுபவிக்க தெரியலைன்னு திட்டுவாங்க...ஆனா நான் கண்டுக்க மாட்டேன்.. எனக்கு என் ஜூலியும் கிரிக்கெட்டும் இருந்தா போதும்.

சரி விஷயம் என்னன்னா....நான் தனியா ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயும் போனது இல்லை... சினிமா சுத்தம்.....ஆனா இன்னைக்கு போனேன்.... இது என்ன பெரிய மேட்டர்னு கேக்கறீங்களா.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போனேன். அதுவும் சினிமாவுக்கு.

இது வரைக்கும் நான் பார்த்த மொத்த படமே 7..... நிஜமாவே சொல்றேன்... அதுல 4 படம் குழந்தைகள் படம்.. அதுக்கே நான் அழுத அழுகையில கூட வந்தவங்க சினிமா பார்க்குறதே ஸ்டாப் பண்ணிட்டாங்க... அப்புறம் ஸ்கூல்ல இருந்து கூப்டுட்டு போனாங்க.....வேற வழியில்லாம உட்கார வேண்டி இருந்துச்சு... அழுதா மிஸ் அடிப்பாங்களே.... அப்புறம் பத்தாவது படிக்கும் போது கஸின் எல்லாரும் சேர்ந்து சும்மா வெளியே போகலாம்னு பொய் சொல்லி கூப்டுட்டு போய் ஒரு படம்.....அழுதா அவ்வளோ தான்... இங்கேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டி மில்க் சாக்லேட் வாங்கி குடுத்து உட்காரவச்சாங்க... அது என்ன படம்னு கூட மறந்து போச்சு.

அதுக்கு அப்புறம் இன்னைக்கு என் கூட படிச்ச ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இழுத்துட்டு போனாங்க.... முக்கியமான விஷயம் நிஜமா இன்னைக்கு அழுகலை.....

அதுனால நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன், நானும் வளர்ந்துட்டேன்.....

Note-(லட்சுமி அக்கா... என்னோட போன போஸ்ட்ல உங்க கமெண்ட் பார்த்து தான் இந்த போஸ்ட் போட ஐடியா வந்துச்சு...தேங்கஸ் அக்கா...:-))

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரெண்ட்ஸ் இழுத்துட்டுப்போனாங்களா.. என்ன இது நம்ப வச்சு ஏமாத்திட்டயா என்னை.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவாயில்லை அழாம பார்க்கற அளவுக்கு வளந்துட்டே..
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தானா தலைப்பு..ஓகேய்.. :)

லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா said...

//பரவாயில்லை அழாம பார்க்கற அளவுக்கு வளந்துட்டே..
நானும் ரவுடி தான் நானும் ரவுடி தானா தலைப்பு..ஓகேய்.. :)//

:))

ரிப்பீட்டேய்!

Thekkikattan|தெகா said...

நம்பிட்டோம்
நம்பிட்டோம்
நம்பிட்டோம்ல...

[யப்பப்பா ஊருக்குள்ளர இவிங்க அலும்பு தாங்கலையப்பா :-)) ]

காட்டாறு said...

ஆனா என்ன படம் போனீங்கன்னு சொல்லலையே தாயீ.... அப்படியே அந்த படம் பத்தின உங்க கருத்தை சொன்னீங்கன்னா வளர்ந்திட்டீங்கன்னு அப்ரூவல் கொடுப்போமாக்கும்.

Avanthika said...

லட்சுமி அக்கா...தேங்க்ஸ் அக்கா...

லாஸ்ட் பெஞ்ச் லாவண்யா --- ஹா ஹா சூப்பர் பேரு..இப்படி எல்லாம் confess பண்ணலாமா...

Avanthika said...

தெகா அண்ணா..குட்டிப்பாப்பா நல்லா இருக்காளா..

//இவிங்க அலும்பு தாங்கலையப்பா //

எல்லாம் பெரியவங்கள பார்த்துதான்

Avanthika said...

ஹை காட்டாறு அக்கா...நல்லா இருக்கீங்களா... படம் பேரு...வாரணமாயிரம்.. i was not impressed with the film akkaa.. ஆனா எங்க லஷ்மிக்கா நல்லா இருக்குன்னு போட்டுட்டாங்களா.. அதுனால நான் பேசாம இருக்கேன்..
:-)).. anyways...anyfilm will be boring for me...:-))

நாகை சிவா said...

ம்ம்ம்....

கல்லூரிக்கு போனதும் கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சுனு சொல்லுறீங்க...

என் ஜாய்........

கோபிநாத் said...

அட இம்புட்டு லேட்டா!!!!!!!

சரி இப்பவாச்சும் வளர்ந்திங்களே அதுவே பெரிய விஷயம் ;))))

என்ஜாய் ;))

யட்சன்... said...

இந்த படத்தை காலேஜுக்கு கட் அடிச்சிட்டு போயிருந்தீங்கன்னா நீங்க வளர்ந்துட்டீங்கன்னு ஒத்துக்குவேன்...

வூட்ல சொல்லீட்டு ஃப்ரெண்ட்ஸ்சோட படத்துக்கு போறது ஸ்கூலுக்கு போற மாதிரித்தான்...

அதுனால....ஹி..ஹி...ஒத்துக்கமாட்டோம்...ஒத்துக்க மாட்டோம்...