அடுத்த நாள் காலையில இரு பாறைகளுக்கு நடுவில ஒரு நரி நடக்க முடியாம படுத்துட்டு இருந்துச்சு. அது எப்படி இது உயிர் வாழும், உணவுக்கு என்ன பண்ணும் னு வியாபாரிக்கு ஒரே ஆச்சிரியம். அங்கேயே உட்கார்ந்து நரி என்ன பண்ணுதுன்னு பார்க்கனும்னு உட்கார்ந்தார். அப்போ ஒரு சிங்கம் வாயில உணவு கொண்டு வந்து நரிக்கு முன்னாடி போட்டுட்டு போயிடுச்சு. நரியும் அந்த உணவ சாப்டுட்டு தூங்க ஆரம்பிச்சுறுச்சு. சாயந்திரம் மீண்டும் அந்த சிங்கம் வந்து உணவ நரிக்குப் பக்கத்துல போட்டுட்டு போக..நரிக்கு அந்த இடத்த விட்டு நகர வேண்டிய அவசியம் இல்லை.
இத பார்த்துட்டு ஊருக்கு வந்து பிறகு வியாபாரியிடம் எல்லாரும் கேட்டாங்க நீ என்ன தெரிஞ்சுட்டேன்னு...அதுக்கு வியாபாரி...கடவுள் கிட்ட நாம நம்மள சுத்தமா ஒப்படச்சுட்டா அவர் பார்த்துப் பார் நம்ம தேவைகளை ன்னு சொன்னார்.
அதுக்கு அங்க வந்த அவரது குட்டி மகன் சொன்னான், இதுக்கு இப்படி அர்த்தம் இல்லை, நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நரி மாதிரி அடுத்தவர் உழைப்புல வாழக்கூடாது. நம்ம முயற்சி செய்து அடுத்தவர் உதவி கேட்டு வாழறது தப்பில்லை.
நாம யாராயிருந்தாலும், நமக்கு எத்த விதமான பலம் இருந்தாலும் அத அந்த சிங்கம் மாதிரி அடுத்தவர்க்கு உதவவும் பயன் படுத்தனும்னு சொன்னான். அப்ப தான் நமக்கு திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்னு சொன்னான்.
8 comments:
test
பாட்டி சொன்ன கதைகள்..ங்ற மாதிரி நம்ம அவந்திகா சொன்ன கதைகள்னு தனியா தொகுத்து வெளியிடலாம்...
நல்ல கதை அவந்திகா...
பங்காளி அண்ணா வாங்க... நீங்களாவது வந்தீங்களே...தேங்கஸ் அண்ணா
அவந்திகா,
நல்ல கதை.. வழ்த்துக்கள்
\\குட்டி மகன் சொன்னான், இதுக்கு இப்படி அர்த்தம் இல்லை, நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நரி மாதிரி அடுத்தவர் உழைப்புல வாழக்கூடாது. \\
நல்ல கதை அவந்திகா ;-)
நல்ல கதை அவந்தி! இருங்க படிச்சுட்டு வாரேன்:-)
ஜெகதீசன், கோபி அண்ணா, அபி அப்பா..தேங்கஸ்..
அண்ணா..படிச்சுட்டு தான் கமென்ட் போடனும்....
பெரிய போஸ்ட் தான் படிக்க மாட்டேங்கரீங்க
நான் சின்னதா தான் எழுதறேன்... இனி மேல் உங்களுக்கு டெஸ்ட் வைக்கனும்...
படிச்சாச்சு! டெஸ்ட்க்கு ரெடி! உங்க முதல் பின்னூட்டமே டெஸ்ட்ன்னு போட்டிருக்கே:-))
Post a Comment