Friday, September 7, 2007

நீங்க பென்ஸிலா இருப்பீங்களா?


இன்னைக்கு படிச்ச ஒரு விஷயம்.

நாம எப்பவும் ஒரு பென்சில் மாதிரி சில முக்கியமான குணங்களோட இருக்கனும்.

எப்படி.

நம்மை சீவ சீவ தான், அதாவது பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது தான் நாம் பல விஷயங்களை புரிஞ்சுக்க முடியும். இலக்கை அடைய பல உத்திகள் கிடைக்கும் முடியும்.

பென்சில்ல தப்பா எழுதினா உடனே நாம அதை இரேஸர் வச்சு அழிச்சிடறோம். அது மாதிரி நாம செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்திக்கனும்.

பென்சில் வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே எப்படி இருக்கோ அப்படி தான் கையெழுத்தின் தரம் இருக்கும். அது மாதிரி நம் எண்ணங்கள் எப்படி இருக்கோ அப்படித்தான் நம் நடத்தையும் இருக்கும்.நல் எண்ணங்களே நல்ல வாழ்க்கைய குடுக்கும்.

நாம ஏதாவது ஒரு சக்தி மேல நம்பிக்கை வச்சு நம்மள அந்த சக்தி கிட்ட நம்மள ஒப்படைக்கனும். அதன் வழி நடத்தல் படி நடக்கனும். பென்ஸில் யாரு கையில இருந்தாலும் அவங்க கை போற போக்கில போறதுனால தான் அதோட வேலைய செய்ய முடியுது. இல்லன்னா அதுக்கு மதிப்பு இல்ல.பென்சில் நம்ம கையில வந்தப்புறம் தானே பெரிய ஆள் ஆகுது. அது மாதிரி.

பென்ஸில்லால எங்க எழுதினாலும் அது ஒரு மார்க் விட்டுடுது. அது மாதிரி நாம பண்ற வேலைகளிலும் நாம நம்ம முத்திரைய பதிக்கனும். அந்த வேலை எங்க, எப்படி, யாருக்காக இருந்தாலும் சரி. என்ன ஆனாலும் எந்த நேரத்திலும், யார் கையில இருந்தாலும் பென்ஸில் அதோட வேலைய சரியா செஞ்சுதில்ல. அது மாதிரி.

நம்ம கிட்ட இருக்குற நல்ல குணங்கள் யாருக்கு வேனா உபயோகப் படுற மாதிரி நம்ம அனுகுமுறை இருக்கனும். (Anybody should access the gifts (good qualities) in you possess).நம்ம உதவி ஒருத்தருக்கு வேனும்னா, எதையும் யோசிக்காம நம்மனால செய்ய முடியற உதவியா இருந்தா அது நம்ம கடமையா நினச்சு செய்யனும்.

நீங்க பென்சிலா இருப்பீங்களா?

11 comments:

ஒலிபெருக்கி said...

nan pencila aga muyarchi panran ana itha msga en cell phonuku anupchu utturanga irunthalum nan meendum nan muyarchikiran

ஒலிபெருக்கி said...

nan muyarchi seikiran anal intha pencil karayakoodatha enna cheyya

ஜெகதீசன் said...

அவந்திகா,
இடுகைக்கு நன்றி.
நானும் பென்சிலாக இருக்க முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

அவ்..அவ்..அவ்..அவ்....

நான் பென்சிலா....நினைச்சிப் பார்க்கவே முடியலையே...முதல்ல உடம்ப குறைக்கனும்...ஹி..ஹி...

கண்மணி/kanmani said...

valid points.very nice

காட்டாறு said...

எங்கேயோ போய்ட்டீங்க அவந்தி! எப்படிம்மா.. எப்படி.. இப்பிடில்லாம் சிந்திக்கிறீங்க?


//பங்காளி... said...
அவ்..அவ்..அவ்..அவ்....

நான் பென்சிலா....நினைச்சிப் பார்க்கவே முடியலையே...முதல்ல உடம்ப குறைக்கனும்...ஹி..ஹி...
//
வீட்டுல குட்டீஸ் இருந்தா, நீங்க பென்சிலா இருந்தா சீவி சீவியே குறைச்சிருவாங்களே... ;-)

Yogi said...

தாங்க முடியலயே தங்கச்சி .. அவ்வ்வ்வ்வ்வ்

நானும் பென்சிலாக இருக்கப் பாக்குறேன்.

ஆமா.. அரும்புகள்-ல ரக்சாபந்தன் வாழ்த்து சொன்னதுக்கு அண்ணன் ஏகப்பட்ட சாக்லேட் அனுப்பியிருந்தேனே துன்னு காலிபண்ணிட்டியா?? மிச்சம் எதாவது இருக்கா??

அபி அப்பா said...

நான் பென்சில் மாதிரி தான் இருப்பேன் அவந்தி:-))

மங்களூர் சிவா said...

இது கொஞ்ச நாள் முன்னாடி இங்கிலீஷ்ல வந்த ஃபார்வர்ட்.

நல்லா translate பண்ணியிருக்கீங்க.

எழுத எழுத காலியாயிடும் அதை சொல்ல விட்டுபுட்டீங்களே

மங்களூர் சிவா

ரசிகன் said...

ரொம்பா நாளைக்கு அப்புறம்,என்னிய இப்புடி ஃபீல் பண்ண வச்சிட்டயே...எனக்கு அழுவாச்சியா வருது..
சூப்பரப்பு.......

வைதேகி said...

பென்சில்லோட Core கிராஃபைட் வைரத்தோட இன்னொரு வடிவம்.நம்மளோட Core-ம் அதுமாதிரிதான இருக்கணும்? இந்த பாயிண்ட்டயும் சேத்துக்கங்க.