Thursday, September 25, 2008

ஜன்னல் - கதை

லதாவும் அவங்க அப்பாவும் புதுசா ஒரு வீட்டுக்கு குடி போனாங்களாம். முதல் நாள் ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கும் போது பக்கத்து வீட்ல இருக்கும் ஒரு அம்மா துணி துவச்சி காயப் போட்டுட்டு இருந்தாங்க. அதை பார்த்துட்டு லதா, " அந்த அம்மா பாரு, துணிய நல்லா துவைக்காம அழுக்காவே காயப் போடுது" னு சொல்லி இருக்காங்க. அப்பா பேசாம இருந்தார்.

அடுத்த நாளும் பக்கத்து வீட்டு அம்மா துணி காயப் போடும் போது, ஜன்னல் வழியில பார்த்துட்டு " என்ன இந்த அம்மா நல்லாவே துணி துவைக்கறதில்லை, சோப்பை மாத்த சொல்லனும்' னு சொன்னாங்களாம். இதை கேட்டுட்டு இருந்த அப்பா பேசாம இருந்தார்.

அடுத்த நாள் பார்க்கும் போது பக்கத்து வீட்டு அம்மா துணி எல்லாம் பளிச்சுன்னு இருந்துச்சாம். லதா " அட பரவாயில்லையே, அந்த அம்மா துணி துவைக்க கத்துட்டாங்க போல இருக்கு' னு சொன்னாங்களாம்.




இதை கேட்ட அப்பா '' அதெல்லாம் ஒன்னும் இல்லை, இன்னைக்கு நான் நம்ம ஜன்னலை நல்லா கழுவி விட்டேன்... அதான் எல்லாம் தெளிவா தெரியுது' னு.



"அது மாதிரி நம்ம மனசு சுத்தத்தை பொறுத்து தான், நாம் மத்தவங்களை பார்க்கும் பார்வையும் இருக்கும். மத்தவங்களை ஜட்ஜ் பண்றதுக்கு முன்னாடி நம்ம மனசு எந்த நிலையில இருக்குன்னு உணர்ந்துட்டு சொல்லனும்" அப்படின்னு அப்பா சொன்னாராம்.

இது என் பாட்டி எனக்கு இன்னைக்கு சொன்ன கதை.

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. நல்ல கதை அவந்தி. :)

யட்சன்... said...

நல்ல கதை...நல்ல கருத்து...நல்ல பாட்டி...நல்ல பேத்தி...நல்லாருங்கப்பா எல்லாரும்...

தென்றல் said...

எவ்வளவு 'பெரிய' விசயத்தை சுலுபமா சொல்லீட்டாங்கா..

பாட்டினா பாட்டிதான்..!

எங்ககிட்டயும் சொன்னதுக்கு நன்றி, மேடம்!!

கோபிநாத் said...

பாட்டி கதையை எங்களுக்கு சொன்ன எங்க குட்டி பாட்டிக்கு ஒரு ஸ்பெசல் "ஓ" :))

*இயற்கை ராஜி* said...

very nice story