Thursday, October 18, 2007

நண்பனுக்கு குடுத்த செக் - கதை


ஒரு ஊர்ல ஒரு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப டியர் ப்ரெண்ட்ஸ். ஒன்னாவே வாழ்ந்தாங்க. ஒரே தொழிலும் பண்ணீட்டு இருந்தாங்க. நிறைய சொத்து சேர்ந்துட்டாங்க.

அதுல ஒரு நண்பர் இன்னொருவர் கிட்ட கேட்டார், '' நான் இறந்துட்டா நீ என்ன பண்ணுவே'' .

அதுக்கு நண்பர், '' நீயே போன பிறகு எனக்கு என்ன இருக்கு இந்த உலகத்துல... நினச்சுப் பார்க்க முடியலை'' னார்.

இதை கேட்ட உடனே அவருக்கு ரொம்ப சந்தோஷம் ஆயுடுச்சு '' அப்ப நான் இறந்த பிறகு நாம சேர்த்த சொத்தை எல்லாம் என்னை புதைக்குற குளிக்குள்ள போட்டுறு'' னார். '' ஊர்ல இருக்குற பெரியவங்க முன்னாடி நீ சத்தியம் செய்து கொடுக்கனும்'' னு சொல்லிட்டார்.

நண்பருக்கு அதிர்ச்சி ச்சே என்ன இவன் இப்படி இருக்கான்னு. ஆனா நண்பர் கிட்ட '' சரி நண்பா அப்படியே செய்யறேன்'' னார். சத்தியமும் செய்து கொடுத்தார்.

சில நாள் கழிச்சு முதல் நண்பர் ஏதோ நோய் வந்து இறந்து போயிட்டார்.

க்ளைமேக்ஸ் வந்துடுச்சா. நண்பர புதைக்குற டைம் வந்துடுச்சு. அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாம் இரண்டாம் நண்பர் என்ன செய்யப் போரார்னு பார்த்துட்டு இருந்தாங்க. நண்பர் ஒரு செக்ல கை எழுத்து போட்டு குழிக்குள்ள போட்டார்.

ஊர்க்காரங்க என்ன இதுன்னு கேட்டாங்க. அதுக்கு அவர் '' நான் எங்களோட சொத்தை எல்லாம் வித்து பேங்க்ல போட்டு இருக்கேன். அதோட செக் தான் இது. என்னோட பங்கையும் சேர்த்து போட்டுட்டேன்'' னார்.

Saturday, October 6, 2007

தூங்கு மூஞ்சி வாத்தியார்.


ஒரு கணக்கு வாத்தியார் தினமும் மதியம் கிளாஸ்கு வந்த பின்ன ஏதாவது ஒரு கணக்க மாணவர்களுக்கு குடுத்துட்டு டேபிள்ல படுத்து தூங்கப் போயிடுவார். மாணவர்கள் கேட்டாங்க '' சார் என்ன தினமும் இப்படி தூங்கரீங்களே..ஏன்?... அதுக்கு வாத்தியார், '' நான் தினமும் ஒரு காட்டுக்குள்ள இருக்குற ஒரு மகான பார்க்க போறேன்'' அப்படின்னார்.

அடுத்த நாள்..மாணவர்களும் இவரோட வகுப்புல தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. வாத்தியார் கேட்டார் ''என்ன எல்லாரும் தூங்கரீங்க'' அப்படீன்னு. அதுக்கு மாணவர்கள், நீங்க போன அதே மகான பார்க்கலாம்னு போனோம்'' னு சொன்னாங்க.

அதை கேட்டதும் வாத்தியார்க்கு சந்தோஷம். ''ரொம்ப சந்தோஷம்..நல்ல விஷயம்...என்ன சொன்னார் மகான்'' அப்படீன்னு கேட்டார்.

மாணவர்கள் ''உங்களைப் பற்றி கேட்டோம். அப்படி யாரும் இங்க தினமும் வரலையேன்னு சொல்லிட்டார்'' அப்படின்னாங்க. :-)))))