Saturday, November 17, 2007

நாய் கடியும் டாக்டரும்...

Delphine aunty டாக்டர்ஸ் ஜோக்ஸ் போடறது சரியாதான் இருக்கு.

இந்த ஜூலி பிசாசு அம்மாவ கடிச்சு வச்சுடுச்சு. வியாழக்கிழமை காலையில வேலைக்காரம்மா வந்ததும் எப்பவும் போல அம்மா ஜூலிய Balcony ல கட்டலாம்னு செயின அவுக்க போகும் போது, என்ன நினச்சதோ கால பலமா கடிச்சு வச்சிடுச்சு. அம்மா சத்தம் கேட்டு நான் எழுந்து வந்தேன். பார்த்தா பாதத்துக்கு மேல ப்ளட் நல்லா வந்துட்டு இருக்கு. அந்த நேரத்துல டாக்டர்ஸ்சும் யாரும் இல்லை.

Anti rabbies injection வாங்கலாம்னா கடையும் திறக்கலை. 9 மணிக்கு டெல்ஃபின் ஆண்டிக்கு போன் பண்ணி பேசுனாங்க. உடனே Anti rabbies injection போட்டுக்கோ சொன்னாங்க. அம்மா ஆபீஸ்க்கு போயிட்டு பின்ன டாக்டர் கிட்ட போனாங்க. அங்க இருந்த டாக்டர் மாதிரி ஒரு லூசு டாக்டர் இருக்க மாட்டாங்க. போறப்பவே இன்ஜெக்ஷன் வாங்கீட்டு போனதுனால சீக்கிறம் உள்ளே வர சொல்லிட்டார்.

உள்ளே போனா அவரோட சொந்தக் கதை சோகக் கதை எல்லாம் சொல்லி அவர் எப்ப தில்லி வந்தார், எதுக்கு வந்தார், இதுக்கு முன்னாடி என்ன பண்ணீட்டு இருதார்னு கதை. '' இதுக்கு முன்னாடி நான் அஸாம்ல இருந்தேன், அங்க Ulfa terrorists என்னை கடத்தீட்டு போயிட்டாங்க. என்னோட சொத்து எல்லாம் போயிடுச்சு..அதுக்கு அப்புறம் தான் நான் தில்லி வந்தேன்னு உளரீட்டே இன்ஜெக்ஷன் போட்டு...அது ரெண்டா break ஆயிடிச்சு. Needle குத்தினது அரைவாசி அம்மா கைக்குள்ளே, மீதி டாக்டர் கையில. "பார்த்தீங்களா இது கூட ஒழுங்கா இல்லை "னு complaint. நல்ல வேலை பிரேக் ஆன ஊசி உள்ளே போகலை. கொஞ்சம் வெளியே நீட்டிட்டு இருந்தாலே அம்மாவே உடனே வெளியே எடுத்துட்டாங்க. அம்மாக்கு ஒரே கோவம் சிரிப்பு எல்லாம். வீசிங்கும் சேர்ந்துருச்சு. ஏதோ ஜனகராஜ் ஜோக் நியாபகத்துல வருத்துன்னு தெலுங்குல சொன்னா, அந்த ஜோக்குங்குற வார்த்தை மட்டும் அந்த லூசுக்கு புரிஞ்சு..என்ன சிஸ்டர் ஜோக்னு என்னமோ சொல்றீங்க...எனக்கும் சொல்லுங்க நானும் சிரிக்குறேனு சொல்லிட்டு சிரிப்பு வேற.

வெளியே வந்த பிறகு டாக்டர் சொல்றார் ''சிஸ்டர் தில்லிக்கு வந்த பிறகு நீங்க தான் நான் பார்க்கும் முதல் பேஷன்ட்... third day and seventh day இன்னும் ரெண்டு ஊசி போடனும். மறக்காம வந்துடுங்க'' .

12 comments:

ரசிகன் said...

