Saturday, June 30, 2007

விலை மதிக்க முடியாத சொத்து..


ஒரு தடவை காட்டுக்குள்ள ஒரு பெண் நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப விலை மதிக்க முடியாத மாணிக்க கல் கீழ கிடச்சதாம். அதை எடுத்து அவங்க பேக்ல போட்டுட்டாங்க. அடுத்த நாள் வேற ரெண்டு பேர் அந்த காட்டுக்கு வந்தாங்க.

வந்தவங்க ரொம்ப பசிக்கிறதா சொல்லவே, இந்த அம்மா அவங்க கிட்ட இருந்த சாப்பாட்ட அவங்களுக்கு கொடுத்துட்டாங்க. அப்ப அந்த மாணிக்க கல் பார்த்துட்டு ஒருத்தர், அவருக்கு குடுக்க சொல்லி அந்த அம்மா கிட்ட சொன்னாராம். அந்த அம்மாவும் கொஞ்சமும் யோசிக்காம அந்த கல் எடுத்து குடுத்துட்ட்டாங்க. அப்ப மற்றொருத்தர பார்த்து அந்த அம்மா உங்களுக்கு குடுக்க என் கிட்ட ஒன்னும் இல்லையேனு சொன்னாராம்

அப்ப அவர் சொன்னாராம் இல்லம்மா உங்க கிட்ட இந்த மாணிக்கத்தை விட விலை மதிக்க முடியாத ஒரு சொத்து இருக்குது, அது குடுங்க போதும்னு சொன்னாராம்.

அந்த அம்மா ''என் கிட்ட இருந்தது அந்த கல் ஒன்னு தான், அதுவும் குடுத்துட்டனே'' ன்னு சொன்னாங்களாம்.

அதுக்கு அவர் ''என் நன்பர் கேட்ட உடனே அந்த மாணிக்க கல்ல எடுத்து குடுத்துட்டீங்களே, இந்த மனசு யாருக்கு வரும்...அதனால அந்த மனச எங்கிட்ட குடுத்துடுங்கன்னு சொன்னாராம்.