Friday, August 31, 2007

நம் மதிப்பு - கதை


ஒரு தடவை ஒரு பெரிய பேச்சாளர் ஒரு கவுன்சலிங்க சென்டர்க்கு வந்தவுங்க கிட்ட பேச வந்தார். அப்ப அவர் கையில் ருபாய் நோட்டு ஒன்னு இருந்து. இந்தப் பணம் யாருக்கு வேனும்னு கேட்டார். எல்லாருமே கை தூக்கினாங்க.

அப்புறம் கையில இருந்த பணத்த கசக்கிட்டு கேட்டார். இப்ப யாருக்கு இந்த பணம் வேனும்னு. அப்பவும் எல்லாரும் கைய தூக்கினாங்க.

அப்புறம் கீழ போட்டு ஷூவால தரையில் தேச்சார். இப்ப கேட்டார். இப்பவும் எல்லாரும் கை தூக்கினாங்க.

அப்புறம் சொன்னார் அவர் '' பாருங்க என்ன ஆனாலும் ரூபாய் நோட்டுக்கு இருக்குற மதிப்பு குறையறதில்லை. அதுக்கு அவ்வளவு மதிப்பு''.

அது மாதிரி தான் நாமும். நம்மை யாரு அவமானப்படுத்தினாலும், உதாசீனப்படுத்தினாலும் நாம சோர்ந்து போறோம். நமக்கு மதிப்பு இல்லைனு நினச்சு மனசு வருத்தப் படறோம். ஆனா நமக்கு இருக்குற மதிப்பு மத்தவங்களால அழிக்க முடியாது. அது எப்பவும், யாராலும் குறையாது. நமக்கு வேண்டியவங்களுக்கு நாம எப்பவும் உயர்ந்தவங்க, நம்மளை வேண்டாம்னு சொல்றவுங்களைப் பற்றி நாம கவலைப் பட வேண்டியது இல்லைனு சொன்னார்

Thursday, August 30, 2007

வெற்றியும் தோல்வியும் -பீர்பால் கதை


பீர்பால் கிட்ட எப்பவும் தோத்துட்டே இருந்த அக்பர், ஒரு நாள் எப்படியாவது பீர்பால முட்டாள ஆக்கி தோக்கடிக்கனும்னு நினச்சார். குறுக்குவழியில பீர்பால தோற்கடிக்க நினச்சு மாளிகையில இருக்குற எல்லார்த்தையும் வர சொன்னார்.

ஒரு குளத்து கிட்ட போய் இப்ப எல்லாரும் குளத்துகுள்ள குதிச்சு வெளியே வர்ரப்போ ஒரு முட்டை எடுத்துட்டு வரனும்னு உத்தரவு போட்டார். முதலிலேயே பீர்பால் தவிர மற்ற எல்லார் கையிலேயும் ஒரு முட்டைய குடுத்து வச்சிறுந்தார். அதனால அவங்க குளத்தில் இருந்து வெளியே வர்ரப்போ கையில முட்டை எடுத்துட்டு வந்தாங்க.

குளத்தில் இருந்து வெளியே வந்த எல்லார் கையிலேயும் முட்டை இருக்குறத பார்த்த பீர்பார்லுக்கு அக்பர் தான் எதோ பண்றார்னு புரிஞ்சு போச்சு. அவரும் குளத்துல குதிச்சு வெளியே வந்ததும் மாளிகைக்குள்ள சேவல் மாதிரி பலமா கத்திட்டே போனார்.

அக்பருக்கு பயங்கர கோவம்.
''என்ன பீர்பால், எதுக்கு இப்படி கத்தறே, குளத்துக்குள்ள குதிச்சவுங்க எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துட்டாங்க, உன்னோட முட்டை எங்கே'' அப்படீன்னு கேட்டார்.

