தில்லி வந்த பின்னால earth quake னு சொல்றாங்களே அது எப்படி இருக்கும்னு experiance பண்ணி பார்க்கனும்னு ஆசை. ஆனா வெளியே சொன்னா லூசுன்னு நினச்சுடுவாங்கன்னு யார் கிட்டேயும் சொல்லலை.
இன்னைக்கு காலையில 4.42 மணிக்கு ட்ரம்ஸ் சத்தம் மாதிரி சத்தம் கேட்டுச்சு. பிறகு கட்டில் நல்லா ஆடுது...நான் ஏதோ கனவுன்னு நினச்சுட்டு இருந்தேன். ஆனா கதவெல்லாம் டப்புன்னு அடிச்சது. ஜூலி பயங்கரமா கத்த ஆரம்பச்சிருச்சு....அப்புறம் தான் ஹை பூகம்பம் வந்துடுச்சுன்னு நினச்சுட்டு இருந்தப்பவே அம்மா எழுப்பினாங்க..சீக்கிறம் எழுந்திரு..எல்லாரும் வெளியே நிக்கறாங்கன்னு. ஆனா நமக்கு 4.45 மணிக்கு தானே தூக்கம் நல்லா வரும். ''போம்மா..எனக்கும் தெரியும்'' னு திரும்பி படுத்திட்டேன். பெட்ல படுத்திட்டே ஸ்க்ரீன தள்ளி பார்த்தா, கீழ கார்டென்ல எல்லாரும் குழந்தைகள வச்சுட்டு நின்னுட்டு இருக்காங்க. நல்ல குளிர் 8 டிகிரி, 9 டிகிரி குளிர். பக்கத்துல இருக்கறவுங்க எல்லாம் கீழ இறங்கி வாங்கன்னு எங்களைப் பார்த்து கத்தீட்டு இருந்தாங்க. Dont use the lift..use the stairs and come down fast னு பக்கத்து வீட்டு aunty கத்தல். ஆனா எனக்கு ஒரே சிரிப்பு. ஹை நாங்களும் பூகம்பத்தை அனுபவிச்சுட்டோம்னு.
''என்னது ஹையா....என்ன திமிறா, பேவகூஃப் லடுக்கி'' ன்னு கீழ் வீட்டு பாட்டி திட்டு... ஹா ஹா ஹா....
ஆனா ஏதாவது பெருசா நடந்திருந்தா...நல்ல வேலை ஒன்னும் ஆகலை....
உண்மையிலேயே திரில்லிங்கா இருந்துச்சு....
9 comments:
கேக்கறப்வே அதிருதில்ல.....ஏம்மா அவந்திகா.. இம்புட்டு தகிரியமா ஒனக்கு.. ?
:)
நமக்கு நடக்குற வரைக்கும் அது எப்படா நடக்கும் என்று தான் இருக்கும். நடந்தா தான் தெரியும்.
பதிவான அளவு ரொம்ப கம்மி என்று தானே போட்டு இருந்தார்கள். 4 சரியா... கிரிக்கெட் மேட்ச ஆரம்பிக்கும் முன் சொன்னாங்க...
சுனாமிய பாக்கனும் என்று ஏதும் ஆசை இருக்கா.. இருந்தா சொல்லுங்க.. எங்க ஊருக்கு வரும் போது உங்களுக்கு சொல்லி அனுப்புறேன்.
ரசிகன், சிவா அண்ணா
இப்ப பயமா தான் இருக்கு....
இன்னைக்கு தூக்கமே வராது..
aunty
இதுவே title aa வச்சிருக்கலாம்
" சும்மா அதிருச்சு இல்ல" ன்னு
After Shocks னு சொல்லுவாங்களே...
அது வருமா..?
//இரண்டாம் சொக்கன்...! said...
After Shocks னு சொல்லுவாங்களே...//
அண்ணா..சிலர் சொன்னாங்க... அனா எனக்கு தெரியலை..இன்னைக்கு வந்தா சொல்றேன்
இது இப்போதைக்கு போதும். :))
//நான் நடந்தாலே பூகம்பம் மாதிரிதான். அதிரும்ல...//
இது ரொம்பச் சரி... ச்சும்மா, அதிருச்சுல்ல... ;-)
அவந்திகா, தில்லியவே அதிர வெச்சிட்டயே!!!
இங்க நியூசிலாந்துக்கு வா. அடிக்கடி பூகம்பம் வரும். நானும் புதுசுல பயந்தேன். இப்ப எல்லாம் பழகிப்போச்சு.
Not much shake, but rattled with lot of sound for about 10 seconds. Then nothing. Though I experienced quite lot when I was in Assam, waken up in early morning was a new experience.
-Arasu
Post a Comment