ரொம்ப புகழ் பெற்ற சென் மாஸ்டர் சுவாங் ட்சு ஒரு முறை ஒரு கனவு கண்டாராம். அந்தக் கனவுல அவர் ஒரு பட்டாம் பூச்சியா அங்கேயும் இங்கேயும் பறந்துட்டு இருந்தாராம். பாட்டாம் பூச்சியாவே மாறி ரொம்ப சந்தோஷமா பறந்துட்டு இருந்தாராம். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ படுக்கையில மீண்டும் தான் மனுஷனா இருக்குறது உணர்ந்தாராம்.
அதுக்கு அப்புறம் " நான் மனிதனா இருந்து பட்டாம் பூச்சியா கனவு கண்டனா, இல்லை பட்டாம்பூச்சி மனுஷனா கனவு கண்டுட்டு இருக்கனா' னு மனசுக்குள்ள நினச்சாராம்.
இதை படிச்சுட்டு என் கஸின் கிட்ட சொன்னா, அவன் கேட்குறான் "அவர் மனசுக்குள்ள நினச்சது உனக்கு எப்படி தெரியும்" னு...:-)))
அது மாதிரி நீங்களும் கேட்காதீங்க...மெயில்ல வந்தது...
11 comments:
super.. இது மாதிரி நான் ஒரு படம் பார்த்தேன் ஈவினிங் ன்னு அதுல பாட்டி ஒருத்தங்க பட்டர் ப்ளை வரும்போதெல்லாம் கனவு கண்டு பழசெல்லாம் நர்சம்மா கிட்ட சொல்வாங்க...
நாளைக்கு பரிட்சை எழுதுவது கூட தூக்கத்துல பாக்கற கனவா இருக்ககூடாதான்னு யோசிக்கிறியா... அது நிஜம்மா நிஜம்..
முன்னால இரண்டாம் சொக்கன்னு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய சென் மாஸ்டர் இது பத்தி பதிவெல்லாம் போட்டுட்டு இருந்தார்.
அவர் அளவுக்கு இல்லைன்னாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு...
ஹி...ஹி..ம்ம்ம்ம்ம்
அக்கா...எப்படி இருக்கீங்க...
யாரு சொல்லிக் குடுத்து இப்ப பரிட்சை பத்தி பேசறீங்க..முதல்ல அந்த அண்ணா கிட்ட சொல்லி உங்க ஃபோன் கட் பண்ண சொல்லனும்...
//யட்சன்... said...
முன்னால இரண்டாம் சொக்கன்னு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய சென் மாஸ்டர் இது பத்தி பதிவெல்லாம் போட்டுட்டு இருந்தார்.//
பங்காளி அண்ணா, பங்காளி அண்ணானு ஒருத்தர் இருந்தார்.... அந்த அண்ணாவ விடவா இரண்டாம் சொக்கன் பெரிய சென் மாஸ்டர்..??
:-)))
அவர் தான் சென் கதைகள் என்னை எழுத வச்சார்...
ம்ம்ம்...
இப்படி அடிக்கடி சென் கதை சொல்லுங்க, அவந்திகா!
அப்படியே கிரிக்கெட் (இப்ப நடக்கிற தொடர்) பத்தியும் எழுதுங்க!!
Nalla irukkuthu :))
//இங்கேயும் பறந்துட்டு இருந்தாராம். பாட்டாம் பூச்சியாவே மாறி ரொம்ப சந்தோஷமா பறந்துட்டு இருந்தாராம். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ படுக்கையில மீண்டும் தான் மனுஷனா இருக்குறது உணர்ந்தாராம். //
நான் கூட இது மாதிரியெல்லாம் கனவு கண்டிருக்கேன் தோஹா 2 ம்யிலாடுதுறை டெய்லி ஆபிஸ் போய்ட்டு வர்ற மாதிரி எம்புட்டு குஷியா இருக்கும்ன்னு தெரியுமா??
:))))))))))))
அப்ப நானாத்தான் உளறீட்டேனா....
ஹி..ஹி...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா :)
;-))
See movie "Waking Life" based on this concept.
Post a Comment