அதுக்கு பீர்பால் '' மன்னா! கோழி தான முட்டை போடும், நான் சேவல். குளத்துல குதிச்ச கோழிகள் எல்லாம் முட்டை எடுத்துட்டு வந்துடுச்சு. ஆனா நான் சேவல்ங்குறதுனால முட்டை கிடைக்கலை'' ன்னு சொன்னார்.

அக்பருக்கு எப்பவும் போல நோஸ் கட். மாளிகைல இருந்தவுங்களுக்கும் இந்த அக்பர் பண்ணின கூத்துனால நம்மையும் கோழின்னு சொல்லிட்டாரே ன்னு அவமானமா போச்சு.

பீர்பால் சொன்னார் " ஜெயிக்கிறது பெரிசு இல்ல எப்படி ஜெயிக்கிறோங்கிறது தான் பெருசு. தோக்கறதும் தப்பு இல்ல, தோல்வியிலும் ஒரு மரியாதை இருக்கனும்னு சொன்னார்"

Sunday, August 26, 2007

எதிரொலி


ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப பையன் கல் தடுக்கி கீழ விழுந்துட்டான். அடி பட்டதுனால ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுச்சு. பையன் சத்தம் வர்ர திசைய பார்த்து '' நீ யார்'' அப்படீன்னு கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கம் இருந்து '' நீ யார்'' னு கேட்டுச்சு.

பையன் '' நான் உன்னை அட்மையர் பண்றேன் '' னு சொன்னான். அந்தப் பக்கமும் அதே திரும்ப வந்துச்சு. பையன் '' நீ ஒரு கோழை" அப்படீன்னு சொன்னான். அதே திரும்ப கேட்டுச்சு.

பைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவங்க அப்பா கிட்ட கேட்டான். '' அது யாரு, நான் சொல்றது எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். அவங்க அப்பா சொன்னார் அது யாரும் இல்லை. அது எதிரொலி. ஆனா இது தான் வாழ்க்கையும்னு சொன்னார்.

அப்பா சொன்னார் '' நீ என்ன எல்லாம் கொடுக்கறியோ அது தான் திரும்ப கிடைக்கும். உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கோ அப்படித்தான் உன் கிட்ட பழகறவுங்களும் இருப்பாங்க. உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையை தான் கொடுக்கும். நீ உன்னை சுத்தி இருக்குறதை ரசிச்சேனா வாழ்க்கையும் ரொம்ப ரசுக்கும் படியா இருக்கும்'' னு சொன்னார்.

Tuesday, August 21, 2007

நன்றி மறப்பது நன்றன்று - கதை

ராஜாவும் ராமும் ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஒரு தடவை அவங்க ஒரு பாலைவணத்துல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்ப ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை வந்து ராஜா, ராம் கண்ணத்துல அடிச்சுட்டார்.

உடனே ராம் கீழ மணல்ல இப்படி எழுதினார்.'' என்னோட உயிர் நண்பன் இன்னைக்கு என்னை கண்ணத்தில் அறைஞ்சுட்டார்'' னு.

இன்னும் கொஞ்சம் நடந்து போயிட்டே இருந்தப்போ ஒரு Oasis வந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இறங்குனாங்க. அப்ப தண்ணிக்குள்ள ராம் மாட்டினதுனால, ராஜா, ராம காப்பாத்தினார். ராஜா காப்பாத்தினதுனால உடனே ராம் அங்க இருந்த ஒரு பாறையில இப்படி எழுதினார் '' என்னோட உயிர் நண்பன் என்னோட உயிர இன்னைக்கு காப்பாதிட்டான்'' னு.


அதுக்கு ராஜா கேட்டார், '' என்ன ராம் நான் அறைஞ்சப்ப மணல்ல எழுதினே....இப்ப இதையும் பாறையில எழுதற..'' ன்னு..

