ஒரு தடவை காட்டுக்குள்ள ஒரு பெண் நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப விலை மதிக்க முடியாத மாணிக்க கல் கீழ கிடச்சதாம். அதை எடுத்து அவங்க பேக்ல போட்டுட்டாங்க. அடுத்த நாள் வேற ரெண்டு பேர் அந்த காட்டுக்கு வந்தாங்க.
வந்தவங்க ரொம்ப பசிக்கிறதா சொல்லவே, இந்த அம்மா அவங்க கிட்ட இருந்த சாப்பாட்ட அவங்களுக்கு கொடுத்துட்டாங்க. அப்ப அந்த மாணிக்க கல் பார்த்துட்டு ஒருத்தர், அவருக்கு குடுக்க சொல்லி அந்த அம்மா கிட்ட சொன்னாராம். அந்த அம்மாவும் கொஞ்சமும் யோசிக்காம அந்த கல் எடுத்து குடுத்துட்ட்டாங்க. அப்ப மற்றொருத்தர பார்த்து அந்த அம்மா உங்களுக்கு குடுக்க என் கிட்ட ஒன்னும் இல்லையேனு சொன்னாராம்
அப்ப அவர் சொன்னாராம் இல்லம்மா உங்க கிட்ட இந்த மாணிக்கத்தை விட விலை மதிக்க முடியாத ஒரு சொத்து இருக்குது, அது குடுங்க போதும்னு சொன்னாராம்.
அந்த அம்மா ''என் கிட்ட இருந்தது அந்த கல் ஒன்னு தான், அதுவும் குடுத்துட்டனே'' ன்னு சொன்னாங்களாம்.
அதுக்கு அவர் ''என் நன்பர் கேட்ட உடனே அந்த மாணிக்க கல்ல எடுத்து குடுத்துட்டீங்களே, இந்த மனசு யாருக்கு வரும்...அதனால அந்த மனச எங்கிட்ட குடுத்துடுங்கன்னு சொன்னாராம்.
16 comments:
//அந்த அம்மா ''என் கிட்ட இருந்தது அந்த கல் ஒன்னு தான், அதுவும் குடுத்துட்டனே'' ன்னு சொன்னாங்களாம்.
அதுக்கு அவர் ''என் நன்பர் கேட்ட உடனே அந்த மாணிக்க கல்ல எடுத்து குடுத்துட்டீங்களே, இந்த மனசு யாருக்கு வரும்...அதனால அந்த மனச எங்கிட்ட குடுத்துடுங்கன்னு சொன்னாராம்.
//
நல்ல கதை!
இந்த மனசு எல்லாருக்கும் வேணும்!
நீங்க எப்போ ஸ்டாராகப் போறீங்க?
நல்லாருக்கு கதை. ரசிச்சேன்.
அண்ணா போனா போகுதுன்னு நான் எழுதறதெல்லாம் படிச்சுட்டு இருக்காங்க....உங்க சப்போர்ட் எல்லாம் இருந்தா போதும்..அதுவே நான் ஸ்டார் ஆன மாதிரி தான்:-))
தேங்கஸ் ராகவன் அண்ணா.. டெல்ஃபின் aunty..
ம்...நல்லாருக்கு...அவந்திம்மா..என்ன இன்னைக்கு திடீர்ன்னு போஸ்ட்..எல்லாம்..ரிலாக்ஸ்டா இருந்தீயோ?
thanks lathumi akka
சாதாரணமா நான் படிக்காமயே கிண்டலடிச்சுட்டு போறதுதான் வழக்கம்! ஆனா இன்னிக்கு படிச்சம்ப்பா! நல்லா கதைவுடுற ஸாரி கதை சொல்றப்பா! சரி இதை உங்க குட்டீஸ் பிளாக்லயும் போடலாம்ல!!! ஜஸ்ட் ஒரு ஐடியாதான்!!
நல்லாருக்கு கதை
கதை நல்லாருக்கு...
ஹாலிடே எல்லாம் எப்படி போச்சு...அது பத்தி எளுதலாம்ல...யோசிங்க அவந்திகா!
அருமையான கதை ;)))
தேங்க்ஸ் தம்பி அண்ணா..
பங்காளி அண்ணா...லீவ் எல்லாம் நல்லா இருந்துச்சு.. ஆனா again வந்து oven உக்காந்துட்டு இருக்கேன்...
நாம எல்லாம் லூசுங்க அண்ணா..:-))
தேங்கஸ் கோபி அண்ணா..
நல்லாருக்கு...
கர்ணன் பரம்பரையா இருப்பாங்களோ?
படமும் கதையும் சூப்பர்.
ம்ம்ம்..நல்லாருக்கு!
என்ன தங்கச்சி.. ரொம்ப நாளா ஆளை காணோம்..?
கதை சூப்பர்! இன்னும் எழுதும்மா!!
Post a Comment