Monday, November 5, 2007

குழந்தைகளை எப்படி எல்லாம் ஏமாத்தறீங்க...


சின்ன குழந்தைகளை வீட்ல எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க.. நீங்களும் தான்

வீட்ல ஃபார்மஸிக்கு போய் Benadryl வாங்கீட்டு வர சொன்னாங்க. நான் போக சோம்பல் பட்டதுக்கு அப்பா சொன்னார் நான் 100 எண்ணுறேன்... அதுக்குள்ள நீ வந்துடு, பார்க்கலாம் நான் முதல்ல 100 சொல்லி முடிக்கிறனா இல்லை நீ வர்ரியான்னு சொன்னார். நான் சொன்னேன் நான் என்ன குழந்தையா இப்படியெல்லாம் சொல்றதுக்கு...சரி சரி போயிட்டு வரேன்னு சொலிட்டு போயிட்டு வந்தேன்.

வீட்டுக்குள்ள வந்தா, அப்பா 86, 87 அப்படீன்னு சொல்லீட்டு, ''ஹை குட் கேர்ல் நீ தான் ஜெயிச்சே"ன்னு சொன்னார். எனக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லையே நான் வேகமா போயிட்டு வந்துட்டேனு எனக்கு அல்ப சந்தோஷம் ஆயுடுச்சு. அம்மா சிரிச்சாங்க. என்னன்னு கேட்டா இன்னும் அரைமணி கழிச்சு வந்திருந்தாலும் நீ தான் ஜெயிப்பேன்னு சொன்னாங்க. ஏன்னு தெரியுமா இவங்க count பண்ணவே இல்லை. நான் வர்ரது பார்த்துட்டு சும்மா 86, 87 னு சொல்லிட்டு இருந்திருக்காங்க. அப்ப தான அடுத்த தடவை ஏதாவது வேலை சொன்னா செய்வேன். அதுக்கு தான்

சின்ன பொண்ணா இருந்தப்போ இப்படித்தான் ஒரு வேலை சொல்லீட்டு அம்மா 1 to 10 சொல்வாங்க. நானும் பண்ணுவேன், கடைசியில எனக்கு கேக்குற மாதிரி 8, 9, 10 சொல்லுவாங்களா, நானும் ஹை ஜெயிச்சிட்டேன்னு லூசு மாதிரி சந்தோஷப்பட்டுட்டு, அடுத்த தடவையும் செய்வேன். இப்படி 8 சொல்றதுக்கு முன்னாடி செய்து முடிச்சதுக்கு ஒரு ஜெம்ஸ் பேக்கட் வேற குடுப்பாங்க.

அப்புறம் நைட் கதை சொல்றப்போ காக்காய் வடை தூக்கிட்டு போய் உக்கார்ந்து நரி வர்ர வரைக்கும் சொல்லுவாங்க. வடை கீழ விழுந்துச்சான்னு சொல்லவே மாட்டாங்க. நீ தூங்கு அப்ப தான் சொல்லுவேன்னு சொல்லி தூங்க வச்சுடுவாங்க. இதுவே தினமும் நடக்கும் நானும் லூசு மாதிரி தினமும் வடை கதைய கேட்டுட்டு இருந்து இருக்கேன்.

இப்படித்தான் ஏமாத்தறீங்க குழந்தைகளை...:-)))

9 comments:

Sanjai Gandhi said...

//நானும் ஹை ஜெயிச்சிட்டேன்னு லூசு மாதிரி சந்தோஷப்பட்டுட்டு, அடுத்த தடவையும் செய்வேன்.//
//இதுவே தினமும் நடக்கும் நானும் லூசு மாதிரி தினமும் வடை கதைய கேட்டுட்டு இருந்து இருக்கேன். //

ஹிஹி... இப்டி எல்லாம் பப்ளிக்ல போட்டு ஒடைக்கப்படாது... :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மா சொல்லன்னா நீ ஜெயித்த விதம் இப்பவும் ஒனக்கு தெரியாதுன்னா நீ இன்னமும் சின்னக்குழந்தை தானம்மா அவந்தி... :)

இரண்டாம் சொக்கன்...! said...

அவங்களும் ஏமாந்திருப்பாங்க....

நாளைக்கு நீங்களும் ஏமாத்துவீங்க...

ஹி..ஹி..இதெல்லாம் அரசியல்ல சஹஜமப்பா....

Baby Pavan said...

ஆகா என்னையும் இப்படிதான் தினமும் ஏமாத்தி சாப்பாடு ஊட்டிவிடராங்க அம்மா...

Avanthika said...

எல்லார்த்துக்கும் நன்றி...

பவன் பாப்பா..சமத்தா சாப்பிடனும்....

நாகை சிவா said...

எங்க வீட்டிலும் என்னைய இப்படி தான் ஏமாத்துறாங்க.. உனக்கு புண்ணியமா போகுது என்று சொல்லி... :))))

Avanthika said...

///நாகை சிவா said...
எங்க வீட்டிலும் என்னைய இப்படி தான் ஏமாத்துறாங்க.. உனக்கு புண்ணியமா போகுது என்று சொல்லி... :))))//

அண்ணா
நீங்க என்ன பண்ணீங்க அத சொல்லுங்க முதல்ல

சீனு said...

நீ அழுவாதம்மா...உனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரேன்...சரியா!!!

நாகை சிவா said...

//அண்ணா
நீங்க என்ன பண்ணீங்க அத சொல்லுங்க முதல்ல//

ஏற்கனவே ஏகப்பட்ட புண்ணியம் ஸ்டாக் இருக்கு, அதுனால் புண்ணியத்தை வேற யாருக்கும் திருப்பி விடுங்க என்று சொல்வேன்.(இது எல்லாம் நாம் வெளிநாடு வருவதுக்கு முன்னால்)

இப்ப அவங்களும் வேலை சொல்வது இல்லை, சொன்னாலும் தட்டுவது இல்லை. நாம செய்யாம பின்ன வேற யாரு செய்ய போறா சொல்லுங்க :)