அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
- மகாகவி பாரதியார்
21 comments:
சூப்பரா படத்தை மாத்தி, தேசியக் கொடியை பறக்க விட்டீங்களே. கலக்கல் அவந்திம்மா....இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
thanks Delhine aunty..
thanks kaataaru akka...nalla irukkaa..:-))
ச்சும்மா..ச்சும்மா.......சூப்பர் டா. ;-)
வந்தே மாதரம்!
அய்யோ அக்கா...
சும்மா சும்மா சூப்பரா.. அப்ப நிஜமாவே சூப்பர் இல்லையா...
:-)))..இதுவும் சும்மா சும்மா...
தேங்கஸ் அக்கா
இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்...அவந்திகா
ஜீவா அண்ணா, பங்காளி அண்ணா நன்றி
உங்களுக்கும் இனிய சுதந்திர நாள் வாழ்த்துக்கள் !
SUPER POST AVANTHIKA.
PL do not mind my commenting inEnglish.
Happy greetings on this Independance day.
God Bless you.
ஆஹா, புல்லரிக்குது.
வாழ்த்துகள் கண்ணே!
இளைய தலைமுறை எழுக எழுகவே!
தேங்க்ஸ் வல்லிம்மா..கண்ணன் அண்ணா, Surveysen அண்ணா
wow...great avanthika...
வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்.
அம்மனி. என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
லட்சுமி அக்கா, இளவரசன் சீனு அண்ணா நன்றி..
சீனு அண்ணா ரொம்ப நாள் கானோம் உங்களை..:-)
குட்டீஸ் சூப்பர்
தமிழ் கீதம் நல்லா இருக்கு
//சீனு அண்ணா ரொம்ப நாள் கானோம் உங்களை..:-)//
என்னம்மா பன்னுறது. வழக்கத்துக்கு மாறா ஆபீஸ்ல திடீர்னு வேலை கொடுத்திட்டாய்ங்களே!!!
தேங்க்ஸ் கண்மணி அக்கா
வாழ்த்துக்கள்...தங்கச்சி!
என்ன இருந்தாலும் 'ஜீலி'யை பார்க்கமுடியலையேனு ஒரு 'வருத்தம்'தான்..
ஹை..ஹை..அண்ணா..ஜூலிய கேக்கறீங்களா தேங்கஸ் அண்ணா...
போடறேன்...celebration முடிஞ்ச அப்புறம்..:-))
Post a Comment