அதுக்கு ராம் சொன்னான் '' நமக்கு ஒருத்தர் பண்ண கெடுதல மணல்ல எழுதற மாதிரி மனசுல எழுதினா.. அது மன்னிப்புங்க்குற காத்து அடிச்சு எழுதினது அழிஞ்சு போகும்.. ஆனா ஒருத்தர் செய்த உதவியை நாம பாறையில எழுதற மாதிரி மனசுல வச்சுக்கனும். காலத்துக்கும் மறக்க கூடாது'' னு சொன்னார்.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

Sunday, August 19, 2007

மேகம் வகைகள் - மாமடஸ் மேகங்கள்

Nephology பத்தி உங்களுக்கு தெரியுமா..மேகம் பற்றி படிக்கிறது.. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.... டைம் இருக்கும் போது படிச்சுப் பாருங்க

நாங்க ரொம்ப விரும்பி பார்க்கிறது மேகங்கள்தான்...பார்க்க பார்க்க புதுசு புதுசா கதை சொல்ற மாதிரி தோனுமில்ல?. ஒவ்வொன்னும் ஒரு ஷேப்ல. மேகங்களைப் பார்த்து ஒவ்வொருத்தருக்கும் என்ன தோனுதுன்னு பேசிக்குவோம். எங்களுக்கு அது தான் entertainment.

மேகங்கள் பேசிக்கா 2 வகைகள் இருக்கு stratus clouds & cumulus clouds.. மேகங்களோட ஆல்டிட்யூட் பொருத்து இது இன்னும் நாலு பிரிவுகளா பிரிக்கபட்டிருக்கு.

இதுல ஒரு சப் டைப் தான் மாமடஸ் மேகங்கள் (mammatus clouds) . இதப் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா....பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கும்.. படங்களைப் பார்த்தா எடிட் பண்ணின மாதிரி இருக்கு இல்ல?.. ஆனா சுன்லைட் உள்ள இருந்து வர்ரதுனால இது அப்படி இருக்கு. பைகள் மாதிரி இருக்கும்.

பார்க்க ரொம்ப அழகா...ஆச்சிரியமா இருக்கு.. ஆனா சூரிய வெளிச்சத்துனால இது அப்படி இருக்கு.


















இந்த மாமடஸ் மேகங்கள் பொதுவா இடி, மின்னலுடன் கூடிய புயலுக்கு அப்புறம் உண்டாகும். புயலுக்கு அப்புறம் மேகங்கள் இப்படி இருந்தா இனி ஆபத்து இல்லைனு அர்த்தம். புயல் வராதாம்.
நல்லா இருக்கில்ல?.

Saturday, August 18, 2007

இவங்களுக்கெல்லாம் வயசானா எப்படி இருக்கும்..:-))











மேல பார்த்தது எல்லாம் ஜுஜ்ஜுபி

இப்ப நிஜம்...:-)))....சூப்ப்ப்ப்ப்ர் ஸ்டார்

நீங்க உருளைக் கிழங்கு சாப்பிடறவரா...


நீங்க உருளைக் கிழங்கு சாப்பிடறவரா...அப்ப இனி மே alert ஆ இருங்க...

California ல இருக்கும் Environmental Law Foundation (ELF) இந்த சிப்ஸ் தயாரிக்கும் ப்ராஸசின் போது கேன்சர் வரவைக்கும் சில கெமிக்கல்ஸ் உண்டாகுதுன்னு சொல்லி இருக்காங்க.

ஹை டெம்பரேச்சர் ல ஸ்டார்ச் ஃபுட்ஸ் பேக்( bake) பண்ணும் 'Acrylamide' அப்படீங்குற கெமிக்கல் போது உண்டாகுமாம். இந்த Acrylamide னால கேன்ஸர் வருமாம்.
இந்த warning போட்டு அதுக்கு அப்புறம் தான் சிப்ஸ் விக்கனும்னு சொல்லி இருக்காங்க.

அவங்க warning குடுத்திருக்கிற கம்பெனீஸ்

Lay's potato chip maker PepsiCo Inc.
Pringles maker Proctor & Gamble Co.
Cape Cod potato chip parent Lance Inc.
Kettle Chips maker Kettle Foods Inc.
நீங்களும் சாப்பிடாதீங்க..குட்டீஸ்க்கும் வாங்கிக் குடுக்காதீங்க....

