Tuesday, November 25, 2008

கண்ணாடி- ஸென் கதை 10

ஒருத்தர் எப்பவும் எங்க போனாலும் கையில ஒரு கண்ணாடி வச்சுட்டு இருப்பாராம். இதப் பார்த்துட்டிருந்த மற்றவர் " இந்த ஆளு, தன் அழகை பற்றி ப்ரீயாக்குபைடா இருப்பார் போல இருக்கு. அதான் எப்பவும் கையில கண்ணாடி வச்சுட்டு அடிக்கடி தன் முகத்தை பார்த்துக்கறார்" னு சொன்னாராம்.

சரி அவரையே கேட்கலாம்னு ' நீங்க ஏன் எப்பவும் கண்ணாடிய கையில வச்சுட்டு இருக்கீங்க' ன்னு கேட்டாராம்.

அதுக்கு முதலாமவர் " எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் இந்த கண்ணாடிய பார்த்துப்பேன், இதுல விடை தெரியும்' னு சொன்னாராம்.

'எப்படி' னு அந்த நபர் கேட்க

முதலாமவர் "இப்ப இதுல என்ன தெரியுது?"

நபர் ' உங்க முகம்'


முதலாமவர் " அதான் விடை, எனக்கு ஏற்படும் எந்த பிரச்சனைக்கும் நான் தான் காரணம், அதை தீர்ப்பதற்கான வழியும் என் கிட்ட தான் இருக்குன்னு நினைவு படுத்திக்கத்தான் இந்த கண்ணாடி' னு சொன்னாராம்.

7 comments:

Athisha said...

முன்னாடியே இந்த கண்ணாடிகதைய படிச்சிருந்தாலும் பின்னாடி அதை பத்தி உங்க பதிவுல படிச்சதும் முன்னாடி அதைப்பத்தி படிச்ச மாதிரியே இப்பவும் படிச்சேன் ரசிச்சேன்..

நச் கதை..

நம் பிரச்சனைக்கு நாம்தான் காரணம்.. அதுக்கு தீர்வு நாமதான்னும் இத விட ஈஸியா யாரும் சொல்ல முடியாது..

Athisha said...

முன்னாடியே இந்த கண்ணாடிகதைய படிச்சிருந்தாலும் பின்னாடி அதை பத்தி உங்க பதிவுல படிச்சதும் முன்னாடி அதைப்பத்தி படிச்ச மாதிரியே இப்பவும் படிச்சேன் ரசிச்சேன்..

நச் கதை..

நம் பிரச்சனைக்கு நாம்தான் காரணம்.. அதுக்கு தீர்வு நாமதான்னும் இத விட ஈஸியா யாரும் சொல்ல முடியாது..

Avanthika said...

//முன்னாடியே இந்த கண்ணாடிகதைய படிச்சிருந்தாலும் பின்னாடி அதை பத்தி உங்க பதிவுல படிச்சதும் முன்னாடி அதைப்பத்தி படிச்ச மாதிரியே இப்பவும் படிச்சேன் ரசிச்சேன்..///


ஐயோ...கதையோட moral ஐ இப்ப experiance பண்றேன்...

ஹா ஹா..நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஐயோ...கதையோட moral ஐ இப்ப experiance பண்றேன்//

வளர்ந்துட்ட அவந்திம்மா.. :))

Avanthika said...

Lakshmi akkaa...

valaranthuttean illa.. othukkareengala.... athai anga sollunga akkaa... plssssssssss

நாகை சிவா said...

good one... :)

//valaranthuttean illa.. othukkareengala.... athai anga sollunga akkaa... plssssssssss//

ithu avurathu illa ;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாருக்கு கதை.