Thursday, November 1, 2007

Paul Warfield Tibbets- ஹிரோஷிமா குண்டு- பைலட்



Paul Warfield Tibbets Jr - இது யாருன்னு தெரியுமா?... ஆகஸ்ட் 6, 1945 ல ஹிரோஷிமா மேல " Little Boy" அணு குண்டு ( 5 டன்) போட்ட விமானத்தை ஓட்டிட்டு போன பைலட். அவரோட 92 ஆவது வயசுல Columbus, Ohio வுல இறந்துட்டார். 1,40,000 மக்கள் அப்ப இறந்து போனாங்க.

பாம் போட்ட 60 ஆம் ஆண்டு நிறைவு அப்போ இந்த ப்ளேன்ல இருந்த மூனு பேரும்'' எங்களுக்கு அந்த அணு குண்டு போட்டதுல எந்த வருத்தமும் இல்லை'' ன்னு சொன்னாங்களாம்

இப்ப இறந்து போன டிப்பட்ஸ், "நான் இறந்த பின்ன எனக்கு சமாதியோ, இறுதிச்சடங்கோ ஒன்னும் வேண்டாம். ஏன்னா என் மேல கோபம் இருக்குறவங்க என் சமாதி அருகில வந்து போராட்டம் நடத்துவாங்க'' ன்னு சொல்லிட்டாராம்.

இந்த அணு குண்டு போட்டப்போ எப்படி விமானத்தை ஓட்டீட்டு போனாரோ அதே மாதிரி, 1976 ஆம் ஆண்டு ஏர் ஷோ செய்து காமிச்சாராம்.

9 comments:

நிலா said...

அவந்திகா அக்கா நிறய படிப்பீங்க போல

ரசிகன் said...

அவரோட நாட்டுக்கு கடமைய செஞ்சிட்டுப் போயிட்டார்..அவர் இல்லேன்னாக்கா..இன்னொருத்தர் செஞ்சியிருப்பார். ஆனாக்கா.. அத்தன லட்சம் மக்களோட வாழ்வை கூண்டோட சிதைக்க தான் ஒரு கருவியாயிட்டோமேன்னு ஒரு சின்ன மன உறுத்தல் கூட அவருக்கு இல்லாமல் போனது..ரொம்ப மோசம்முங்க..
இப்பிடிபட்டவருக்கு எதுக்கு நினைவு நாள் கொண்டாட்டம்?..இல்ல..

ரசிகன் said...

தேடிப்பிடிச்சி போட்டிருக்கிங்க... அறியாத செய்தி.. நல்லாயிருந்தது.. ஆனா அதுக்கு உங்க சொந்தக் கருத்த இணைக்காம விட்டுடீங்களே?..

ரசிகன் said...

நிலா செல்லம்.. உன்னிய உங்க வீட்டுல தேடுனாக்கா.. இங்க வந்துட்டியே?....ஹிஹி..

MyFriend said...

தங்கச்சி, நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல? ;-)

இரண்டாம் சொக்கன்...! said...

கடமையை செய் பலனை எதிர் பார்க்காதேன்னு....கீதையில கிருஷ்ணர் சொன்னது நியாம்னா....

என் கடன் பணி செய்து கிடப்பதுன்னு...நாவுக்கரசர் சொன்னது நியாயம்னா....

இவர் செஞ்சதும் அவர் வரைக்கும் நியாயம்தானே....

என்னவோ தோணிச்சி....

Baby Pavan said...

நிலா said...
அவந்திகா அக்கா நிறய படிப்பீங்க போல

ஒரு ரிப்பிட்டெய் போட்டுகரென்...

Avanthika said...

நிலா, ரசிகன்,மை ஃபிரண்ட், இரண்டாம் சொக்கன், பேபி பவன்
எல்லார்த்துக்கும் நன்றி

நாகை சிவா said...

ராணுவம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு கொடுத்த உத்தரவை முடிக்க வேண்டும். அதில் ஆசாபாசங்களுக்கு எல்லாம் இடம் இல்லை.

இதை குறை சொல்லவும் முடியாது. அவர்களின் பணி அப்படி. நல்ல தகவல்கள் :)