Selection Process - பாகம் I- இங்க..
4 பாட்டில் கோக் குடிச்சு, சாக்லேட், பிஸ்கட்ஸ் எல்லாம் முடிஞ்சது. ஆனா இன்னும் ஒருத்தர கூட செலெக்ட் பண்ணலை.
பாப்பா- சரி கேப்டன் முடிவு ஆயாச்சு, அடுத்து சொல்லு.
பாப்பா- சரி கேப்டன் முடிவு ஆயாச்சு, அடுத்து சொல்லு.
நான் - முடிவாயாச்சா?..இது எல்லாம் ஒவர் பாப்பா...
பாப்பா - என்ன ஒவர்..நான் ஆல்ரவுண்டர் தெரியுமா...ஆல் ரவுண்டர்னா எல்லாம் தெரிஞ்சு இருக்கனும் அவ்வளவு தானே.. பேட்டிங்க பங்காளி அங்கிள் பண்ணுவாரா, பவுளிங்க ஃபாஸ்ட் பவுளர் அங்கிள் பண்ணுவார்.
நான் - பாஸ்ட் பவுளர் ஜெயிக்கிற டீம தான் ரெப்ரஸண்ட் பண்ணுவாராம்.
பாப்பா - அதுனால?
நான் - அவர் ஆஸ்திரேலியாவ ரெப்ரஸண்ட் பண்ணப் போராராம்.
பாப்பா - ஓ..இப்படி வேற ஒன்னு நடக்குதா...ஆமா... அவர் வந்தா மட்டும் யார் அவர எடுக்க போரா?..நேத்து எங்க வீட்டுக்கு வந்து ஒரு பேக்கட் பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு ஓடி போயிட்டார். நேத்தே அவர் காத கடிச்சு இருப்பேன்...தப்பிச்சுட்டார்... டைகர் கிட்ட சொல்லீட்டு வந்து இருக்கேன்.. அவன் பார்த்துப்பான்...
நான் - இல்ல பாப்பா... எப்படியாவது அவர்கிட்ட பேசி நமக்காக விளையாட வைக்கனும்.
பாப்பா - அது எல்லாம் உனக்கு தெரியாது, நான் பார்த்துக்குறேன். அவர் வருவாரு பாரு. சரி தென்றல் அங்கிள் எனக்கு பதில் பவுளிங்க பண்ணுவார். அப்புறம் ஃபீல்டிங்க் ஆன்லைன் ஆவீஸ் பண்ணுவாங்க. சும்மா பறந்து பறந்து பிடிப்பாங்க பந்த. இப்ப சொல்லு நான் ஆல் ரவுண்டர் தானே.
நான் - ஆமா, ஆமா...இப்படி பேசறதுக்கே உனக்கு ஆல் ரவுண்டர் பட்டம் குடுக்கனும்.
பாப்பா - முதல்ல பேட்டிங்க்கு ஆள் எடுக்கலாம். ரெண்டு பேர் ஆல்ரெடி எடுத்தாச்சு இல்ல...மத்தவங்கள பார்க்கலாம்.
நான் - ரெண்டு பேர் எடுத்தாச்சா?..யாரு?
பாப்பா- ஏய் என்ன கின்டலா? அதான் நானும்..என்னோட பை பேட்ஸ்மேனும்.
நான் - சரி சரி....அடுத்து மணிகண்டன் அண்ணா
பாப்பா - அவர் ஒழுங்கா பிரேக்டீஸ் வரனும்.. அடிக்கடி காணாம போயிடரார்.
நான் - சரி, அடுத்து சிபி அண்ணா..
பாப்பா- என்ன உங்க ஊர் காரர்னு சப்போர்ட்டா அந்த கதை எல்லாம் இங்க நடக்காது.
நான் - என்ன நீ?... பேர் குடுத்தவங்கள தான் சொல்றேன். ஆமா...இரு இரு..எனக்கு அஸிஸ்ட் பண்ண தான் உன்னை அனுப்ப சொன்னேன்?...இது என்ன?.. உனக்கு நான் அஸிஸ்ட் பண்ணீட்டு இருக்கேன்
பாப்பா - இது புரியவே ஒரு நாள் ஆகியிருக்கா.? இதுல இருந்தே தெரியலை? யார் ஸ்மார்ட்னு?