ஹா.... ஹா... அவந்திகா.. மொதல்ல அந்த டாக்கிட்டர , கம்பவ்ண்டர் படிப்பாவது ஒழுங்கா..படிச்சி முடிச்சிட்டாரான்னு கேட்டு வைச்சிக்கோம்மா...ஹிஹி...

Anonymous said...

In Tamil Nadu, you get the the ARV (HDCV) - 5 doses - free of cost in government Hospitals and Primary Health Centres

Thekkikattan|தெகா said...

அய்யய்யோ ஓடியாங்க, ஓடியாங்க நம்ம அவந்தியோட அம்மாவை ஜூலி கடிச்சு வைச்சிருச்சாம்... அந்த குட்டியூண்டு ஜூலியை பிடிச்சி ஊசி... :-)))

இரண்டாம் சொக்கன்...! said...

அம்மா இப்ப எப்படி இருக்காங்க....வீசிங் வேற வந்திருக்குன்னு சொல்றீங்க...

நல்லா இருக்காங்களா.....?

வேற நல்ல டாக்டர பார்த்தீங்களா....?

ம்ம்ம்ம்...பக்கத்துல இருந்து பத்திரமா பாத்துக்கங்க அவந்திகா....

Avanthika said...

thanks...ரசிகன் அண்ணா..அப்படித்தான் போல....

Aunty..நீங்களே வந்திருக்கலாம்..

thanks Dr.Bruno..

Avanthika said...

Theka annaa...julie ய எல்லாம் தொடக்கூடாது...பாவம்...

//இரண்டாம் சொக்கன்...! said...
அம்மா இப்ப எப்படி இருக்காங்க....வீசிங் வேற வந்திருக்குன்னு சொல்றீங்க...
நல்லா இருக்காங்களா.....?///

இப்ப நல்லா இருக்காங்க அண்ணா... swelling மட்டும் இருக்கு... ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க
தேங்கஸ் அண்ணா

நாகை சிவா said...

நல்லா இருக்காங்க என்று சொல்லிட்டீங்க. அதனால் அதை விட்டு விடலாம்...

அந்த ஜோக், தங்கச்சிய நாய் கடிச்சுடுச்சு.. படம் - படிக்காதவன் :)

அந்த டாக்டர் கிட்ட மறுபடியும் எப்ப போக போறீங்க... ரொம்ப நல்லவரா இருக்காரே... :)

அபி அப்பா said...

யாரும் கேட்க மறந்த கேள்வி! ஜூலி எப்படி இருக்கா:-))))

ச்சும்மா கிண்டலுக்கு, அவந்தி, அம்மாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ!!!

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
யாரும் கேட்க மறந்த கேள்வி! ஜூலி எப்படி இருக்கா:-))))

ச்சும்மா கிண்டலுக்கு, அவந்தி, அம்மாவை ஜாக்கிரதையா பார்த்துக்கோ!!!
///

எங்க ஊருக்காரர் சொல்றதும் கரெக்ட்தான் ஜூலியையும் சாக்கிரதையா பார்த்துக்கோங்க!

(எங்க ஊர் ஹாஸ்பிட்டல்லயும் இதே மாதிரி டயலாக்ஸ் நிறைய கேட்ட ஞாபகம்:))

Baby Pavan said...

அக்கா நல்லா ஜோக்கா எழுதீருக்கீங்க, அம்மாவ கேட்டதா சொல்லுங்க...

காட்டாறு said...

//இந்த ஜூலி பிசாசு அம்மாவ கடிச்சு வச்சுடுச்சு//

அம்மாவை கடிச்சதும் செல்ல ஜூலி பிசாசு ஜூலியா? இதெல்லாம் நல்லதுக்கில்ல... சொல்லிட்டேன்...

உங்க அம்மா ஜூலிட்ட என்ன வம்பு செய்தாங்களோ... ஜூலிக்கு பேசத் தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்கும்...

Avanthika said...

ஹை காட்டாறு அக்கா நீங்க தான் கரெக்டா சொல்லி இருக்கீங்க...அதான் இன்னும் சரியா நடக்க முடியலை...