Tuesday, August 14, 2007

வந்தே மாதரம்

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்




வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே

ஈனப் பறையர்க ளேனும் அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத் தராய்விடு வாரோ? - பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்

சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

- மகாகவி பாரதியார்

சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்ணாதீங்க

6 dont's after a meal

Don't smoke

Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).



Don't eat fruits immediately
Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal


Don't drink tea
Because tea leaves contain a high content of acid.This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.


Don't loosen your belt
Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.



Don't walk about
People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.









Don't sleep immediately
The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.




Saturday, August 11, 2007

வாழ்க்கை- சிங்கமும் நரியும்

ஒரு வியாபாரி வாழ்க்கைன்னா என்ன, ஜெயிக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும் விறும்பி யாராவது மகான பார்த்தா தெரிஞ்சுக்கலாம்னு ஒரு காட்டுக்குள்ள போனார். காலையில இருந்து இருந்து நடையா நடந்தும் யாரையும் பார்க்க முடியலை.

அடுத்த நாள் காலையில இரு பாறைகளுக்கு நடுவில ஒரு நரி நடக்க முடியாம படுத்துட்டு இருந்துச்சு. அது எப்படி இது உயிர் வாழும், உணவுக்கு என்ன பண்ணும் னு வியாபாரிக்கு ஒரே ஆச்சிரியம். அங்கேயே உட்கார்ந்து நரி என்ன பண்ணுதுன்னு பார்க்கனும்னு உட்கார்ந்தார். அப்போ ஒரு சிங்கம் வாயில உணவு கொண்டு வந்து நரிக்கு முன்னாடி போட்டுட்டு போயிடுச்சு. நரியும் அந்த உணவ சாப்டுட்டு தூங்க ஆரம்பிச்சுறுச்சு. சாயந்திரம் மீண்டும் அந்த சிங்கம் வந்து உணவ நரிக்குப் பக்கத்துல போட்டுட்டு போக..நரிக்கு அந்த இடத்த விட்டு நகர வேண்டிய அவசியம் இல்லை.

இத பார்த்துட்டு ஊருக்கு வந்து பிறகு வியாபாரியிடம் எல்லாரும் கேட்டாங்க நீ என்ன தெரிஞ்சுட்டேன்னு...அதுக்கு வியாபாரி...கடவுள் கிட்ட நாம நம்மள சுத்தமா ஒப்படச்சுட்டா அவர் பார்த்துப் பார் நம்ம தேவைகளை ன்னு சொன்னார்.

அதுக்கு அங்க வந்த அவரது குட்டி மகன் சொன்னான், இதுக்கு இப்படி அர்த்தம் இல்லை, நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நரி மாதிரி அடுத்தவர் உழைப்புல வாழக்கூடாது. நம்ம முயற்சி செய்து அடுத்தவர் உதவி கேட்டு வாழறது தப்பில்லை.

நாம யாராயிருந்தாலும், நமக்கு எத்த விதமான பலம் இருந்தாலும் அத அந்த சிங்கம் மாதிரி அடுத்தவர்க்கு உதவவும் பயன் படுத்தனும்னு சொன்னான். அப்ப தான் நமக்கு திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும்னு சொன்னான்.

Friday, August 3, 2007

கோபப் படாதீங்க யாரும்....


ராமனுக்கு எப்பவும் பயங்கர போபம் வரும்....அவங்க அப்பா இவன எப்படியாவது திருத்தனும்னு, ஒரு பை நிறைய ஆணிகளை குடுத்து, ராமன் கிட்ட "உனக்கு எப்ப எல்லாம் கோபம் வருதோ, அப்ப எல்லாம் சுவர்ல ஒரு ஆணி அடி'' ன்னு சொன்னார்.


