Wednesday, September 5, 2007

ஓட்டை பானை- The Cracked Pot


ஒரு ஊர்ல ஒரு அம்மா தினமும் ரெண்டு பானைல தண்ணி எடுத்துட்டு வந்து ஒரு கோயிலுக்கு குடுத்துட்டு இருந்தாங்க. அது தான் அவங்களுக்கு வேலை. அவங்க வச்சுட்டு இருந்த ரெண்டு பானைல ஒன்னு ஒட்டை பானை. ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. நல்லா இருந்த பானை, ஓட்டை பானைய பார்த்து '' பாரு உன்னால பாதி தண்ணியத்தான் குடுக்க முடியுது. மீதி கீழ தான போகுது. உன்னை சுமந்துட்டு வர்ரது வேஸ்ட் அப்படின்னு'' சொல்லிச்சு. ஓட்டை பானைக்கு மனசு கஷ்டம் ஆய்டுச்சு.

மனசு கஷ்டமா இருக்குன்னு அந்த அம்மா கிட்ட ஓட்டை பானை சொல்லுச்சு '' அம்மா என்னை ஏன் சுமந்துட்டு வர்ரே, நான் தான் உனக்கு உபயோகம இல்லையே. என்னை மன்னிச்சுடு. நீ சுமந்துட்டு வரும்போதே பாதி தண்ணீர் கீழ போயிடுதே'' ன்னு சொல்லி அழுதுச்சு.

அதுக்கு அந்த அம்மா சொன்னாங்க '' நாளைக்கு உன்னை சுமந்துட்டு வர்ரப்போ உன் பக்கம் பார்த்துட்டே வா, அப்ப புரியும்'' னு சொன்னாங்க.
அடுத்த நாள் அந்த அம்மா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர்ரப்போ பக்கத்துல பார்த்துட்டே வந்துச்சு ஓட்ட பானை. ஒன்னும் தெரியலை. வழி பூராவும் நிறைய பூக்களோட செடிகள் மட்டும் இருந்துச்சு. ஆனா மனசுக்குள்ள வருத்தம் மட்டும் போகவே இல்லை. கோயிலுக்கு வந்து சேர்ந்ததும் அந்த அம்மா '' பானை ஓட்டை ஆனதும் உன்னை சுமந்துட்ட வந்த வழியெல்லாம் சின்ன சின்ன செடிகள் வச்சேன். அது இப்ப இவ்வளவு அழகா பூக்களோட இருக்கு பார்த்தியா. அதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லனும். இல்லன்னா இத்தன தூரத்துக்கு நான் ஒவ்வொரு செடியா தண்ணி ஊத்தரது கஷ்டம் தானே. உன்னால தானே சாமிக்கு அழகா மாலை கட்டி போட முடியுது.. பாரு சாமி எவ்வளவு அழகா இருக்கார்" அப்படீன்னு சொன்னாங்க.

அப்புறம் ரெண்டு பானைகள் கிட்டேயும் ''யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும். பாரு அந்த பூக்கள் வச்சு கட்டுன மாலைனால தான் சாமி அழகா இருக்கார் ' அப்படீன்னு சொன்னாங்க.

11 comments:

Anonymous said...

this is very famous story told by many of the teachers..good one

Anonymous said...

இப்படியே கதை கதை கேட்டு நெம்ப நல்லவனாய்டுவேன்னு தோணுது...

தேங்ஸ் டீச்சர்....ஹி..ஹி...

Avanthika said...

thanks anony

thanks anna...you are already a good student...

எனக்கு கரெக்டா கமென்ட் போடற ரெண்டு மூனு பேர்..all good boys and girls..:-)))

காட்டாறு said...

Cracked pot அப்படின்னதும்.... சின்ன வயசு ஞாபகம் வந்தது. ஹீ ஹீ ஹீ... அது இல்லையா. ;-)

ஜெகதீசன் said...

//
யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும்.
//
:))

நல்ல கதை.. வாழ்த்துக்கள்..

Chandravathanaa said...

யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. அது அவங்க கண்டு பிடிச்சு அத நினச்சு சந்தோஷப் பட்டுக்கனும்.

நல்ல கதை.

அபி அப்பா said...

நல்ல கதைன்னு நான் ஏதாவது சொன்னா படிச்சுட்டு வாங்கன்னு சொல்ல கூடாது சரியா - நல்ல கதை:-))

Yogi said...

எல்லாரலயும் ஒரு உபயோகம் இருக்கு. ம். அப்ப என்னாலயும் எதோ இருக்கு.

நல்ல கதை.

Avanthika said...

தேங்க்ஸ் காட்டாறு அக்கா, ஜெகதீசன் அண்ணா, சந்திரவடதனா அக்கா,அபிஅப்பா, பொண்வண்டு

அபி அப்பா நம்பறேண்ணா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...அருமையான கதை தொகுப்பா மாறிட்டு வருது இந்த சும்மா சும்மா./..

மங்களூர் சிவா said...

//யாரும் உபயோகம் இல்லாம இருக்க மாட்டாங்க. எல்லார்த்துக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

படிக்கிற காலத்துல எங்கப்பா இந்த கதைய படிக்கலன்னு நெனைக்கிறேன். நீயெல்லாம் எங்க உருப்புடபோறன்னு ரொம்ப நாள் சொல்லிகிட்டு இருந்தார்.

not now OK.

மங்களூர் சிவா