நான் - சரி பாப்பா...நீ தான் ஸ்மார்ட். ஒத்துக்குறேன்.
பாப்பா- குட்..சரி எனக்கு பசிக்குது..Pizza வேனும்.
நான் - வேண்டாம் பாப்பா பிஸ்ஸா எல்லாம் வேண்டாம். நான் உனக்கு பருப்பு சாதம் நெய் போட்டு தர்ரேன்.
பாப்பா - பருப்பு சாதமா?... ஹ்ம்ம்ம்...சரி...ஊட்டி விடனும் சரியா?
நான் - ஓ, கண்டிப்பா.
பாப்பா - சரி ஜூலி ஜூலி ன்னு ரொம்ப பந்தா விடுவீங்க இல்ல.. அதுவும்
சாப்டா தான் நான் சாப்பிடுவேன். ஜூலிய பார்த்து..அய்யே..என்ன இது?..இது தான் ஜூலியா..எங்க டைகர் கால் ஹட் கூட இல்லை. இதுக்கு தான் இவ்வ்வ்வ்ளோ பந்தாவா?... நாயப் பாரு... எங்க டைகர் வந்தா..உன் ஜூலி அவ்ளோ தான்.. சாப்பாடு ஊட்டி விடு. அதுக்கும் போடு
சாப்டா தான் நான் சாப்பிடுவேன். ஜூலிய பார்த்து..அய்யே..என்ன இது?..இது தான் ஜூலியா..எங்க டைகர் கால் ஹட் கூட இல்லை. இதுக்கு தான் இவ்வ்வ்வ்ளோ பந்தாவா?... நாயப் பாரு... எங்க டைகர் வந்தா..உன் ஜூலி அவ்ளோ தான்.. சாப்பாடு ஊட்டி விடு. அதுக்கும் போடு
நான்- பாப்பா ஜூலி பருப்பு சாப்பாடு எல்லாம் சாப்பிடாது.
பாப்பா - எங்க டைகர் நான் என்ன சாப்பிடறனோ அது எல்லாம் சாப்பிடும். உங்க ஜூலி சரியில்லை. எனக்கு தெரியாது. ஜூலியும் சாப்பிடனும்.
ஜூலி பருப்பு சாதம் போட்டா..என்னை ஒரு மாதிரி பார்த்து முறைக்கறா. இந்தப்பக்கம் பாப்பா வாய்ல சாப்பாடு அடக்கீட்டு ' அதுக்கும் போதனும்" னு ஒரே பிடிவாதம். ஜூலிய தடவி விட்டு சாப்பிட சொன்னா...பவ் பவ் னு என்னை திட்டு திட்டுன்னு திட்டறா. ''ப்ளீஸ் ஜூலி பாப்பாக்காக சாப்பிடு' ன்னு சொன்னேன், அவ என்னடான்னா, " மத்த நாள் எல்லாம் எனக்கு வெறும் பால் சாதம் போட்டு கொன்னுட்டு, இன்னைக்கு உன் ப்ரெண்டு வந்துட்டான்னு எனக்கு நெய் சாதம் போடறியா'' ன்னு முறச்சுட்டு முகத்த திருப்பறா என் நிலமை தெரியாம.
நான் - பாப்பா, அவ சாப்பிட மாட்டேங்குறா..நீ Good girl நீ சாப்பிடு ன்னு ஒரு வழியா ஊட்டி விட்டேன்.
பாப்பாக்கு ஒரே சந்தோஷம் ஜூலி Bad Girl னு சொன்னது. ''இனி மேல் ஜூலி ஜூலின்னு சொல்லக் கூடாது சரியா?.. அப்ப என் டைகர் Good Boy தானே.''
நான் - ஆமா.
பாப்பா - சாப்பிட்டு முடிச்சதும். அவந்தி எங்கேயாவது வெளியே கூட்டீட்டு போ. செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணி போர் அடிக்குது.
சரி பாப்பா Appu Ghar போலாம்.
தொடரும்...