முதல் நாள் சுவர்ல 37 ஆணி இருந்துச்சு. ஆனா நாள் ஆக ஆக அவன் கோபம் குறைய ஆரம்பிச்சது. ஏன்னா ஆணி அடிக்கிறது அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. அத்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டான். ஒரு நாள் சுத்தமா கோபம் குறைஞ்சு போச்சு.


அவங்க அப்பா கிட்ட போய் ரொம்ப பெருமையா சொன்னான். ''நான் இப்ப எல்லாம் ஆணியே அடிக்கிறதில்லை'' னு.
அவங்க அப்பா ராமன் கிட்ட'' ரொம்ப சந்தோஷம்...சரி இப்ப அடிச்ச ஆணி எல்லாம் பிடிங்கி எதுத்துடு'' ன்னு சொன்னார்.

ஆணி எல்லாத்தையும் சுத்தமா பிடுங்க ரொம்ப நாள் ஆச்சு. எல்லா ஆணியையும் பிடிங்கின அப்புறம் ராமன் அவங்க அப்பா கிட்ட போய் சொன்னான். அவங்க அப்பா ''ஆணி எல்லாம் சுத்தமா எடுத்திட்டே... ஆனா ஆணி அடிச்ச சுவற்றில ஏற்பட்ட ஓட்டைகள் உன்னால சரி படுத்த முடியுமா?.. முடியாதில்ல?...முதல்ல இருந்த அழகு இப்ப இருக்கா?.. அது மாதிரி தான் எத்தனை தடவை 'சாரி" சொன்னாலும், கோபத்துல விட்ட வார்த்தைகள திரும்ப வாங்க முடியாது, அதனால ஏற்பட்ட மக்கஷ்டமும் மாறாதுன்னு" சொன்னார்.


அதனால..குட்டீஸ்...அண்ணா....அக்கா.....யாரும் போபப்படாதீங்க.. அப்ப தான் நீங்களும் அழகா இருப்பீங்க...மத்தவங்ககிட்ட நம்ம ரிலேஷன்ஷிப்பும் அழகா இருக்கும்...
......:-))))))



"It is natural for the immature to harm others.

Getting angry with them is like resenting a fire for burning."

Thursday, August 2, 2007

அதிசியமான இரட்டை குழந்தைகள்

ஓஹியோ வில பிறந்த இரடை குழந்தைகள் கதை மாதிரி ஆதிசியமான, இன்டரெஸ்டிங்கான வேற கதை இருக்காது।

இந்த இரட்டை குழந்தைகள் பிறந்த போது அவங்கள வேற வேற குடும்பங்கள் அடாப்ட் பண்ணிட்டாங்களாம்।

இரண்டு பேருக்குமே ஜேம்ஸ் னு பேர்வச்சிருக்காங்க। ஆனா இரண்டு குடும்பத்துக்கும் தெரியாது।

பெரியவங்க ஆன அப்புறம் ரெண்டு பேருமே லா படிச்சாங்களாம்।

ரெண்டு பேருக்கும் மெக்கேனிக்கல் ட்ராயிங்கும் தட்டச்சு வேலையும் நல்லா வந்துச்சாம்।

ரெண்டு பேரோட மனைவி பேரும் லிண்டா.

ரெண்டு பேரும் அவங்க மகனுக்கு ஆலன் னு பேர் வச்சு இருக்காங்க.

ரெண்டு பேரும் முதல் மனைவிய டைவ்ர்ஸ் பண்ணீட்டு, இரண்டாவது கல்யாணம் பண்ணாங்க, அவங்க பேரு பெட்டி (betty)

முக்கியமானது அவங்க ரெண்டு பேரோட நாய்குட்டி பேர் டாய் (toy)..:-))

40 வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் சந்திச்சப்போ, அவங்க லைஃப்ல எல்லாமே ஒரே மாதிரி நடந்தது நினச்சு ஆச்சிரியமும் சந்தோஷமும் பட்டாங்களாம்

(Source: Reader's Digest, January 1980)